paplow

இலங்கையில் பத்து வருடங்களுக்கு ஒருமுறை வன்முறை நிகழ்கின்றது – ஐ.நா விசேட ஆணையாளர்!

இலங்கையில் பத்து வருடங்களுக்கு ஒருமுறை வன்முறை நிகழ்கின்றது என்பதை வரலாறு சுட்டிக்காட்டுகிறது என உண்மை மற்றும் மீள் நிகழாமைக்கான ஐ.நா.வின் விசேட ஆணையாளர் பப்லோ டி கிறீவ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் வன்முறைகள் மீள நிகழாது தடுப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் ஒவ்வொரு பத்துவருடங்களுக்கு ஒருமுறை வன்முறைகள் வரலாறு காண்பித்து நிற்பதாக தெரிவித்த அவர், இதன்மூலம் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அந்தவகையில், அண்மையில் கண்டியில் நிகழ்ந்த வன்முறைகள் இந்த விடயத்தில் ஆழமாக சிந்தித்து மீண்டும் இவ்வாறு நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை நாட்டிலுள்ள தலைவர்களுக்கு காத்திரமாக உணர்த்தி நிற்கின்றது.

மேலும், காணாமல் போனோர் அலுவலகம் உட்பட எதுவுமே போதிய முன்னேற்றத்தைக் காண்பித்து நிற்கவில்லை எனக் கூறிய அவர், நிலைமாறு நீதிப் பொறிமுறைகள் இன்னமும் நம்பிக்கை தரும் முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டியுள்ளது என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*