பார்வைகள்

சிங்களத்தைக் குற்றக்கூண்டில் நிறுத்திய புனிதர்கள்!

maaveerar2

அன்புக்கும் மதிப்புக்குமுரிய எமது இனிய தமிழ் உறவுகளே! இன்று மாவீரர் நாள்! எமது உதிரத்தில் கலந்துவிட்ட மாவீரர்களை மணியொலித்து, சுடரேற்றி மலர் தூவி அஞ்சலித்து மனம் நெகிழும் நாள்! எமது விடுதலை வரலாற்றை ஒப்பற்ற பக்கங்களால் அலங்கரித்த எங்கள் மாவீரர்கள் எமது மண்ணின்விடுதலைக்காக தங்கள் விலை மதிப்பற்ற உயிர்களைத் தற்கொடை செய்து உயர்ந்து நிற்பவர்கள்! இவர்கள் கடந்து சென்ற பாதை மலர்கள் தூவிய நந்தவனமல்ல! புயலும் பெருமழையும், பூகம்பமும் அதிர்ந்த அலைகுண்டங்கள்! விடுதலை வேட்கை என்ற உன்னத இலட்சியத்தைக் கவசமாகக் கொண்டு இவர்கள் நெருப்பாறுகளை ...

Read More »

ஒரு வரலாற்று நாயகனின் பிறந்த நாள்!

leader (1)

எமது தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மண்ணில் வந்த மகத்தான நாள்! இன்று எமது தலைவனுக்கு வயது 59 ஏறக்குறைய 40 வருடங்கள் மண்ணின் விடுதலையையும் தமிழ் மக்களின் சுதந்திரத்தையும் தன் மூச்சுக்காற்றாக்கி, தன் ஒவ்வொரு அசைவிலும் வீரம், தியாகம் என்னும் நெய் ஊற்றி அவன் ஏற்றி வைத்த விடுதலை வேட்ககை ஒளி இன்னும் எமது மக்களின் நெஞ்சில் கொழுந்துவிட்டெரிகிறது – பெரும் காட்டுத்தீயாக! ஆம்! அது அணைக்க முடியாத இலட்சிய நெருப்பு! இலக்கு எட்டும்வரை மங்காது எரிந்து கொண்டெயிருக்கும். சிலர் வரலாற்றில் தமக்கென ...

Read More »

காணாமல் போனோர்; ‘வலி’ புரியுமா முரளிதரனுக்கு? – மாரீசன்!

murali

விளையாட்டுக்கள் மனங்களைப் பக்குவப்படுத்துகின்றன என்று சொல்வார்கள். அவை மனித மனங்களின் மனித நேயத்தை செழிப்படைய வைப்பதாகவும் ஒரு நம்பிக்கை உண்டு. ஆடுகளத்தில் வெற்றி ஒன்றை மட்டுமே இலக்காக வைத்து மோதும் இரு அணியினர் விளையாட்டு நிறைவு பெற்றதும், வென்றவர் தோற்றவர் என்ற பேதமின்றி கூடிக்களிப்பதும், விருந்துண்டு மகிழ்வதும் காலம் காலமாக பின்பற்றப்படும் வழமையாகும். அங்கு போட்டி எவ்வளவு கடுமையாக இருந்த போதிலும் நட்புறவு தொடர்ந்து பேணப்படும். விளையாட்டுக்களால் மனப்பக்குவம் ஏற்படுகிறது என்று இதனால் தான் சொல்வதுண்டு. அங்கு போட்டி எவ்வளவு கடுமையாக இருந்த போதிலும் ...

