பார்வைகள்

சோரம்போன கலைஞரும்; விலைபோகாப் பெருந்தலைவனும்!

கலைஞரும்-தலைவரும்

வீழ்ந்துபட்டுக் கிடக்கும் ஈழத்தமிழர்களதும் உலகத் தமிழர் மக்களதும் உணர்வுகளைச் சீண்டிப்பார்க்கும் கலைஞர் கருணாநிதி அவர்களின் விசுவாசிக்களாகச் சொல்லிக்கொள்கின்ற ஒரு அணி சமூக வலைத்தளங்கள் ஊடாக தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களையும் ஈழவிடுதலைக்காக கொடுக்கப்பட்ட உயிர்விலைகளையும் கொச்சைப்படுத்தி மிகக் கேவலமான பரப்புரை நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக மேற்கொண்டுவருகின்றது. புலத்தில் உள்ள மக்களது போராட்டங்களைக் கைவிடுமாறு ‘சோ’வினுடைய ‘துக்ளக்’ இதழுக்கு தமிழின விரோதி கருணா வழங்கியிருந்த நேர்காணல் ஒன்றினை துணையாக கையிலெடுத்து கலைஞரின் பரிவாரக் கும்பல் எமது இனவிடுதலைப் போரைக் கொச்சைப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் மிகத் ...

Read More »

மேடையில் ஆடும் 13வது திருத்தச் சட்டம்!

mahinda-raja

இன்று இலங்கையில் எங்கும் பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் பற்றியே பேச்சு! இது அரசியலமைப்பின் ஒரு திருத்தச் சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு 20 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இப்போது அது பிறந்த போது கிடைக்காத பரபரப்பும் முக்கியத்துவமும் பெற்றுள்ளது. ஆட்சி பீடத்திலுள்ள கட்சிகளிடையெ கருத்துக்கள் வெடித்து ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன. விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திரமுன்னணி, ஜாதிக ஹெல உறுமய என்பன 13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் தமிழீழம் அமைவதற்கு அடித்தளமாகிவிடும் எனத் துள்ளிக்குதிக்கின்றன. இடதுசாரிகள், முஸ்லிம்காங்கிரஸ் ஆகியன 13வது திருத்தச் சட்டத்தில் ...

Read More »

மாகாண சபைத் தேர்தலும்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்!

leader

பல வருடங்களாக நடத்தப்படாது இழுத்தடிக்கப்பட்டு வந்த வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவது போன்ற ஒரு தோற்றப்பாடு மஹிந்த அரசினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உத்தியோக பூர்வமாக தேர்தல் நடத்தப்படுவது தொடர்பாக எவ்வித அறிவித்தலும் வெளியிடப்பட்டிராத போதிலும் பல்வேறு தரப்பினராலும் தேர்தல் தொடர்பான ஒரு வித வெப்பம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, ஜாதிக ஹெல உறுமய, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் உட்பட்ட பல இனவெறி அமைப்புக்களாலும் 13ஆவது அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள மாகாண சபைகளுக்கான பொலிஸ், காணி அதிகாரங்கள் பறிகப்படாமல் தேர்தல் ...

Read More »

‘மே 18’ – மகாவம்சக் கொடூரத்தின் இரத்த சாட்சியம்!

leader

வங்கக்கடலை வருடி வந்த உப்புக்காற்று முள்ளிவாய்க்கால் மண்ணைத் தொட்ட போது குருதி வாடையிலும் கந்தக நெடியிலும் சிக்கித் திக்கித் திணறுகிறது. ஓங்கியடித்த ஆழி நீர்ப்பரப்பும் தன் அலைக் கரங்களை ஒடுக்கிவிட்டு விம்மி விம்மித் தணிகிறது. பார்க்குமிடமெங்கும் பிணக்குவியல்கள்: காணுமிடமெங்கும் குறை உயிரில் முனகும் ஜீவன்கள்; எரிந்து கருகிய கூடாரங்கள்; இடிந்து சிதைந்த குடியிருப்புக்கள்; சிதறிக் கிடக்கும் ஆடைகள்; பாவனைப் பொருட்கள். ஒரு புறம் இறந்து கிடக்கும் உடல்கள் மீதும், இறந்து கொண்டிருக்கும் மனிதர்கள் மேலும் இரக்கமின்றி ஏறி ஓடும் இராணுவத்தினரின் உழவு இயந்திரங்கள்; மறுபுறம் ...

