பார்வைகள்

மகிந்த சேர்த்த கூட்டம் – நிலாந்தன்

40773615_1078070729038355_5635615838225563648_n1

கடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மகிந்த மீண்டும் தனது பலத்தைக் காட்ட முயன்றிருக்கிறார். இவ்வாண்டு அவர் இவ்வாறு தன் பலத்தைக்காட்டுவது இது மூன்றாவது தடவை. கடந்த மே தினத்தன்று காலிமுகத்திடலை அவர் தனது ஆதரவாளர்களால் நிறைத்தார். அது ஒரு பிரமாண்டமான சனத்திரள். அதன்பின் கடந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தலில்  அவர் தன் பலத்தைக்காட்டியிருந்தார். இந்த வரிசையில் பார்த்தால் கடந்த புதன்கிழமை அவர் ஒழுங்குபடுத்திய ஆர்ப்பாட்டம் ஏறுமுகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அது அப்படி அமையவில்லை. கொழும்பிற்கு வெளியிலிருந்து ஆயிரக் கணக்கானவர்களை அவர்களால் திரட்ட ...

Read More »

ஆர்ப்பாட்டத்தின்போது மஹிந்த, கோட்டபய அணியின் மக்கள் பலத்தைக் கண்டு அமெரிக்கா அச்சமடைந்ததா அல்லது ஆதரவா – அ.நிக்சன்

dav

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சி இன்று புதன்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட அறிவிப்புத் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதிகளுக்குச் செல்வதை கொழும்பில் உள்ள அமெரிக்கப் பிரஜைகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்கத் தூதரகம் தமது ரூவீற்றர் தளத்தில் அறிவுறுத்தியுள்ளது. பாரிய அளவில் மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல் மூலம் மஹிந்த ராஜபக்ச ...

Read More »

முல்லைத்தீவில் நடந்த ஆர்ப்பாட்டமும் முந்தநாள் நடந்த பேரவைக் கூட்டமும் – நிலாந்தன்

40343017_2117766535106921_8671123883509678080_n1

மாகாவலி அதிகாரசபைக்கெதிராக முல்லைத்தீவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆர்ப்பாட்டம் அரசாங்கத்தை எவ்வளவு தூரத்திற்கு அசைக்குமோ தெரியவில்லை. ஆனால் 2009 மேக்குப் பின்னரான புதிய தமிழ் எதிர்ப்பு வடிவம் குறித்துச் சிந்திக்கும் எல்லாத் தரப்புக்கும் அதில் கற்றுக்கொள்வதற்கு முக்கிய பாடங்கள் உண்டு. சனச்செறிவுள்ள யாழ்ப்பாணத்தில் அப்படியோர் ஆர்ப்பாட்டத்தைச் செய்வது வேறு. முல்லைத்தீவில் அதைச் செய்வது வேறு. மூவாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அதில் கலந்துகெண்டார்கள். இந்த வகை ஆர்ப்பாட்டங்களில் முதலாவதும் பெரியதுமான ஓர் ஆர்ப்பாட்டம் 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழகமும் ...

Read More »

சம்பந்தன் பக்கத்திலா பந்து? – நிலாந்தன்

sam

யாழ்ப்பாணத்தில் மிகக்குறைந்தளவு விற்கப்படும் ஒரு பத்திரிகை மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக சர்ச்சைகளை ஏற்படுத்தும் ஒரு பத்திரிகை அச்சர்ச்சைகளின் மூலமாகவே விற்பனைப் பரப்பைக் கூட்டிக்கொள்ளும். ஆனால் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகை இதுவரை பல சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. ஆனால் அதன் விற்பனை மட்டம் இன்று வரையிலும் லாப இலக்கை எட்டவில்லை. மிக விசித்திரமான ஓர் ஊடகவியல் யதார்த்தம் இது. அப்பத்திரிகையின் ஆசிரியர் வித்தியாதரன் “மின்னல்” என்ற பெயரில் எழுதும் பத்திகளை பெரும்பாலான அரசியல்வாதிகள் அதிகாலையிலேயே வாசித்து விடுகிறார்கள். இப்பத்தியில்தான் கோத்தபாய ஜனாதிபதியாக வருவதை ...