Read More »

‘கமரூன் பயணம்’ கூட்டமைப்பு செய்தது சரியா? – தமிழ்லீடர் ஆசிரியர்பீடம்!

cameron

இனவிடுதலைக்காக போராடும் இனங்களுக்கு நல்ல தலைமைகள் கிடைக்கும் போது தான் அந்த இனம் தனக்கான சுதந்திர இலக்கை நோக்கி நேர்த்தியாக பயணிக்க முடியும். நூற்றாண்டு கால தொன்மை வாய்ந்த தமிழினம் தற்போது வரையில் விடுதலை நோக்கிய கரடுமுரடான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது. மக்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு தலைமை தாங்கவேண்டிய தலைமை சக்திகள் அந்தப் போராட்டங்களுக்கே எதிராக செயற்படுகின்ற அவலம் நிறைந்த சம்பவம் தொடர்பில் தமிழ்லீடர் ஆராய முற்படுகின்றது. பொதுநலவாய மாநாட்டினை நடத்துவதற்காக அடம்பிடித்த இலங்கை அரசாங்கம் இறுதியில் அந்த மாநாட்டினை ஏன் நடத்தினோம் என்று விரக்தி ...

Read More »

‘கோயபல்ஸ்’ கோத்தாவின் ‘துப்பாக்கி மொழி’ – மாரீசன்

KOTA

இலங்கை வாழ்மக்களிடையே தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மூன்று மொழிகள் பாவனையில் உண்டு. இம் மும் மொழிகளை அனைவரும் கற்க வேண்டும் என ஊக்கம் கொடுப்பதற்கென்றே தனியான ஒரு நல்லிணக்க அமைச்சும் உண்டு. இவை இந் நாட்டின் மக்கள் மொழிகள் என்றே கூற முடியும். ஆனால் இலங்கையின் அதிகாரபீடத்தில் உள்ள சிலருக்கு இந்த மொழிகளில் சொல்லப்படும் விடயங்கள் புரியவதில்லை. அவர்களும் பேசுவது இந்த மொழிகளில் ஒன்று போல் தோன்றினாலும் அது அடிப்படையில் அப்படி இருப்பதில்லை. அவர்களுக்குத் தெரிந்த ஒரே மொழி ‘துப்பாக்கி மொழி’ விடுதலைப்புலிகள் ...

Read More »

தலைவரின் வீடு : இதய இருப்பிடத்தின் சரிவு!

thalaivar1

போர் நிறுத்தக்காலத்தில் வன்னிக்கு சென்றவர்கள் அங்கு மற்றெல்லா இடங்களையும் விட புதுக்குடியிருப்பில் சில அசாதாரண அனுபவங்களைச் சந்தித்திருக்கக் கூடும். வன்னியின் ஏனைய இடங்களைவிட புதுக்குடியிருப்பை மையப்படுத்திய பிராந்தியத்தில் புலிகளின் கண்காணிப்பு நடைமுறைகள் ஒப்பீட்டளவில் இறுக்கமாக இருந்ததை உணர்ந்திப்பார்கள். புலிகளுக்குத் தெரியாமல் ஓர் அணுகூட அசையமுடியாது என்ற நிலைமையே இப்பகுதியில் காணப்பட்டது. இத்தகைய கடுமையான கண்காணிப்புகளுக்கான காரணம், மக்கள் என்ற போர்வையில் ஆழ ஊடுருவும் படையணியைச் சேர்ந்தவர்களோ அல்லது அரச உளவாளிகளோ வேவுபார்க்க வரக்கூடும் என்ற முன்னெச்சரிக்கைதான். வன்னியின் ஏனைய இடங்களை விடவும் புதுக்குடியிருப்பு சார்ந்த இடங்களில் தமது ...

Read More »

‘விக்கினங்களைத் தரப்போகும் விக்னேஸ்வரன்’ – அரிச்சந்திரன்!

vtv

சாவும் அழிவுகளும் என முடிவடைந்த போரிற்கு பின்னர், தமிழ்மக்களின் தேசியத்திற்கான ஆணையாக தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு வழங்கப்பட்ட வெற்றியென்பது முக்கியமானது. “சலுகை அரசியலுக்காக” சாதாரணமாக விழவேண்டிய வாக்குகளே இந்தத்தேர்தலில் விழாமல் போனது தமிழ்மக்களின் உறுதிக்கு சான்று.இந்தவேளையில் இப்பத்தி முக்கியமான ஒரு விடயத்தை முன்வைக்கவிரும்புகின்றது. வடமாகாண சபை தேர்தலிற்கு முன்னரும் பின்னரும் தமிழரசுக்கட்சி செய்த பிழைகள் சரிகள் பற்றியோ அல்லது ஏனைய தமிழ்க்கட்சிகளின் தமிழர்கள் நடந்துகொண்ட முறைகள் தொடர்பாகவோ இப்பத்தி ஆராயவில்லை. மாறாக விக்கினேஸ்வரன் என்ற “நல்ல மனிதர்” பற்றியும் அவர் எம்மையெல்லாம் இணைக்க வந்தவரா என்பது ...