Read More »

மே 18இல் உறுதி கொள்வோம்!

leader

மே 18, உலகத் தமிழின வரலாற்றில் மறக்க முடியாத நாள். தமிழினம் காலங்காலமாக சந்தித்துவந்த அவலங்களுக்கெல்லாம் மகுடம் வைத்தாற் போல அமைந்த மிகப் பெரிய இன அழிப்பின் அடையாளமான நாள் அது. உலக அரங்கில் நினைத்துப் பார்க்க முடியாத மிகப் பெரிய சாதனைகளுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக, ஒரு இனத்தின் விடுதலைக்காக எவ்வளவு முடியுமோ அவ்வளவு அர்ப்பணிப்புக்கள் எமது தேசிய இனவிடுதலைப் போராட்டத்தில் நிகழ்ந்தேறியிருக்கின்றன. மிக நேர்த்தியான கட்டமைப்பைக் கொண்ட தமிழீழ விடுதலைப் போராட்டம் மக்களின் முழுமையான ஆதரவு பலத்துடன் முப்பது ஆண்டுகளைக் கடந்தும் தனது விடுதலைப் ...

Read More »

மஹிந்த சொல்லே மந்திரம்; தடு(டம்)மாறுகிறது கூட்டமைப்பு!

mahinda_sampanthan1

கடந்த 60 ஆண்டுகளாக பல்வேறு பரிமாணங்களுடாக வளர்ச்சி பெற்றுவந்த தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் ஆயுத வடிவெடுத்து உலகம் வியக்கும் வண்ணம் உச்ச கட்டத்தை எட்டி நின்றது. அக்காலகட்டத்தில் தமிழ் மக்களின் விடியலை நோக்கிய வீரமிகு தலைமையாக தமிழீழ விடுதலைப்புலிகள் திகழ்ந்தனர். எனினும் தேசிய, சர்வதேச சக்திகள் காரணமாக தமிழ் மக்களின் வலிமை மிக்க ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் வைத்து தோற்கடிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்பு ஏற்பட்ட வெற்றிடம் காரணமாக தமிழ் மக்கள் தங்கள் உரிமைப் போராட்டத்தைக் கைவிட்டுவிடவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பை ...

Read More »

பிரதேசவாதத்தை தூண்டிய உதயன் : பத்திரிகையை எரித்த வன்னி மக்கள்!

leader

தவறுகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் தமது கருத்துக்களுடன் உடன்படாதவர்களைப் பழிவாங்கவும் துரோகிகள், அரச கைக்கூலிகள் போன்ற முத்திரைகளைக் குத்துவதற்கு பெரும்பாலானவர்கள் தயங்குவதில்லை என்பதற்கு உதாரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகின்ற உதயன் பத்திரிகை திகழ்ந்திருக்கின்றது என்ற கசப்பான உண்மை நடைபெற்றிருக்கின்றது. ஊடகங்களில் பேசப்படாத ஆனால் பேசப்படவேண்டிய ஒரு கவலை தரும் விடயம் 20-03-2013 அன்று முல்லைத்தீவில் நடைபெற்றிருக்கின்றது. உதயன் பத்திரிகைப் பிரதிகள் முல்லைத்தீவில் தீவைத்து எரிக்கப்பட்டமையே குறித்த சம்பவமாகும். உதயன் பத்திரிகை எரிக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியவுடன் உடனடியாக இராணுவப் புலனாய்வாளர்கள் அல்லது இராணுவத்தினர் தான் ...

