ஆசிரியப்பார்வை

ஈழப் போராட்டத்தை விமர்சிக்கும் விக்னேஸ்வரனுக்கு திறந்த மடல்!

vikkileader

பெருமதிப்புக்குரிய விக்னேஸ்வரன் அவர்களுக்கு, முதலில் தங்களுக்கு எங்கள் வணக்கத்தையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறோம். எமது இனத்தின் விடுதலைக்கான போராட்டம் 60 ஆண்டுகளுக்கு மேலாக பல வெற்றிகளையும் நெருக்கடிகளையும் சந்தித்தபோதிலும் பரிணாம வளர்ச்சி ஊடாக ஒரு உயரிய இலக்கை நோக்கி நகர்ந்தது! எனினும் பல முனைகளிலும் விரிக்கப்பட்ட சதி வலைகள் காரணமாக இன்று நாம் ஒரு பின்னடைவுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். நீதி நிர்வாகத்துறையில் நீண்ட கால அனுபவமும் ஆற்றலும் நிரம்பிய தாங்கள் எமது உரிமைப் போரில் மாகாண சபைக்கு ஊடாக ஒரு ...

Read More »

ஆபத்துக்களுக்குள்ளால் அவுஸ்திரேலியப் பயணங்கள்!

australia-kadal-payanam

இலங்கையில் வானொலியைத் திறந்தாலோ அல்லது தொலைக்காட்சியை இயக்கினாலோ அடிக்கடி வெளிவரும் விளம்பரம் ஒன்றுண்டு. “ஆபத்தான படகுப் பயணங்களை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு போகாதீர்கள். அங்கு உங்களுக்கு அகதி அந்தஸ்தோ வேலைவாய்ப்போ வழங்கப்படமாட்டாது”, இது அவுஸ்திரேலிய அரசாங்கம் விடுக்கும் அறிவித்தல். இப்படியான விளம்பரங்கள் வாராவாரம் பத்திரிகைகளிலும் வருவதுண்டு. எனினும் அடிக்கடி படகுகள் அவுஸ்திரேலியா நோக்கிச் செல்லும் சில அந்த நாட்டைச் சென்றடைவதும், சில விபத்துக்களில் அகப்பட்டு உயிரிழப்புக்கள் ஏற்படுவதும் இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் அண்மையில் கெவின் ரட் பிரதமராகப் பதவியேற்றதுமே இக் குடியேறிகள் தொடர்பாக ஒரு ...

Read More »

மஹிந்தவின் பரிசோதனைக் கருவியாக விக்கி; சலுகைக்காக தலையாட்டினார்களா சுரேஷ், செல்வம்?!

leadereditorialmahinda-vikki-sampanthan

மிக நீண்டகாலக் கனவுகளுக்கும் மிக நீண்ட நாள் எதிர்பார்ப்புக்களுக்கும் சி.வி.விக்கினேஸ்வரனை முதன்மை வேட்பாளராகத் தெரிவித்து அறிவித்தல் விடுத்ததன் மூலம் முற்றுப்புள்ளிவைத்திருக்கின்றார் இராஜவரோதயம் சம்பந்தன். மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிறேமச்சந்திரன், சுமந்திரன், சரவணபவன், வித்தியாதரன் எனப் பலர் முதலமைச்சர் கனவு சுமந்தபோதிலும் இறுதியில் எவரும் எதிர்பார்க்காத வகையில் தனிப்பட்ட விடாமுயற்சியாக சுமந்திரனுக்கு அடுத்ததாக சி.வி.விக்னேஸ்வரனை கட்சிக்குள் உள்வாங்கியிருக்கிறார் சம்பந்தன். கொண்ட கொள்கையில் இருந்து வளைந்துகொடுக்காதவர், நேர்மையானவர் என்று பரவலாக குறிப்பிடப்படுகின்ற சி.வி.விக்னேஸ்வரன், கல்வியாளர், சட்ட நுணுக்கம் தெரிந்தவர் போன்ற விடயங்களை முதன்மைப்படுத்தி அவருக்கான நியாப்பாடுகளை சம்பந்தன் ...

Read More »

தென் இந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கத்திற்கு திறந்த மடல்!

