பார்வைகள்

அச்சுறுத்தும் மகிந்த ராஜபக்‌ஷவும் மைத்திரியின் தேசிய அரசாங்கமும்

maithripala and mahinda

இலங்கை அரசியல் அண்மைக் காலத்ததில் அதிரடியான மாற்றங்கள் பலவற்றைச் சந்தித்து வருகின்றது. அந்த மாற்றங்களுள் ஒன்றுதான் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைக்கப்பட்ட “தேசிய அரசாங்கம்” எனக் குறிப்பிலாம். கடந்த வாரம் இலங்கைத் தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களைச் சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுத் தேர்தலின் பின்னரே தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் எனத் தெளிவாகச் சொல்லியிருந்தார். மறுநாள் பத்திரிகைகளின் தலைப்புச் செய்தியும் அதுதான். இருந்தபோதிலும் மிகவும் குறுகிய கால அறிவித்தலுடன் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டிருக்கின்றது. தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டிய தேவை அல்லது அவசியம் அரசாங்கத்துக்கு ...

Read More »

கூட்டமைப்புத் தலைமையை குழப்பும் விக்கினேஸ்வரனின் அதிரடி நகர்வுகள்

vig-sam

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் யாழ்ப்பாண விஜயத்தின்போது திரைமறைவில் இடம்பெற்ற சில சம்பவங்கள் இப்போது மெல்லமெல்ல கசியத் தொடங்கியிருக்கின்றன. வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தமது பிடிக்குள் வைத்திருந்த கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் அந்தப் ‘பிடி’யை இழந்துவிட்டார்கள் என்பதும், தன்னிச்சையாகச் செயற்படுவதற்கு விக்கினேஸ்வரன் முற்பட்டிருக்கின்றார் என்பது வெளியே தெரியத் தொடங்கியிருக்கின்றது. இறுதியாக விக்னேஸ்வரனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இந்தியாவின் துணையை நாடும் நிலை கூட்டமைப்பின் தலைமைக்கு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுகின்றது. முதலமைச்சரின் ‘இனப்படுகொலை’த் தீர்மானத்தையடுத்தே இந்த விரிசல் தீவிரமடைந்திருக்கின்றது. இந்தத் தீர்மானம் இலங்கை அரசுக்குக் ...

Read More »

சனநாயகவெளி : கூட்டமைப்பு பயன்படுத்துகின்றதா? பயப்படுத்துகின்றதா?

leader

இந்தியப்பிரதமரின் இலங்கை விஜயம் எதிர்பார்த்ததை போலவே அனைவரதும் கவனத்தை ஈர்த்திருந்தது. 27 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைத்தீவுக்கு வருகைதந்த பிரதமர் நரேந்திரமோடியின் பயணம் பல்வேறு வகையில் முக்கியமானதாக அமைந்திருந்தது. இலங்கையில் அதிகரித்துவரும் சீனாவின் ஆதிக்கத்தை குறைத்து பிராந்திய வல்லரசு என்ற பெரியண்ணன் அந்தஸ்தை நிலைநிறுத்தவேண்டிய தேவை இந்தியாவுக்கு எப்போதுமே இருந்துவந்தது. பிராந்திய ஒத்துழைப்பு என ஆரம்பிக்கும் இந்த உறவுநிலை பிராந்திய வல்லாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கே எப்போதும் முன்னுரிமை கொடுத்துவந்தது. சிறிலங்காவைப் பொறுத்தவரை இந்தியாவை கையிற்குள் வைத்திருப்பதன் மூலமே சர்வதேசத்தை தனது கையிற்குள் கொண்டுவரலாம் என்பது தெரிந்தவிடயம். இந்தியாவின் ...

Read More »

மோடியின் இலங்கைப் பயணம்: கேந்திர, அரசியல் பரிமாணங்கள்!

Modi

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம்தான் கொழும்பு அரசியலில் இன்றைய ‘ஹொட் ரொப்பிக்’. மோடியின் விஜயத்துக்கு முன்னோடியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடந்த வாரம் கொழும்பு வந்து சென்றிருக்கின்றார். அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து சுஷ்மா பேசியிருக்கின்றார். கொழும்பில் காணப்படும் அரசியல் சூழ்நிலைகளை முழுமையாக நாடிபிடித்துப் பார்ப்பதுதான் சுஷ்மா மேற்கொண்ட இந்தப் பேச்சுக்களின் நோக்கம். மோடியின் காய்நகர்த்தல்களுக்கு அவை தேவைப்படும். மோடியின் வருகை தமிழர் தரப்பிலும் எதிர்பார்ப்புக்களை அதிகப்படுத்தியிருக்கின்றது என்பது உண்மை. இந்தியப் பிரதமர் ஒருவர் யாழ்ப்பாணத்துக்கு வருகைதருவது இதுதான் முதல்முறை ...

Read More »

வித்தியாதரனின் வர்ணஜாலங்கள்!

vithiyin carna jaalam

ஒருமுறை தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் பின்வருமாறு குறிப்பிட்டார். “ சில வருசங்களுக்கு முதல் எங்கள இந்தியா அவசரமாகக் கூப்பிட்டிருந்தது. ஒரு நாளை குறித்து அந்த நாள் காலையில் சந்திக்கும் இடத்துக்கு வரச் சொல்லி அறிவித்திருந்தார்கள். நாங்களும் காலை 7 மணிக்கு அங்க போயிருந்தம். உள்ள போய் பார்த்தால் கூட்டம் நடக்கப்போற அறைக்குள்ள இருந்து காலம சாப்பாட்ட சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார், முன்னாள் உதயன் – சுடர்ஒளி பத்திரிகைகளின் ஆசியரிர் வித்தியாதரன். ஒரு மனுசன் காலம ஏழு மணிக்கு முதல் ஒரு இடத்தில போய் சாப்பிடுறதெண்டால் ...