Read More »

தமிழக மாணவர் எழுச்சியும் சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகளும்!

leader

மிகப்பெரிய எழுச்சியின் வடிவமாக தமிழகம் திரண்டிருக்கிறது. இனம் ஒன்றின் விடுதலைக்கான இறுதி எழுச்சியாக மாணவர் சக்தி நிமிர்ந்தெழுந்த சம்பவங்கள் பல்வேறு விடியல் பெற்ற தேசங்களில் அமைந்திருக்கின்றன. அந்த வகையில் ஈழத்தமிழினத்திற்காக உரிமையுடன் திரண்டெழுந்தது தமிழக மாணவர் சமூகம். தமிழகத்தின் எழுச்சி குறிப்பாக தமிழக மாணவர் சமூகத்தின் எழுச்சி மத்திய பிராந்தியத்தையே உலுக்கிப் பார்க்கும் அளவிற்கு வல்லமை கொண்டதாக வீரியம் பெற்றுவிடும் நிலையை அடைவதற்கு முன்பாகவே அதனை முற்றாக தடுப்பதற்கான நடவடிக்கையினை தமிழக அரசு மேற்கொண்டிருக்கின்றது. ஈழ விடுதலைப் போராட்டம் தொடங்கப்பட்டது முதல் போராட்ட அமைப்புக்களுக்கு ...

Read More »

எழுச்சி கொண்ட மாணவர் சக்திக்கு ஆதிக்க சக்திகள் பதில் சொல்ல வேண்டும்!

layolastudentshungerstrike

மிகப் பெரிய மனிதப் பேரவலம் நிகழ்ந்தமை தொடர்பில் சர்வதேச சமூகம் இலங்கையை நோக்கி கேள்வி எழுப்பத்தயாராகியிருக்கின்ற போதிலும் சம்பவங்கள் தொடர்பிலான நேரடிச் சாட்சியங்களாக வாழும் இலட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்கள் வாய் திறக்க முடியாத துப்பாக்கி முனைக்குள் முடங்கியுள்ளனர். ஆற்றாமை, பரிதவிப்பு, வேதனை அனைத்தையும் சுமந்து வாழும் ஈழத் தமிழ் சமூகம் தனக்கான நியாயத்தினைப் பெறுவதற்காக வாய் கூடத் திறக்க முடியாத நிலையில் ஏங்கியே வாழ்கிறது. ஆனாலும் கூட ஈழத்தமிழனின் கண்ணீருக்காக இரத்திற்காக உலகத் தமிழினம் எழுச்சி கொண்டிருப்பது ஈழத்தமிழ் மக்களுக்கு சற்று ஆறுதலைத் ...

Read More »

சிங்களத்தின் அதிகாரம் ஏதுமற்ற தீர்வுப் பிச்சையை ஏந்தப்போகிறோமா?!

leader

சூழ்ச்சிகள் மூலம் போரில் வென்றாலும் தமிழர்களின் ஒற்றுமையை சிதறடிக்க முடியாது என்பதை ஜெனீவாக் களம் பறைசாற்றியிருக்கின்றது. திட்டமிட்ட இன அழிப்பின் ஊடே போரில் வென்ற சிங்கள இனவாத அரசு முடிந்த அளவிற்கு தமிழ் மக்கள் மத்தியில் முரண்நிலைகளைத் தோற்றுவித்து பிரிவினைகளை ஏற்படுத்தவும் முற்பட்டது. இருப்பினும் சரியான நேரத்தில் அனைவரும் ஒரு சேரப் பயணிப்போம் என்பதனை தமிழர் பிரதிநிதிகள் தற்போது பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியிருக்கின்றனர். கடந்த ஜெனீவாக் கூட்டத் தொடரின் போது அரச தரப்பினைச் சேர்ந்த சிறுபான்மை அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் ஜெனீவா சென்று இனக்கொலைகளை நியாயப்படுத்தும் ...

Read More »