Read More »

கடலட்டை விவகாரம்; வடமராட்சி கிழக்கில் நடப்பது என்ன?!

kadaladdai

வடமராட்சி கிழக்கில் கொள்ளை போகிறது நம் கடல்வளம். தடுக்க வேண்டிய அதிகாரிகள்தான் இதற்குத் துணைபோகிறார்கள் என்றால் கடற்றொழில் சங்கங்கள் – சமாசம் – சம்மேளனத்தின் பிரதிநிதிகளும் – ஏன் நம் மீனவர்கள் சிலர்கூட இந்த வளச்சுரண்டலுக்கு உடந்தையாக இருப்பதுதான் வேதனை.

Read More »

ஈழத்தின் சிவசேனை; பின்னணியில் யார்? – நிலாந்தன்

chachy

சாவகச்சேரியில் பசுவதைக்கு எதிராக ஈழத்தின் சிவசேனை என்று அழைக்கப்படும் அமைப்பின் தலைவரான மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்த கருத்துக்கள் பெரும் வாதப் பிரதிவாதங்களை கிளப்பியுள்ளன. இது இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் உரிய பூமி என்றும் இவ்விரு மதப்பண்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள் இங்கிருந்து வெளியேறிவிட வேண்டுமென்ற தொனிப்படவும் அவர் உரையாற்றியிருக்கிறார். சட்ட விரோதமாக மாடுகளைப் பிடிப்பது, கொல்வது என்பது ஒரு பிரச்சினைதான். அது ஒரு சட்டப்பிரச்சினை. ஆனால் அதை மத நோக்கு நிலையிலிருந்து வியாக்கியானம் செய்வதையும், அது தொடர்பில் சமூகங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தூண்டும் விதத்தில் கருத்துத் தெரிவிப்பதையும் தமிழ்த்தேசிய நோக்கு ...

Read More »

சாதி, சமய சிக்கலுக்குள் சிக்குகிறதா தாயகம்? – வித்தகன்

vit

கட்டுரைக்குள் நுழையும் முன்…! இலங்கை முஸ்லிம்களின் வரலாறு கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. வணிக நோக்கில் வந்த அராபியர்கள் இங்கு குடியேறி – திருமண உறவு மூலம் தமிழர்களுடன் கலந்தனர். ஆரம்பத்தில் தம்மை இஸ்லாமியர்கள் என்றே தம்மை அழைத்தனர். போர்த்துக்கேயர் அவர்களை “மூர்ஸ்” (moors) என அழைத்ததைத் தொடர்ந்தே முஸ்லிம்கள் தனி இனமாக தம்மை வரித்துக் கொண்டனர்.

Read More »

முள்ளிவாய்க்காலில் சர்ச்சை; நடந்தது என்ன? – பி.மாணிக்கவாசகம்!

May 18

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட தினமாகிய மே 18 ஆம் நாள் நாட்டைஅரசியல் உணர்வு ரீதியாக இரு துருவங்களாக்கியிருக்கின்றது. இன ஐக்கியத்திற்கும், அமைதி, சமாதானத்தி;ற்கும் வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட யுத்த முடிவு தினமானது, அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறிவிட்டது.

Read More »

விவசாயத்தில் கை வைத்த நல்லாட்சி அரசு!

vithakan

பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக உள்ளது விவசாயிகளின் நிலைமை. “விவசாயக் குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வந்தேன்” எனப் பெருமையுடன் கூறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ விவசாயிகள் பற்றிக் கிஞ்சித்தேனும் சிந்தித்துப் பார்க்கவில்லை. அப்படிப் பார்த்திருந்தாரேயானால், எரிபொருள்களின் விலையை – குறிப்பாக 44 ரூபாவுக்கு விற்பனையான மண்ணெண்ணெயை 101 ரூபாவாக அதிகரித்திருக்க மாட்டார்.

Read More »

“நான் காயத்தோடையும் பிள்ளைய தேடித்திரிஞ்சன்…“!

kaanavi

பல இடப்பெயர்வுகளைச் சந்தித்து அனேக மருத்த உபகரணங்களையும் இழந்து வன்னிப் போரின் இறுதிநாட்களிலும் முள்ளிவாய்க்கால் கனிஸ்ரவுயர்தர பாடசாலையில் இயங்கிக்கொண்டிருந்த மருத்துவமனை அது. அங்கு மண் போட்டால் மண் விழாத அளவிற்கு நோயாளிகள் நிறைந்து வழிந்தனர்.

Read More »