Read More »

“நெஞ்சில் நிலைத்த உயிரோவியங்கள்” – தமிழ்லீடர் ஆசியர்பீடம்

leader

‘நவம்பர் – 27′ ஒப்பற்ற தியாகங்களாலும் ஈடிணையற்ற அர்ப்பணிப்புக்களாலும் ஒளியேற்றப்பட்ட உன்னதத் திருநாள்; தாயக விடுதலை என்ற விலைமதிக்க முடியாத இலக்கை எட்டுவதற்காகத் தமது உயிரையே விலையாகத் தந்து எமது மக்களின் மனங்களில் நிலைபெற்றுவிட்ட உத்தமர்களை நினைவு கூரும் அற்புதத் திருநாள்; மனித வாழ்வில் சாவென்பது இயற்கையானது. அந்த வாழ்வை மக்களுக்கான வாழ்வாக வாழ்வது, அந்தச் சாவை மக்களுக்காகவே சாவது என்பது வரலாறே தலைவணங்கும் ஒரு உயரிய வேள்வியாகும். அந்த வேள்வியில் தாமாகவே விரும்பிக் குதித்து விடுதலைச் சக்கரத்தை முன் தள்ளும் பணியில் தம்மை ...

Read More »

“வீரப் புயலே நீடு வாழ்க..” – ராணா கந்தசாமி –

thalaivar

வைரவிழாக் காணும் வல்லை மண் ஈன்றெடுத்த வரலாற்றின் நாயகனே எல்லைகளில் எதிரிகளை எரித்தொழித்த காவலனே என் குடும்பம் என் உறவு என் சுற்றம் என்றிராது எம்மினத்தின் விடிலுக்காய் எரிமலையாய் வெடித்தவன் நீ….! விடுதலைக்காய் போர் தொடுத்த வீரத் தமிழ் மறவா.. காலச் சக்கரத்துள் நீ கலந்தழிந்து போகாமல் எம்மினத்தை வேரறுக்க வந்த கொடும் பகைவர்களை வென்று வாகை சூடிய எம் பெருந்தலைவன் நீயல்லவா?! உன் விரல் சுட்டும் திசை நோக்கி விருப்போடு களமாட ஆயிரமாயிரமாய் உன் பின் அணி திரள்வர் எம் வீரர் சங்கமமைத்து ...

Read More »

“தமிழீழக் கோரிக்கையை கைவிடுங்கள்” தமிழகத்தில் மூக்குடைபட்ட ‘சம்பந்தன்’!

sampanthan1

“பாரதப் பிரதமர் நரேந்திரமோடி எம்முடனான உரையாடலின் போது தலைவர் சம்பந்தனை இலங்கையின் கௌரவமான ஒரு தலைவர் என பாராட்டியது எமக்கு மிகுந்த பெருமையாக இருந்தது” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா சில நாட்களின் முன்னர் நெகிழ்ந்து போய் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணல்கள் செய்திகளாக பத்திரிகைகளை அலங்கரித்திருந்தன. உண்மையில் சம்பந்தன் கௌரவம் மிக்க தலைவராக தன்னை அடையாளப்படுத்துவதற்கு கடந்த சில நாட்களாக மேற்கொண்டுவரும் பகீரப்பிரயத்தன முயற்சிகள் பற்றி வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு தமிழ்லீடர் விருப்பார்வம் கொண்டிருக்கிறது. சுவாமி சொன்னது ஒன்று, ...

Read More »

மஹிந்தவுக்கு பிரிட்டன் பாதுகாப்பு வழங்காதது ஏன்? – மாரீசன்

leader

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனிதகுல விரோத நடவடிக்கைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் சர்வதேச விசாரணை ஆரம்பமாகித் தீவிரமாக இடம்பெற்றுவருகிறது. இந்த விசாரணையை இடம்பெறவிடாமல் தடுப்பதற்கு இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மேற்கொண்ட பெரு முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில் தற்சமயம் சாட்சியங்களையும் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்த விசாரணைகளின் அடிப்படையில் குற்றங்கள் நிருபிக்கப்படுமானால் அடுத்த கட்ட நடவடிக்கைக்கையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை மேற்கொள்ளும். அங்கு சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் வீட்டோ அதிகாரம் மூலம் ...

Read More »

சந்திரசிறியின் அன்பும் கருணையும் – புருஷோத்மன்

leader

“தான் ஆளுநராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காட்டும் எதிர்ப்பைப் பொருட்படுத்தவில்லை எனவும் தான் தொடங்கிய 13 அபிவிருத்தித் திட்டங்களையும் நிறைவு செய்யப் போவதாகவும் தான் அன்புடனும் கருணையுடனும் செயற்படப் போவதாகவும் வடமாகாண ஆளுநராக மீண்டும் எதிர்வரும் ஐந்து வருட காலத்துக்கு ஜனாதிபதியால் தெரிவாகியுள்ள மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்துள்ளார். அவர் தமிழ் மக்களையோ, தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையோ அவர்களின் நியாய ரீதியான கோரிக்கைகளையோ என்றும் பொருட்படுத்தியதில்லை. இனியும் அவர் பொருட்படுத்தப் போவதுமில்லை என்பதில் எவ்வித ஆச்சரியமும் ...

Read More »