ஆசிரியப்பார்வை

துரோகிகளுக்காக தியாகிகளை கொச்சைப்படுத்தும் ‘சம்பந்தன்?’

sam-1024x682

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நிறுவுனர் தந்தை செல்வா அவர்களின் 37ஆவது நினைவு நிகழ்வுகள் கொழும்பு பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்ற போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் ஆற்றிய உரையில் குறிப்பிடப்பட்ட சில விடயங்கள் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் தொடர்பில் இவரின் நிலைப்பாடு தொடர்பாகச் சில கேள்விகளை எழுப்பியுள்ளன. அது மட்டுமன்றி இவர் அலங்காரமான வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலட்சியங்களை திசை திருப்பி விடுவாரோ என்ற அச்சத்தைம் ஏற்படுத்தியுள்ளன. அவ்வுரையின் போது இவரால் அழுத்தம் ...

Read More »

கூட்டமைப்புடன் சென்ற சிங்களவர்; தென்னாபிரிக்காவில் நடந்தது என்ன?

தென்னாபிரிக்காவில்-நடந்தது-என்ன

ஜெனீவாப் போர்க்களத்தில் ஏதோ ஒருவகையில் தோல்வியைச் சந்தித்து சர்வதேச விசாரணையை எதிர்கொண்டுள்ள அரசு, குறித்த விசாரணைக்கு அனுமதிக்கப் போவதில்லை என்றும் நவிப்பிள்ளை அம்மையாரின் நாய்க்குக் கூட இலங்கை வர அனுமதியில்லை என்றும் பகிரங்கமாகவே மார் தட்டி வருகிறது. இந்த இடத்தில் தாயகத்தில் வாழும் மக்கள் சாட்சியமளித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டல்களும் அடிக்கடி வெளியாகிவருகின்ற நிலையில் சிங்கள அரசு கொண்டிருக்கின்ற அடாவடித்தனம் புலப்பட்டு நிற்கிறது. இதனிடையே அரசு தமிழினத்துக்கு எதிராக மேற்கொள்கின்ற சூழ்ச்சி நடவடிக்கையில் எம்மவர்களும் துணைபோகின்றமை தொடர்பில் பல ...

Read More »

‘மீண்டும் புலிகள்’ – வடக்கில் நடப்பது என்ன? – மாரீசன் –

maree

கடந்த 30 வருடங்களாக இலங்கையின் இனவெறி பிடித்த அரசுகள் தமிழ் மக்கள் மீது ஒரு இன அழிப்புப் போரைக் கட்டவிழ்த்து விட்டன. ஆனால் விடுதலைப்புலிகள் தோற்றம் அவர்களின் நப்பாசையில் மண் வீழ்த்தியது. அவர்களின் இன அழிப்புப் போரை விடுதலைப் புலிகள் இன விடுதலைப் போரால் எதிர்கொண்டனர். தட்டிக் கேட்க ஆளில்லை என்ற இறுமாப்புக் கொண்ட இராணுவம் காலத்துக் காலம் அடிக்கு மேல் அடிவாங்கி நடு நடுங்கியது. விடுதலைப் போராட்டத்தை தோற்கடிக்க முடியாத நிலையில் இலங்கை ஆட்சியாளர்கள் சர்வதேச உதவியை நோக்கி ஓடினர். துரோகிகளும் அடிவருடிகளும் ...

Read More »

‘அமெரிக்க பிரேரணை’ சதிவலை பின்னியது யார்? – தமிழ்லீடர் ஆசிரியர்பீடம்

Sumanthiran-sampanthan2

முள்ளிவாய்க்காலில் ஈழவிடுதலைக்கான ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டபோது ஏற்பட்ட உணர்விற்கு அண்மித்த ஒரு வலியினை உலகத்தமிழினம் இன்று சந்தித்திருக்கிறது. ஜெனீவா கூட்டத் தொடர் சிங்களப் பேரினவாத அரசுக்கு மிகப் பெரும் சவாலாக அமையும் என்ற ஒரு எதிர்பார்ப்பு உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழ் மக்கள் மனங்களில் சிறு நம்பிக்கை தருவதாக அமைந்திருந்தாலும் இறுதி நேரத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு மீண்டுமொரு அவகாசத்தைக் கொடுக்கும் ஒரு வரைபு அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டமை பலத்த ஏமாற்றத்தினை கொடுத்திருக்கிறது. ஆனால் அமெரிக்கா அண்மையில் தெரிவித்து வந்த கருத்துக்களுக்கும் தற்போது முன்வைத்திருக்கின்ற வரைபுக்கும் இடையில் ...