Bapasi-1024x682

என்றும் ஈழத்தமிழனுக்காக ஆறுதல் கரம் தந்து ஆதரவு தரும் தமிழக உறவுகளுக்கு வணக்கம், நாம் நிமிர்வாக எழுந்து நின்றபோதும் எமது தோள்களோடு தோள் நின்றவர்கள் நீங்கள், நாம் இரத்தச் சகதிக்குள் அமிழ்ந்தபோதும் துடித்தவர்கள் நீங்கள். எங்கள் வலிகளை புரிந்து கொள்வதற்கு இடையே இன்னொரு மொழி தேவையில்லை என்கின்ற ஆறுதலுடன் உங்களுடன் எங்கள் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள முற்படுகின்றோம். ஈபிடிபியின் ஆளுகையின் கீழ் உள்ள யாழ்.மாநகரச சபை மற்றும் யாழ்.இந்தியத் துணைத் தூதரகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வெளியீட்டார்கள் சங்கத்தினால் புத்தகக் ...

Read More »

சோரம்போன கலைஞரும்; விலைபோகாப் பெருந்தலைவனும்!

கலைஞரும்-தலைவரும்

வீழ்ந்துபட்டுக் கிடக்கும் ஈழத்தமிழர்களதும் உலகத் தமிழர் மக்களதும் உணர்வுகளைச் சீண்டிப்பார்க்கும் கலைஞர் கருணாநிதி அவர்களின் விசுவாசிக்களாகச் சொல்லிக்கொள்கின்ற ஒரு அணி சமூக வலைத்தளங்கள் ஊடாக தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களையும் ஈழவிடுதலைக்காக கொடுக்கப்பட்ட உயிர்விலைகளையும் கொச்சைப்படுத்தி மிகக் கேவலமான பரப்புரை நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக மேற்கொண்டுவருகின்றது. புலத்தில் உள்ள மக்களது போராட்டங்களைக் கைவிடுமாறு ‘சோ’வினுடைய ‘துக்ளக்’ இதழுக்கு தமிழின விரோதி கருணா வழங்கியிருந்த நேர்காணல் ஒன்றினை துணையாக கையிலெடுத்து கலைஞரின் பரிவாரக் கும்பல் எமது இனவிடுதலைப் போரைக் கொச்சைப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் மிகத் ...

Read More »

மே 18இல் உறுதி கொள்வோம்!

leader

மே 18, உலகத் தமிழின வரலாற்றில் மறக்க முடியாத நாள். தமிழினம் காலங்காலமாக சந்தித்துவந்த அவலங்களுக்கெல்லாம் மகுடம் வைத்தாற் போல அமைந்த மிகப் பெரிய இன அழிப்பின் அடையாளமான நாள் அது. உலக அரங்கில் நினைத்துப் பார்க்க முடியாத மிகப் பெரிய சாதனைகளுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக, ஒரு இனத்தின் விடுதலைக்காக எவ்வளவு முடியுமோ அவ்வளவு அர்ப்பணிப்புக்கள் எமது தேசிய இனவிடுதலைப் போராட்டத்தில் நிகழ்ந்தேறியிருக்கின்றன. மிக நேர்த்தியான கட்டமைப்பைக் கொண்ட தமிழீழ விடுதலைப் போராட்டம் மக்களின் முழுமையான ஆதரவு பலத்துடன் முப்பது ஆண்டுகளைக் கடந்தும் தனது விடுதலைப் ...

Read More »

மஹிந்த சொல்லே மந்திரம்; தடு(டம்)மாறுகிறது கூட்டமைப்பு!

mahinda_sampanthan1

கடந்த 60 ஆண்டுகளாக பல்வேறு பரிமாணங்களுடாக வளர்ச்சி பெற்றுவந்த தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் ஆயுத வடிவெடுத்து உலகம் வியக்கும் வண்ணம் உச்ச கட்டத்தை எட்டி நின்றது. அக்காலகட்டத்தில் தமிழ் மக்களின் விடியலை நோக்கிய வீரமிகு தலைமையாக தமிழீழ விடுதலைப்புலிகள் திகழ்ந்தனர். எனினும் தேசிய, சர்வதேச சக்திகள் காரணமாக தமிழ் மக்களின் வலிமை மிக்க ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் வைத்து தோற்கடிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்பு ஏற்பட்ட வெற்றிடம் காரணமாக தமிழ் மக்கள் தங்கள் உரிமைப் போராட்டத்தைக் கைவிட்டுவிடவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பை ...

