பார்வைகள்

விக்னேஸ்வரனை நோக்கி; தமிழக மாணவர்களிடமிருந்து ஒரு மடல்!

viki-tamilnadustudents

மதிப்புக்குரிய தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும், விக்கினேஸ்வரன் ஐயா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த வணக்கம்! இக்கரையிலிருந்து எழுதப்படும் முதல் மடல். தமிழக மாணவர்களின் மொத்தக் குரலாகவும் ஈழ விடுதலை மாறியிருக்கின்ற நிலையில், அந்த வேட்கை மீது வீசப்பட்ட கல்லெறிக்கு காரணம் கேட்கும் உரிமை மடல்.2009 ஆம் ஆண்டில் ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட மிகமோசமான படுகொலை இந்த நூற்றாண்டின் மீதே கறை வீசி போயிருக்கிறது. ஜனநாயகம், மனித உரிமை, மனித நேயம் பேசும் ஒவ்வொருவரினது எலும்புக் கூட்டையும் இயலாமை என்ற பலயீனம் மோசமாய் தாக்கியிருக்கிறது. அந்த அவமானத்திலிருந்து மீண்டுவர அல்லது ...

Read More »

தடம்புரளும் தலைமை வேட்பாளர்!

viknesh

“இலங்கையில் காணப்படுகின்ற நிலைமை கணவன் மனைவிக்கு இடையிலான பிரச்சினை போன்றது. இருவரும் மோதிக்கொள்கின்ற போதும், சில சமயங்களில் சமரசமாவதுண்டு. ஆனால் பக்கத்து வீட்டார் யாரும் கணவன் மனைவியை விவாகரத்து செய்துக் கொள்ளுமாறு வலியுறுத்துவது நியாயமில்லை. இலங்கை விடயத்தை தமிழக அரசியல் கட்சிகள் டென்னிஸ் மைதானத்தில் விளையாடப்படும் பந்தினை போல பயன்படுத்துகின்றன, அவ்வாறு அடித்து விளையாடுவதால், இலங்கை தமிழ் மக்களே தொடர்ந்தும் பாதிப்படைகின்றனர்”இப்படிச் சொன்னவர் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ அல்ல; அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுமல்ல; அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுமல்ல! இனிய வார்த்தைகளை அள்ளிக்கொட்டி எம்மை இன ஒடுக்குமுறையாளர்களுக்கு ...

Read More »

‘சம்பிக்கவின் போர்ப்பிரகடனம்’ – மாரீசன்

leader

“சிங்கள மக்களும் இராணுவமும் மூன்றாம் கட்டப் போருக்கு தயாராக வேண்டும். நாம் இன்னுமொரு நந்திக்கடலைச் சந்திக்கவும் தயாராகவுள்ளோம்”,இப்படியொரு போர்ப்பிரகடனத்தை வெளியிட்டிருப்பவர் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலரும் இலங்கை அரசாங்கத்தின் முக்கிய அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க. இப்படியான இனவெறிக் கோஷங்களைத் தமிழினம் காலம் காலமாகவே சந்தித்து வந்துள்ளது. போர் முடிந்து நான்கு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் சிங்கள மக்களை இனவெறியர்களாகவே தக்க வைப்பதில் சளைத்துப் போகாது செயற்பட்டுவரும் மூன்றாம் தர அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர். தமிழர்களின் தோலை உரித்து கால் செருப்பு தைக்கப்போவதாகச் ...

Read More »

விடுதலைப்புலிகளை கூண்டில் ஏற்ற ஆணை கேட்கிறது கூட்டமைப்பு!?

vikneshwaran

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண சபைத் தேர்தலுக்கான தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்துள்ளது. அதாவது அவ் அமைப்பு தனது கொள்கைகளையும் எதிர்கால வேலைத்திட்டங்களையும் முன் வைத்து தமிழ் மக்களிடம் அவர்களின் ஆணையைக் கோரியுள்ளது.தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் இன்றைய போராட்டத்தின் தலைமை சக்தியாகவே எதிர்பார்க்கின்றனர். அவ்வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒவ்வொரு நகர்வும் இலட்சிய உறுதி கொண்டதாகவும், நேர்மையானதும் தூய்மையானதுமாக இருக்கவேண்டியது ஒரு கட்டாயமான தேவையாகும். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட ஒரு ...

Read More »

ஈழப் போராட்டத்தை விமர்சிக்கும் விக்னேஸ்வரனுக்கு திறந்த மடல்!

vikkileader

பெருமதிப்புக்குரிய விக்னேஸ்வரன் அவர்களுக்கு, முதலில் தங்களுக்கு எங்கள் வணக்கத்தையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறோம். எமது இனத்தின் விடுதலைக்கான போராட்டம் 60 ஆண்டுகளுக்கு மேலாக பல வெற்றிகளையும் நெருக்கடிகளையும் சந்தித்தபோதிலும் பரிணாம வளர்ச்சி ஊடாக ஒரு உயரிய இலக்கை நோக்கி நகர்ந்தது! எனினும் பல முனைகளிலும் விரிக்கப்பட்ட சதி வலைகள் காரணமாக இன்று நாம் ஒரு பின்னடைவுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். நீதி நிர்வாகத்துறையில் நீண்ட கால அனுபவமும் ஆற்றலும் நிரம்பிய தாங்கள் எமது உரிமைப் போரில் மாகாண சபைக்கு ஊடாக ஒரு ...

