epdp

பருத்தித்துறையிலும் மலர்ந்தது ஈபிடிபி – த.தே.கூட்டமைப்பு கூட்டாட்சி!!

தமிழின விரோதிகளான ஈபிடிபியினருடன் இணைந்து ஆட்சியமைத்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரசபையினையும் கைப்பற்றியிருப்பதாக தெரியவருகிறது.

பருத்தித்துறை நகரசபைக்கு புதிய தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் தமிழ் தேசியக் கூட்மைப்பு சார்பாகப் போட்டியிட்ட ஜோசப் இருதயராஜா 7 வாக்குகளைப் பெற்று தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

பிரதித் தவிசாளராக தமிழ் தேசியக் கூட்மைப்பு சார்பாகப் போட்டியிட்ட நெல்சன் மதினி தெரிவு செய்யப்பட்டார்.

யாழ்.மாநகரசபையினையும் ஈபிடிபியின் துணையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி ஆட்சியமைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*