சமகாலப்பார்வை

சி.வி.வியின் அரசியல் அறிவிப்பும் அது சொல்லும் செய்திகளும் – நிலாந்தன்!

viky

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓரு பதிலை மிகச் சாதாரணமாக வாராந்தக் கேள்வி பதில் ஒன்றிற்கூடாக ஏன் விக்னேஸ்வரன் சொன்னார்? அவரிடமிருந்து அந்த பதிலை வரவழைப்பதற்காக பலரும் பல மாதங்களாக முயன்று வந்தார்கள். ஒரு மாற்று அணியை உருவாக்க வேண்டுமென்று இதய சுத்தியோடு உழைத்த பலரும் அவரிடம் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். 2009ற்குப் பின்னரான தமிழ் அரசியலை பொருத்தமான ஒரு தடத்தில் ஏற்ற வேண்டுமென்று முயற்சித்த பலரும் அவரிடமிருந்து அந்த பதிலை எதிர்பார்த்தார்கள்.

Read More »

விக்னேஸ்வரன் எறிந்த குண்டு உண்மையா, டம்மியா? – நிலாந்தன்!

viky

விக்னேஸ்வரனின் வாராந்தக் கேள்வி பதில் குறிப்பு பலதரப்புக்களாலும் விமர்சிக்கப்படும் ஒன்று. அவர் முகத்துக்கு நேரே கேட்கப்படும் கேள்விகளைத் தவிர்ப்பதற்காக இப்படி கேள்வியும் நானே பதிலும் நானேயென்று ஒரு குறிப்பை வாரந்தோறும் வெளியிட்டு வருகிறார் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. அவரை முகத்துக்கு நேரே எதிர்பாராதவிதமாகக் கேள்விகளைக் கேட்டால் அவர் திணறுவார்.

Read More »

விடுதலைப் போராட்ட வீராங்கனை வின்னி மண்டேலா!

vinie

தென்னாபிரிக்க விடுதலைப் போராட்டம் பெரு நெருப்பாகக் கொழுந்துவிட்டெரிந்த நாட்களில் “வின்னி” என்ற பெயரே வெள்ளை இன ஒடுக்குமுறையாளர்களின் சிம்ம சொப்பனமாக விளங்கியது.

Read More »

சம்பந்தரின் கருத்தை மீறியா மாவை ஈ .பி .டி .பி யுடன் இணைந்தார் ?

iraamasamy

2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழரின் அரசியலும், வாழ்வியலும் முள்ளில் விழுந்த சேலையாய் இருக்கும் தறுவாயில் மிக முக்கிய காலகட்டத்தில் பெரும் கிழிசலையும் கண்டிருக்கிறது என்பது மக்களால் ஏற்றுக்கொள்ளவும் ஜீரணிக்கவும் முடியாத ஒரு பெரும் விடயமாகி இருக்கின்றது .

Read More »

“ஆட்சிக்கூட்டும் கூட்டமைப்பும்“ – நிலாந்தன்

tna2

கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் காரைநகரில் ஒரு சுயேட்சைக் குழு மீன் சின்னத்தில் போட்டியிட்டது. விழிம்புநிலை மக்கள் மத்தியில் இருந்து தோன்றிய மேற்படி சுயேட்சைக் குழு பெரிய கட்சிகள் எதனோடும் சேர்ந்து போட்டியிடத் தயாராக இருக்கவில்லை. பெரிய கட்சிகள் கடந்த காலங்களில் தமது மக்களின் குறைகளைத் தீர்க்கவில்லை என்றும் குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகள் கூடப் பூர்த்தி செய்யப்படவில்லை என்றும் இச் சுயேட்சைக் குழு குற்றம் சாட்டியது. தேர்தலில் இக் குழுவிற்கு மூன்று ஆசனங்கள் கிடைத்தன. கூட்டமைப்புக்கும் மூன்று ஆசனங்கள் கிடைத்தன. ஏனைய கட்சிகள் ...

Read More »

என்ன செய்யப் போகிறார்கள்? – பி.மாணிக்கவாசகம்

ddd

ஐநா மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது அமர்வு இலங்கையைப் பொறுத்தமட்டில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை, சம்பந்தப்பட்ட பல தரப்பினரும் தீர்மானிக்க வேண்டிய கட்டாய நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.

