சமகாலப்பார்வை

மஹிந்தவுக்கு பிரிட்டன் பாதுகாப்பு வழங்காதது ஏன்? – மாரீசன்

leader

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனிதகுல விரோத நடவடிக்கைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் சர்வதேச விசாரணை ஆரம்பமாகித் தீவிரமாக இடம்பெற்றுவருகிறது. இந்த விசாரணையை இடம்பெறவிடாமல் தடுப்பதற்கு இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மேற்கொண்ட பெரு முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில் தற்சமயம் சாட்சியங்களையும் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்த விசாரணைகளின் அடிப்படையில் குற்றங்கள் நிருபிக்கப்படுமானால் அடுத்த கட்ட நடவடிக்கைக்கையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை மேற்கொள்ளும். அங்கு சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் வீட்டோ அதிகாரம் மூலம் ...

Read More »

சந்திரசிறியின் அன்பும் கருணையும் – புருஷோத்மன்

leader

“தான் ஆளுநராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காட்டும் எதிர்ப்பைப் பொருட்படுத்தவில்லை எனவும் தான் தொடங்கிய 13 அபிவிருத்தித் திட்டங்களையும் நிறைவு செய்யப் போவதாகவும் தான் அன்புடனும் கருணையுடனும் செயற்படப் போவதாகவும் வடமாகாண ஆளுநராக மீண்டும் எதிர்வரும் ஐந்து வருட காலத்துக்கு ஜனாதிபதியால் தெரிவாகியுள்ள மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்துள்ளார். அவர் தமிழ் மக்களையோ, தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையோ அவர்களின் நியாய ரீதியான கோரிக்கைகளையோ என்றும் பொருட்படுத்தியதில்லை. இனியும் அவர் பொருட்படுத்தப் போவதுமில்லை என்பதில் எவ்வித ஆச்சரியமும் ...

Read More »

‘வித் யூ வித்தவுட் யூ’ – தமிழகத்து ஈழ உணர்வுகளைச் சிதைக்கும் முயற்சியா?!

leader

தமிழக மாற்று இரசனை உலகம் கொதிப்படைந்திருக்கிறது. வழமையாக தமிழகத்துக்குள்ளேயே இருந்துவருகின்ற சினிமா, எழுத்து போன்றவற்றை வைத்து எழுப்பிக்கொள்ளும் சர்ச்சைகளை இந்தச் சம்பவம் முறியடித்துள்ளது. முதன் முதலாக பிறநாட்டு படைப்பு ஒன்றின் மீதான சர்ச்சையை தமிழகமும் தமிழக ஊடகங்களும் எதிர்கொண்டுள்ளன. அதுவும் தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் நூற்றாண்டுக்கணக்கான எதிரியாகவிருந்த ஒருவரின் படைப்பை வைத்து இந்த சர்ச்சை எழுச்சி நிகழ்ந்துள்ளது. இதனை தொடக்கிவைத்தவர் ‘தமிழ்ஸ்ரூடியோ அருண்’. இவ்விடத்தில் அருண் பற்றிய சிறு அறிமுகத்தையும் எமது ஊடகம் சார்பாக எம் வாசகர்களுக்கு தரவேண்டியிருக்கிறது, தமிழகத்தில் நல்ல சினிமா, மாற்று ஊடகம், ...

Read More »

தமிழக உணர்வுகளைச் சிதைக்க டக்ளஸ் சதி – மாரீசன்

dak

அண்மையில் வட பகுதியில் இடம்பெற்ற மீனவ அமைப்புக்களின் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அதில் இந்திய மீனவர்கள் இலங்கைக்கடல் எல்லைக்குள் அத்துமீறி வந்து மீன்பிடிப்பது தொடர்பாக அலசி ஆராயப்பட்டது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடியாகவே எல்லை மீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட வேண்டுமென நீரியல்வளத்துறைப் பணிப்பாளருக்கும், பொலிஸாருக்கும் கட்டளையிட்டுள்ளார். ஏற்கனவே எல்லை மீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதும், நீதிமன்றில் நிறுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவதும் இடம்பெற்றுவருகின்றன. அண்மையில் கூட அப்படிக் கைது செய்யப்பட்ட மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் ...

Read More »

காக்கிச் சட்டை நிழலின் கீழ் கூலிக்குரல்கள் – மாரீசன்

maaree-kooli

“எங்க பிள்ளைங்கள இஞ்சை வந்து யார் பிடிச்சாங்க? ஆமி, பிடிச்சாங்களா? பொலிஸ் பிடிச்சாங்களா? யாரு பிடிச்சாங்க? பதினாலு பதினைஞ்சு வயசுப் பொடியன்களை எல்லாம் புலியள் தானே புடிச்சாங்க? ஒரு ஒரு கூக்குரல்! அனந்திடை புருஷனைக் காணாட்டி அவ தேட்டடும். அவங்கவங்க தங்கட புருஷங்கள காணாட்டி அவங்க போய்த் தேடட்டும். இஞ்ச வந்து நாம சமாதானமாவும் நிம்மதியாவும் வாழுறதைக் குழப்பாதேங்க; காணாமல் போனவங்கள தேடுறம் எண்டு சொல்லி அரசியல் செஞ்ச நாங்க விடமாட்டம்! இது அடுத்த கூக்குரல்! விக்கினேஸ்வரன் ஐயா இஞ்சை வந்தால் இடம்பெயர்ந்து கஷ்டப்படுற ...

