Logeshwaran

வடக்கு ஆளுநராக தமிழராம்!

வடக்கு மாகாண சபையின் ஆளுநராக தமிழர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மாகாணங்களின் ஆளுநர்களை இடமாற்றம் செய்யவுள்ள அரசு, வடக்கு மாகாணத்திற்கு மேல் மாகாண சபையின் ஆளுநராக கடமையாற்றிய கே.சி.லோகேஸ்வரனை நியமிக்கவுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஆளுநரொருவரின் சேவைக்காலம் ஒரே இடத்தில் மூன்று வருடங்கள் என வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதுள்ள அனைத்து மாகாணங்களின் ஆளுநர்களையும் இடம் மாற்றம் செய்யவேண்டிய காரணத்தினாலேயே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த வகையில் மேல்மாகாண ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன் வட மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*