maithripala-sirisena

அவசரகாலச் சட்டம் நீங்கியது!

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அவசரகால சட்டத்தை நீக்கும் அறிக்கையில் அரச தலைவர் மைத்திரி பால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார்.

கடந்த வாரங்களில் கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து, கடந்த 6 ஆம் திகதி முதல் அவசரகால சட்டம் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில், இந்தச் சட்டத்தை ரத்து செய்வதற்கான அரசிதழ் அறிவிப்பில் அரச தலைவர் நேற்று இரவு கையெழுத்திட்டுள்ளார்.

கடந்த 13 நாள்களாக நடைமுறையில் இருந்த அவசரகால சட்டத்தை ரத்துச் செய்யும் குறித்த அரசிதழ் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டது என்று அரச அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*