Read More »

ஏறிவந்த ஏணிகளை உதைத்துத் தள்ளும் விக்கி – தமிழ்லீடருக்காக மாரீசன்

viki

வடக்கு அரசியலில் தமிழ்த் தேசிய வாதியாகத் தன்னை இனம்காட்டி உள் நுழைந்த அவர் அதே தமிழ்த் தேசியத்துக்கு எதிராகவும், தமிழ் மக்களின் நியாய ரீதியான உணர்வுகளுக்கு எதிராகவும் தன் உண்மை முகத்தை வெளிக்காட்டுவது இது தான் முதல் தடவையல்ல. தேர்தல் மேடைகளில், தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களை ஒரு மாவீரன் என முழங்கி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட அதே வாயால் தலைவர் அவர்களை ஒரு சர்வாதிகாரி என வர்ணித்து தன் அடிமனதை வெளித்திறந்து காட்டியவர். இலங்கைத் தமிழர் பிரச்சினை ஒரு சகோதரச் சண்டை ...

Read More »

கண்ணீரில் மிதக்கும் அன்னையர்தினம் – மாரீசன் –

annaiyarthinam

இன்று உலக அன்னையர் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. அன்னையரைக் கௌரவித்தல், நினைவு நாள் சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள், ஆர்ப்பாட்டப் பேரணிகள், பிரகடனங்கள் என எங்கும் அன்னையர் பெருமையை வெளிப்படுத்தும் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதே நேரம் இலங்கையிலும் அன்னையர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. தென்னிலங்கையில் கோலாகலமான அன்னையர் தினக் கொண்டாட்டங்கள் அரங்கேறுகின்றன. துப்பாக்கி வேட்டுக்களாலும், பீரங்கிக் குண்டுகளாலும், எறிகணைகளாலும், விமானத் தாக்குதல்களாலும் ஒரு பெரும் இன அழிப்பை அரங்கேற்றிய படையினரின் அன்னையர் இன்று தேசத் தாய்களாக இனவெறி அரசால் கௌரவிக்கப்படுகின்றனர். மனிதாபிமானத்தையும் மனித உரிமைகளையும் குழிதோண்டிப் புதைத்த நாளைய அன்னையர்களான இளம் ...

Read More »

தமிழ்த்தேசியவாதிகள் கோமாளிகளா? – ச.வி.கிருபாகரனுக்கு பதிலடி!

தமிழ்த்தேசியவாதிகள்-கோமாளிகளா

ஜெனீவாவில் அமெரிக்காவினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலும் அதில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டமை தொடர்பாக குறிப்பாக அங்கு கலந்து கொண்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர்பாக மிகவும் காழ்ப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதும் அதற்கு தமிழ்த் தேசிய இணையத்தளங்களாக காட்டிக்கொள்ளும் இணையத்தளங்கள் அதனை அவ்வாறே தரக்குறைவான வார்த்தைப் பிரயோகங்களுடன் வெளியிட்டு பிரச்சாரப்படுத்துவதும் மிகவும் வேதனைப்படவேண்டியதாகும். ஜெனீவா கலந்துரையாடலுக்காக அங்கு சென்றிருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், மணிவண்ணன், யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியரும் மனித உரிமை ஆர்வலருமான குருபரன் ஆகியோர் அங்கு கலந்து கொண்டு ...

Read More »

‘தென்னாபிரிக்கப் பயணம்’; கூட்டமைப்பு சாதிக்கப்போவது என்ன?

south-2

தென்னாபிரிக்க அரசின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அங்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். ஏற்கனவே பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த தென்னாபிரிக்க ஜனாதிபதி யேக்கப் சுமோ இலங்கை அரச தரப்பினரிடமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடமும் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் தாம் உதவ முடியும் என்ற கருத்தை வெளியிட்டிருந்தார். இலங்கைத் தமிழ் மக்களைப் போன்றே தென்னாபிரிக்காவின் கறுப்பின மக்களும் இன ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள் என்ற வகையிலும் அதற்கெதிரான நீண்ட காலப் போராட்டத்தை நடத்தி வெற்றி பெற்றவர்கள் என்ற முறையில் அவர்களின் அனுசரணை பயனுள்ளதாக ...

Read More »

எண்பதுகளை நோக்கி; அரச பயங்கரவாதம் – மாரீசன் –

maree1

அது 1983ஆம் ஆண்டுக்கு முன்னைய சில வருடங்கள்! அது தமிழர் தாயகத்தின் ஒவ்வொரு வீடுகளுக்கும் அரச பயங்கரவாதம் தன் கோரக்கரங்களை விரித்து வேட்டையாடிய காலம்! திடீரென அதிகாலையில் கிராமங்கள் சுற்றிவளைக்கப்படும். சில இளைஞர்கள் கைது செய்யப்படுவார்கள்! இவர்களில் சிலர் காணாமல் போவதுண்டு. சிலர் சித்திரவதை செய்யப்பட்டு சிறை செய்யப்படுவர். வீதிகளில் இராணுவ ரோந்து அணி செல்லும்; திடீரென துப்பாக்கிகள் முழங்கும், கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தில் வீதியில் நடமாடியோர் செத்து விழுவர். சில சமயங்களில் வீதியருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களும் சுடப்படுவர். எந்த வீடுகளும் தீக்கிரையாக்கப்படும். ...

Read More »