Rathakrishnan-Minister-001

வடக்கு மக்களின் அபிவிருத்திக்கு வடக்கு மக்களே தடை என்கிறார் இராதாகிருஸ்ணன்!

வடக்கு மக்களின் அவிருத்திக்கு வடக்கு மக்களே தடையாக இருப்பதாக கருதுகின்றேன். 182 பேருக்கு முதற் கட்டமாக நியமனம் வழங்குவதை எதிர்ப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்டமாக நியமனம் வழங்குவது தொடர்பாக கல்வி அமைச்சில் நேற்றுக் கலந்துரையாடப்பட்டது.

இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது;

இலங்கையில் கல்வியின் முதல் மாவட்டமாக காணப்பட்ட யாழ் மாவட்டம் தற்போது பின் தள்ளபட்டு உள்ளது.

இதனை அபிவிருத்தி செய்ய தலைமை அமைச்சர் ரணில் விக்கரமசிங்கவின் பரிந்துரைக்கு அமைய 10 ஆண்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கபடவுள்ளன.

அதில் ஒன்று வட மாகாண தொண்டர் ஆசிரியர் நியமனம் இந்த நியமனம் தொடர்பாக சுமார் 02 வருடங்களாக பேசி பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு முதற் கட்டமாக தொண்டர் ஆசிரியர்கள் 182 பேருக்கு நியமன கடிதம் வழங்கபட்டுள்ளது.

தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 494 வட மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதற்கு நேர்முக பரீட்சை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் 20 ஆம் திகதிகளில் கல்வி அமைச்சில் நடைபெற்று இரண்டாம் கட்டமாக நியமனம் வழங்க நவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளன.

அந்த நேர்முக பரீட்சை முடிந்ததும் உடனடியாக நியமனம் வழங்குவோம்.

அது வரை பொருத்து இருந்து எந்த பிரச்சனையும் இன்றி நியமனங்களை வழங்க ஒத்துழைக்க வேண்டும்.என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*