sumanthiran

அரசியல்கைதிகளை பொதுமன்னிப்பில் விடுவிக்க மைத்திரி சம்மதம் என்கிறார் சுமந்திரன்!

தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­களை பொது­மன்­னிப்­பில் விடு­விப்­ப­தில் ஆட்­சே­பனை எது­வும் இல்லை என அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்­ளார்.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், அந்­தக் கட்­சி­யின் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ ரன் தெரி­வித்­தார்.

கிளி­நொச்­சி­யைச் சேர்ந்த அர­சி­யல் கைதி­யான ஆனந்­த­சு­தா­க­ரின் விடு­தலை தொடர்­பில் கூட்­ட­மைப்பு என்ன நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளது என்று கேட்­ட­போதே அவர் இவ்­வாறு கூறி­னார்.
அவர் தெரி­வித்­த­தா­வது-

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ ன­வு­டன் நேற்­று­முன்­தி­னம் திங்­கட் கிழமை மாலை அலை­பே­சி­யில் பேசி­னேன். ஆனந்­த­சு­தா­க­ரின் விட­யத்தை பேச எடுத்­த­துமே, இது தொடர்­பில் தனக்­குத் தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்­றும், அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை தொடர்­பில் பொது­வா­கப் பேசி­னார்.

தண்­டனை பெற்ற அர­சி­யல் கைதி­களை பொது­மன்­னிப்­பில் விடு­விப்­ப­தற்கு ஆட்­சே­பனை இல்லை என்­றும் அரச தலை­வர் மைத்­திரி குறிப்­பிட்­டார். அவ்­வாறு விடு­விக்­கக் கூடிய கைதி­கள் ஒவ்­வொ­ரு­வர் தொடர்­பி­லும் அறிக்கை சமர்­பிக்­கு­மாறு கேட்­டுள்­ளேன். இன்­னும் அந்த அறிக்கை கிடைக்­க­வில்லை என­வும் அரச தலை­வர் மைத்­திரி தெரி­வித்­தார்.

தண்­டனை பெற்­றுள்ள அர­சி­யல் கைதி­கள் ஒவ்­வொ­ரு­வர் தொடர்­பி­லும், தீர்ப்பு வழங்­கிய மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­யின் அறிக்கை, சட்­டமா அதி­ப­ரின் அறிக்கை, நீதி அமைச்­ச­ரின் அறிக்கை என்­ப­வற்­றையே அரச தலை­வர் கோரி­யி­ருக்­கின்­றார். முன்­னைய நீதி அமைச்­சர் விஜ­ய­தாச அதைத் தாம­தப்­ப­டுத்தி வந்­தார். புதிய நீதி அமைச்­ச­ருக்கு இந்த விட­யத்தை கூறி அத­னைத் துரி­தப்­ப­டுத்­து­மாறு கேட்­டுள்­ளோம் – என்­றார்.

2015ஆம் ஆண்டு தடுப்­பில் உள்­ள­வர்­க­ளின் பெயர் விப­ரங்­களை வெளி­யிட வேண்­டும் என்று அரச தலை­வ­ரி­டம் கோரிக்கை விடுக்­கப்­பட்­ட­போ­தும், இது தொடர்­பில் நீதி அமைச்­சின் அறிக்கை கோரப்­பட்­டுள்­ளது என்று அரச தலை­வர் மைத்­திரி குறிப்­பிட்­டி­ருந்­தார். இது­வ­ரை­யில் அந்த விவ­ரங்­க­ளும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*