Read More »

சிங்களத்தால் நிராகரிக்கப்பட்டும் சிகரம் தொட்ட இயக்குநர்!

balumahendra

இந்திய சினிமா உலகில் தனித்துவமான ஒரு முத்திரையைப் பதித்த ஒப்பற்ற கலைஞன்  இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர் பாலுமகேந்திராவின் திடீர் மரணம் கலையுலகையே அதிரவைத்துவிட்டது. தென்னிந்திய சினிமா உலகை அவரின் பிரவேசத்தின் வெற்றி எப்படி அதிர்வலைகளை எழுப்பி புதிய திருப்பங்களுக்கு வழி வகுத்ததோ அவ்வாறே அவரின் இழப்பும் எதிர்பாராத அதிர்வை ஏற்படுத்திவிட்டது. அன்றைய நாட்களில் தமிழ் சினிமா உலகம் இரண்டு விதமான போக்குகளுக்குள் புரண்டு கொண்டிருந்தது. ஒன்று – நட்சத்திரங்களுக்கேற்ப கதை, இயக்கம் என்பவற்றை அமைத்து அவர்களையே வர்த்தகப் பண்டங்களாக்கி படங்களைத் தயாரிக்கும் ஒரு வகை. ...

Read More »

‘சினிமா மோகம்’; ஆபத்தை நோக்கி தமிழ்ச்சமூகம்!?

Jaffna-leader

மன்னாரில் மனிதப் புதைகுழியிலிருந்து இடைவிடாது மனித எச்சங்கள் மீட்கப்பட்டுவருகின்ற நிலையில் யாழ்ப்பாணத்தில் சினிமா நடிகர் ஒருவருக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் தொடர்பிலான செய்திகளும் இலத்திரனியல் ஊடகங்களை ஆக்கிரமித்திருக்கின்றன. பல்லாயிரம் உயிர்கள் பிய்த்தெறியப்பட்ட இனவிடுதலைப் போராட்டம் நடைபெற்ற ஒரு மண்ணில் உலகத்தமிழர்களுக்கான ஒரு அடையாளமாக விளங்குகின்ற யாழ்ப்பாணத்து மண்ணில் திரைப்படம் ஒன்றிற்காக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமையும் அதற்கு ஆதரவாக சிலர் கருத்துச் சொல்ல முற்படுகின்றமையும் தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த மன வேதனையைத் தோற்றுவித்திருக்கின்றன. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் ரணில் அரசுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டுக்கு முற்பட்ட ...

Read More »

சம்பந்த(ன்) – மஹிந்த விருந்துபசாரத்துடன் முடிவுக்கு வருகிறதா இரணைமடு விவகாரம்?!

sampanthan-sumanthiran2

‘இரணைமடு” தமிழ் மக்களின் வாழ்வுரிமையில் இன்று பிரதான பாத்திரத்துக்கு வந்திருக்கிறது. இரணைமடு விடயத்தில் சம்பந்தப்பட்ட மக்களை விடவும் அரசாங்கம் கூடுதல் அக்கறை கொண்டிருப்பதாகவே அண்மைய நடவடிக்கைகள் புலப்படுத்தி வருகின்றன. நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இரணைமடு நீரை யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு ஒத்துழைக்குமாறு தெரிவித்ததுடன் மாவிலாற்றினை மறித்ததால் போர் மூலம் விடுதலைப்புலிகளை அழித்ததையும் மறைமுகமாக சுட்டிக்காட்டி மிரட்டல் விடுத்திருப்பதாகவே தெரிகிறது. இந்த நிலையில் இரணைமடு விடயத்தினை அரசாங்கம் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாக பார்ப்பதன் பின்னணி ஏதாவது இருக்கவேண்டுமே என்பது பட்டவர்த்தனமான ...