Read More »

போர்க்குற்றவாளியின் தலைமையில் நீதி விசாரணை! – விகர்ப்பன்

leader

இலங்கையை ஆசியாவின் அதிசயமாக மாற்றுவது என்பது ஜனாதிபதியின் மஹிந்த ராஜபக்ஷவின் சூளுரை! ஆனால் சில சந்தர்ப்பங்களில் இலங்கை உலகின் ஆச்சரியமாக மாறிவிடுவதுமுண்டு.அப்படியொரு உலக ஆச்சரியம் இப்போது அரங்கேறியுள்ளது. வெலிவேரியாவில் சுத்தமான குடிநீர் கோரி ஆர்ப்பாட்டம் செய்த பொதுமக்கள் மீது படையினர் கண்மூடித்தனமான துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டு கொலை வெறியாட்டம் நடத்தி மூன்றுவாரங்களாகிவிட்டன. இந்த ஆர்ப்பாட்டத்துடன் சம்பந்தப்படாத 2 மாணவர்களும் தொழிலுக்காக செல்ல பேருந்துக்காகக் காத்திருந்த ஒரு தொழிலாளியும் கொல்லப்பட்டனர். 56 பொதுமக்கள் படுகாயமடைந்தனர். வழமைபோலவே இராணுவத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படாமல் பாதுகாக்க அமைச்சர்களும், அரச தரப்பினரும் ...

Read More »

தேர்தல் வெற்றிக்காக சாம,பேத,தான,தண்டம்..! – புருஷோத்மன்

leader

கடந்த முறை மாகாண சபைத் தேர்தல்கள் இடம்பெறவிருந்த சந்தர்ப்பத்தில் எரிபொருள் உட்படப் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ஒவ்வொன்றாக உயர்த்தப்பட்டன. இது மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாகாணசபை வேட்பாளர்களுக்கு ஒரு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்திவிட்டது. விலைவாசி உயர்வுப் பிரச்சினையைப் பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியினர் தங்களைத் தோற்கடித்துவிடுவார்களோ எனப் பயந்தனர். எனவே அவர்கள் ஓடிப்போய் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் விலைவாசி உயர்வால் தேர்தலில் தங்களுக்கு ஏற்படக்கூடிய நெருக்கடிகள் பற்றி முறையிட்டனர்.அவர்களின் முறைப்பாடுகளை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த ஜனாதிபதி “தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என்பது எனக்குத் ...

Read More »

அப்பாவி உயிர்களை பலியெடுக்கும் ‘மஹிந்த சிந்தனை’ – மாரீசன்

mahinda-sinthanai-1024x682

வெலிவேரியாவில் குடிநீர் நச்சுப் படுத்தப்படுவதற்கு எதிராக மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் கொல்லப்பட்டனர். ஒருவர் மேலதிக வகுப்புக்குச் சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த மாணவர்! மற்றவர் கடைக்குச் சென்ற தனது தாயாரைக் காணவில்லையெனத் தேடிச் சென்ற இன்னுமொரு மாணவர். அடுத்தவர் பியகமவில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு வேலைக்குப் போவதற்காகக் காத்திருந்த ஒரு குழந்தையின் தந்தை!கொல்லப்பட்ட மூவருமே அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களல்ல! வழிப்போக்கர்கள்! மேலும் 54 பேர் காயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர். அதில் பெரும்பான்மையினர் இன்னும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அடைக்கலம் தேடி ...

Read More »

ஆபத்துக்களுக்குள்ளால் அவுஸ்திரேலியப் பயணங்கள்!

australia-kadal-payanam

இலங்கையில் வானொலியைத் திறந்தாலோ அல்லது தொலைக்காட்சியை இயக்கினாலோ அடிக்கடி வெளிவரும் விளம்பரம் ஒன்றுண்டு. “ஆபத்தான படகுப் பயணங்களை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு போகாதீர்கள். அங்கு உங்களுக்கு அகதி அந்தஸ்தோ வேலைவாய்ப்போ வழங்கப்படமாட்டாது”, இது அவுஸ்திரேலிய அரசாங்கம் விடுக்கும் அறிவித்தல். இப்படியான விளம்பரங்கள் வாராவாரம் பத்திரிகைகளிலும் வருவதுண்டு. எனினும் அடிக்கடி படகுகள் அவுஸ்திரேலியா நோக்கிச் செல்லும் சில அந்த நாட்டைச் சென்றடைவதும், சில விபத்துக்களில் அகப்பட்டு உயிரிழப்புக்கள் ஏற்படுவதும் இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் அண்மையில் கெவின் ரட் பிரதமராகப் பதவியேற்றதுமே இக் குடியேறிகள் தொடர்பாக ஒரு ...

Read More »

எலும்புக்கூடுகளின் வாக்குமூலம் – மாரீசன்!

goth-1024x682

இப்போதெல்லாம் எலும்புக்கூடுகள் பேச ஆரம்பித்துவிட்டன. மனிதக் குரல்கள் அடக்கியொடுக்கப்படும் அகோர நாட்களில் நியாயத்தின் குரலாக, உண்மையின் குரலாக மறைக்கப்பட்ட அநியாயங்களைக் கேள்விகளால் அம்பலப்படுத்தும் குரலாக எலும்புக்கூடுகள் மண்ணைப் பிளந்து கொண்டு எழுந்து நிற்கின்றன.அண்மையில் புத்தூர் வாதரவத்தையில் இராணுவக் காவலரண் ஒன்று அமைந்திருந்த பகுதிக்கு அண்மையில் ஒரு பற்றைக்குள்ளிருந்து ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. நீண்ட தலைமுடியும் அருகே கிடந்த ஆபரணங்களும் ஆடைகளும் மூலமாக அந்த எலும்புக்கூடு தான் ஒரு பெண் என்பதை சொல்லிவிட்டது. அது மட்டுமல்ல அது கிடந்த இடத்தினூடாக உரும்பிராயில் ராஜிக்கு எனன் ...

Read More »