Read More »

“சட்டத்தால் சிந்தனைக்கு விலங்கிட்ட கனம், நீதிபதி அவர்களே…!”

vikneshwaran-2

“நாம் இப்போது வன்முறை காலத்தைத் தாண்டி வந்துள்ளோம் என்பதை மறக்கக் கூடாது. வன்முறைக் காலத்தில் கையில் ஆயுதங்களை ஏந்தி மக்களை எமது கைப்பொம்மைகளாக கருதி வாழ்ந்தோம். அந்தக் காலம் மலையேறிவிட்டது என்பதை நாம் ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும்” “இது வரைகாலமும் நாங்கள் அதிகார அல்லது ஆயுத பலாத்காரத்துக்குப் பழகி வந்துள்ளோம். அதனை இனியாவது தவிர்ப்பது நன்மை பயக்கும் என நினைக்கிறேன். இதுவரை காலமும் எடுப்பார் கைப்பிள்ளையாக இதுவரை காலமும் மக்கள் வாழ்ந்து களைத்துவிட்டார்கள்”               ...

Read More »

‘விக்னேஸ்வரம்’: தமிழ்த் தேசியத்திற்கான மற்றொரு சவால்!

ari-1024x682

ஈழத்து மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லவேண்டிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பானது, தனது கட்டமைப்பிலும் அதன் வழியிலும் தடுமாற்றங்களை சந்திக்கின்ற நெருக்கடியான காலகட்டத்திற்குள் நகர்ந்துவிட்டது. ஆயுதவழியிலான விடுதலைப்போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில், முதன்மைச்சக்தியாக செயற்படவேண்டிய கூட்டமைப்பானது, தமிழரசுக்கட்சி மேலாதிக்கம் என்ற மாயையை நம்பவைத்து, அதன் வழிசென்று, இன்று மும்மனிதர்களின் பிடிக்குள் சென்றுள்ளது. விடுதலைப்போராட்டத்தை ஆதாரமாக கொண்டு உருவாக்கப்பட்ட கூட்டமைப்பிலிருந்து, ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளோடு நெருக்கமானவர்களாக காணப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டவர்களை வெளியேற்றுவதில் தமிழரசுக்கட்சி வெற்றிகண்டது. பின்னர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர்களை உள்ளிளுப்பதும், அவர்களுக்கு தமிழரசுக்கட்சி ...

Read More »

மஹிந்தவிடம் பதவி ஏற்கத் துடிக்கும் சம்பந்தன்..!

tna

“சாதாரண ஒரு சமாதான நீதவான் முன்நிலையில் செய்யக் கூடிய சத்தியப்பிரமாணத்தை ஜனாதிபதி முன்னிலையில் செய்யவேண்டும் என்று அடம்பிடிப்பதன் மூலம் மக்கள் ஆணையை கொச்சைப் படுத்த முற்படுகிறீர்கள்”இந்த கருத்தினை வெளியிட்டது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வடக்கில் மிகப் பெரிய வரலாற்று வெற்றியினைப் பதிவு செய்திருந்தாலும் கடந்த சில நாட்களாக கூட்டமைப்புக்குள் நிலவும் இழுபறி நாளுக்கு நாள் தமிழ் மக்கள் மத்தியில் விரக்தியையும் வெறுப்பையும் தோற்றுவித்துவருகின்றது. ஜனாபதி மஹிந்தராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் மேற்கொள்ளுதல், கட்சிகளுக்கான அமைச்சுப் ...

Read More »