FifthSpecial Session of Human Rights Council, Geneva, Palais des Nations, June11-18, 2007 Copyright UNPHOTO/VIROT date: June 11, 2007
here on picture:
General feature during Human Rights Council
FifthSpecial Session of Human Rights Council, Geneva, Palais des Nations, June11-18, 2007 Copyright UNPHOTO/VIROT date: June 11, 2007 here on picture: General feature during Human Rights Council

இலங்கை விவகாரம் தொடர்பிலான மனித உரிமை பேரவை விவாதம் நாளை!

இலங்­கையின் மனித உரிமை விவ­காரம் குறித்த காலக்­கி­ரம மீளாய்வு தொடர்­பான விவாதம் நாளை வெள்­ளிக்­கி­ழமை ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையில் நடை­பெ­ற­வுள்­ளது.

இதில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் முதலில் உரை­யாற்­ற­வுள்­ள­துடன் இதன்­பின்னர் உறுப்பு நாடுகள் தமது நிலைப்­பா­டு­களை அறி­விக்­க­வுள்­ளன.

அத்­துடன் இலங்­கையின் சார்பில் ஜெனி­வா­விற்­கான வதி­விடப் பிர­தி­நிதி இந்த விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­ற­வுள்ளார். இதன்­போது இலங்­கை­யா­னது 2015ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணைக்கு அமை­வாக செயற்­பட வேண்­டு­மெ­னவும் அந்தப் பிரே­ர­ணையின் பரிந்­து­ரை­களை அமுல்­ப­டுத்த வேண்­டு­மென்றும் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் வலி­யு­றுத்­த­வுள்­ள­துடன் இலங்கை விசேட பொறி­மு­றை­யொன்றை மேற்­கொண்டு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை வழங்­க­வேண்­டு­மென வலி­யு­றுத்­த­வி­ருக்­கின்றார்.

அதே­போன்று சர்­வ­தேச நாடு­களின் பிர­தி­நி­தி­களும் இலங்கை தொடர்­பான இந்த விவா­தத்தில் கலந்து கொண்டு இலங்­கை­யா­னது பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுத்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நீதியை நிலை­நாட்­ட­வேண்­டு­மென வலி­யு­றுத்­த­வுள்­ளனர்.

இதே­வேளை இந்த விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­ற­வுள்ள ஜெனி­வா­விற்­கான இலங்கை பிர­தி­நிதி இலங்­கை­யா­னது கடும் சவால்­க­ளுக்கு மத்­தியில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நம்­ப­க­ர­மான முறையில் நீதியை வழங்க நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரு­வ­தாக தெரி­விக்­க­வி­ருக்­கிறார்.

கடந்த பெப்­ர­வ­ரி­மாதம் 26ஆம் திகதி ஆரம்­ப­மான ஜெனிவா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் எதிர்வரும் 23ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இலங்கை தொடர்பான மற்றுமொரு விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி மனித உரிமை பேரவையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*