Read More »

புரட்சித் தலைவனுக்கு விடை கொடுப்போம்…!

mandela2

“உலகின் தலைசிறந்த புரட்சிவாதிகள் பயங்கரவாதிகள் எனவும் கலகக்காரர்கள் எனவும் அவர்கள் வாழ்நாளில் பிற்போக்காளர்களால் தூற்றப்படுகின்றனர். ஆனால் அதே சக்திகள் புரட்சிவாதிகளை அவர்களின் இறப்பின் பின்பு யேசுவாகவும், புத்தராகவும் காட்டி அஹிம்சாமூர்த்திகள் எனக் கூறி அவர்களுக்கு மக்கள் மத்தியிலுள்ள செல்வாக்கைத் தமக்குச் சாதமாகப் பயன்படுத்த முனைகின்றனர்” இவை உலகின் தலைசிறந்த புரட்சிவாதிகளில் ஒருவரும் உலகில் முதன் முதலாக உழைக்கும் மக்களின் அரசியலதிகாரத்தை நிறுவியவருமான மாமேதை லெனின் கூறிய வார்த்தைகள். தங்கள் வாழ்நாளில் திட்டித்தீர்க்கப்பட்ட விடுதலை வீரர்கள் அவர்களின் இறப்பின் பின்பு அவர்களின் வடிவங்கள் மாற்றப்பட்டு போற்றப்படுவது ...

Read More »

அன்ரன் பாலசிங்கம்; அரசியல் அரங்கத்தில் அண்ணனின் அறிவாயுதம்!

arasiyal arangathil aaa

“நீங்கள் எனது ஆலோசகராகவும், பிரபாகரன் எனது தளபதியாகவும் இருப்பீர்களானால் நான் இலங்கையை விரைவில் ஒரு வல்லரசாக உருவாக்கிவிடுவேன்” – இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ – “எங்கள் தனிநாட்டுக் கோரிக்கையை நீங்கள் ஏற்றுக்கொண்டு தமிழீழம் உருவாக்கப்படுமானால் தங்கள் தேசப்பற்றும், அரசியல் சாணக்கியமும் எங்கள் ஆற்றலுடன் ஒன்றுக்கொன்று துணையாக இளைய இலங்கையில் சிநேகபூர்வமான இரு வல்லரசுகள் தோன்றிவிடும்” -தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம். – 1990ம் ஆண்டு இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேற்றப்பட்ட பின்பு இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையே சமாதானப் பேச்சுக்கள் இடம்பெற்ற ...

Read More »

விடுதலையின் அடையாளம் ‘மண்டேலா’ – தமிழ்லீடர் ஆசிரியர்பீடம்

mandela2

“இன ஒடுக்குமுறையாளர்கள் எம் மீது இழைத்த அநீதிகளை நாம் மன்னித்துவிட்டோம். ஆனால் அவற்றை நாம் என்றுமே மறக்கப்போவதில்லை” இது தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியாக கறுப்பின மக்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கிய நெல்சன் மண்டேலா அவர்கள் ஆற்றய சொற்பொழிவின் ஒரு பகுதி. இவை ஒரு பதவியேற்பின் போது வெளியிடப்பட்ட வெறும் அலங்கார வார்த்தைகளல்ல. மக்களுக்காகவும் தான் பிறந்த மண்ணுக்காகவும் தன் வாழ்நாட்களை அர்ப்பணித்த ஒரு விடுதலைப் போராளியின் அடி இதயத்திலிருந்து வெளிவந்த இலட்சிய உறுதியும், பெருந்தன்மையும் கொண்ட சுதந்திரக்குரல். மன்னிப்பது மனித குலத்துக்குரிய பெருந்தன்மை. மறக்காமல் ...

Read More »