Read More »

ஓ… சங்கீதா… நீ என்ன குற்றம் செய்தாய்…?

sangeethaa

கருவில் இருக்கையிலேயே தந்தையைப் பிரிந்தாய்… தாயின் அரவணைப்பில் மட்டுமே மகிழ்ந்திருந்தாய்… இப்போது தாயையும் இழந்து பரிதவித்து நிற்கின்றாய்… உண்மையில்  நீ… செய்த குற்றம் என்ன…? ஈழத் தமிழ்க் குழந்தையாகப் பிறந்ததைத் தவிர…

Read More »

ஜெனீவா கூட்டத் தொடர் 2018; நடக்கப் போவது என்ன? – நிலாந்தன்

jeneva

ஜெனீவாக் கூட்டத்தொடர்களில் தமிழ்த்தரப்பானது மைய நிகழ்வில் பங்குபற்றுவதில்லை. மாறாக பக்க நிகழ்வுகளில் (side events) தான் பங்கேற்பதுண்டு என்ற ஒரு விமர்சனம் எள்ளளோடு முன்வைக்கப்படுவதுண்டு. ஓர் அரசற்ற தரப்பாகிய தமிழ்த்தரப்பிற்கு மைய நிகழ்வில் பெரியளவு முக்கியத்துவம் கிடைக்காதுதான். பதிலாக பக்க நிகழ்வுகளில்தான் தமிழ் மக்கள் தமது குரலை வலிமையாகவும், உரத்தும் ஒலிக்க முடியும். பக்க நிகழ்வுகள்,நிழல் அறிக்கைகள்(shadow reports) போன்றவை அரசற்ற தரப்புக்கள் தமது நியாயத்தை முன்வைப்பதற்கான ஏற்பாடுகள்தான். கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்கள் தமது பயங்களையும், சந்தேகங்களையும், நியாயங்களையும் மேற்படி ஏற்பாடுகளுக்கூடாகவே ...

Read More »

“கண்டி வன்முறை” – யாருக்கு இலாபம்? – நிலாந்தன்

nilanthan

‘தனது மக்களுக்கு இலவசக் கல்வி, இலவச சுகாதார சேவை போன்ற பல்வேறு சமூக நலத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்திய இலங்கைக்கு சமாதானம் இலகுவாகக் கிட்டியிருந்திருக்க வேண்டும். ஆனால் பௌத்தத்துக்கும், சிங்கள பெரும்பான்மையினருக்கும் உயர்நிலை வழங்கும் நிலையை அந்நாடு எடுத்ததால், ஏனைய மக்கள் சமூகத்தை தேசிய ரீதியாக அடையாளப்படுத்தும் உணர்வில் அதைத் தனிமைப்படுத்தி விட்டது.அந்த நிலைப்பாட்டிலிருந்து தன்னை விடுவித்துத் திருந்தும் போக்கு இலங்கையில் தென்படுவதாக இல்லை. பன்மைத்துவத்தில் உள்ள சிறப்பை இலங்கை உணர்ந்துகொள்ளவேயில்லை.’ -அமர்தியா சென்-

Read More »

விக்னேஸ்வரனின் கணக்கு? – நிலாந்தன்

nilanthan

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னணியில் கடந்த வியாழக்கிழமை தமிழ்மக்கள் பேரவை கூடியிருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான வீதியோர போராட்டங்கள் ஓராண்டை பூர்த்தி செய்திருக்கும் ஒரு காலச் சூழலில் பேரவை கூடியிருக்கிறது. உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு முன் பேரவையில் பங்காளிகளாக காணப்பட்ட இரண்டு கட்சிகளையும் ஒருங்கிணைத்து அவற்றிற்கு தலைமை தாங்க கூடிய தகுதியும் பொறுப்பும் பேரவைக்கே இருந்தது. ஆனால் பேரவை அதை செய்யவில்லை. அதனால் அவ்விரு கட்சிகளும் தனித்தனியாக இருவேறு கூட்டுக்களை அமைத்தன. இதனால் தமிழ் வாக்குகள் சிதறின.தனது பங்காளி கட்சிகளுக்கு உரிய நேரத்தில் உரிய ...

Read More »