Perarivalan

பேரறிவாளன் மருத்துவமனையில்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள பேரறிவாளன் சிறுநீரக நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமையால் சிகிச்சைக்காக சென்னை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோய் காரணமாக வேலூர் அடுக்கம்பாறை அரச வைத்தியசாலை மற்றும் சென்னை பொது அரச வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில், மேலதிக சிகிச்சைகள் எடுத்துக்கொள்ளப்படவேண்டுமென அடுக்கம்பாறை அரச வைத்தியசாலை வைத்தியர்கள் பேரறிவாளன் பரிந்துரை செய்துள்ளனர். இதன்காரணமாக சென்னை புழல் சிறைக்கு தன்னை மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு பேரறிவாளனால் மனு ஒன்றினையும் கையளித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் 13ஆம் திகதி வேலூர் சிறையிலிருந்து புழல் சிறைக்கு பேரறிவாளன் மாற்றப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன.

எனினும் அவருக்கு மீண்டும் சிறுநீரக தொற்று பாதிப்பு ஏற்பட்டமையால் சென்னை பொது அரச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேரறிவாளன் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 26 வருடங்கள் சிறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிணை வழங்கப்பட வேண்டும் என அவர் தொடர்ந்தும் கோரிக்கைகளை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*