Read More »

பிரதேசவாதத்தை தூண்டிய உதயன் : பத்திரிகையை எரித்த வன்னி மக்கள்!

leader

தவறுகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் தமது கருத்துக்களுடன் உடன்படாதவர்களைப் பழிவாங்கவும் துரோகிகள், அரச கைக்கூலிகள் போன்ற முத்திரைகளைக் குத்துவதற்கு பெரும்பாலானவர்கள் தயங்குவதில்லை என்பதற்கு உதாரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகின்ற உதயன் பத்திரிகை திகழ்ந்திருக்கின்றது என்ற கசப்பான உண்மை நடைபெற்றிருக்கின்றது. ஊடகங்களில் பேசப்படாத ஆனால் பேசப்படவேண்டிய ஒரு கவலை தரும் விடயம் 20-03-2013 அன்று முல்லைத்தீவில் நடைபெற்றிருக்கின்றது. உதயன் பத்திரிகைப் பிரதிகள் முல்லைத்தீவில் தீவைத்து எரிக்கப்பட்டமையே குறித்த சம்பவமாகும். உதயன் பத்திரிகை எரிக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியவுடன் உடனடியாக இராணுவப் புலனாய்வாளர்கள் அல்லது இராணுவத்தினர் தான் ...

Read More »

தமிழக மாணவர் எழுச்சியும் சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகளும்!

leader

மிகப்பெரிய எழுச்சியின் வடிவமாக தமிழகம் திரண்டிருக்கிறது. இனம் ஒன்றின் விடுதலைக்கான இறுதி எழுச்சியாக மாணவர் சக்தி நிமிர்ந்தெழுந்த சம்பவங்கள் பல்வேறு விடியல் பெற்ற தேசங்களில் அமைந்திருக்கின்றன. அந்த வகையில் ஈழத்தமிழினத்திற்காக உரிமையுடன் திரண்டெழுந்தது தமிழக மாணவர் சமூகம். தமிழகத்தின் எழுச்சி குறிப்பாக தமிழக மாணவர் சமூகத்தின் எழுச்சி மத்திய பிராந்தியத்தையே உலுக்கிப் பார்க்கும் அளவிற்கு வல்லமை கொண்டதாக வீரியம் பெற்றுவிடும் நிலையை அடைவதற்கு முன்பாகவே அதனை முற்றாக தடுப்பதற்கான நடவடிக்கையினை தமிழக அரசு மேற்கொண்டிருக்கின்றது. ஈழ விடுதலைப் போராட்டம் தொடங்கப்பட்டது முதல் போராட்ட அமைப்புக்களுக்கு ...

Read More »

எழுச்சி கொண்ட மாணவர் சக்திக்கு ஆதிக்க சக்திகள் பதில் சொல்ல வேண்டும்!

layolastudentshungerstrike

மிகப் பெரிய மனிதப் பேரவலம் நிகழ்ந்தமை தொடர்பில் சர்வதேச சமூகம் இலங்கையை நோக்கி கேள்வி எழுப்பத்தயாராகியிருக்கின்ற போதிலும் சம்பவங்கள் தொடர்பிலான நேரடிச் சாட்சியங்களாக வாழும் இலட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்கள் வாய் திறக்க முடியாத துப்பாக்கி முனைக்குள் முடங்கியுள்ளனர். ஆற்றாமை, பரிதவிப்பு, வேதனை அனைத்தையும் சுமந்து வாழும் ஈழத் தமிழ் சமூகம் தனக்கான நியாயத்தினைப் பெறுவதற்காக வாய் கூடத் திறக்க முடியாத நிலையில் ஏங்கியே வாழ்கிறது. ஆனாலும் கூட ஈழத்தமிழனின் கண்ணீருக்காக இரத்திற்காக உலகத் தமிழினம் எழுச்சி கொண்டிருப்பது ஈழத்தமிழ் மக்களுக்கு சற்று ஆறுதலைத் ...

Read More »