s-300

விமானப்படைக்கு அதிநவீன விமான எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை!

விமானப்படைக்கு அதிநவீன விமான எதிர்ப்பு ஏவுகணைகளைக் கொள்வனவு செய்வது தொடர்பாக, பாதுகாப்பு அமைச்சு ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராடர்களினால் கட்டுப்படுத்தப்படும், விமான எதிர்ப்பு ஏவுகணைத் தொகுதி ஒன்றை விமானப்படைக்கு கொள்வனவு செய்வது குறித்தே பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தெரியவருகின்றது.

S – 300 மற்றும் Buk 27 ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்வனவு செய்வது தொடர்பிலேயே பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஏவுகணைகளை, விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்களுக்கு எதிராகப் பயன்படுத்த முடியும் எனவும், இவைகள் சில வகை வழிகாட்டல் மற்றும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை தடுக்கும் திறன் கொண்டவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*