ஆசிரியப்பார்வை

புலிகளின் அடையாளங்களை அழிக்க முயலும் மாவை!

maavai

இலங்கைத் தமிழ் மக்களின் வரலாற்றில்  ஆணித்தரமான, அழிக்க முடியாத வீரமும் நியாயமும், இலட்சிய உறுதியும் கொண்ட சாதனைகள் விடுதலைப் புலிகளினால் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்று தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் தேசிய நீரோட்டத்தில் பிரதான பாத்திரம் வகிப்பதற்கும், சர்வதேசம் எமக்காக குரல் கொடுக்கும் நிலை உருவாகியிருப்பதற்கும் விடுதலைப்புலிகளும், எமது மக்கள் சிந்திய இரத்தமும், அனுபவித்த பேரிழப்புகளுமே மூலாதாரம் என்பதை எவருமே மறந்து விட முடியாது. தமிழ் மக்களின் ஒப்பற்ற தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் அர்ப்பணம் மிக்க வழிகாட்டலும், அதன் மூலம் ஈட்டிய வரலாற்று ...

Read More »

அமெரிக்க வல்லரசை மண் கௌவ வைத்த வியட்நாம் விடுதலைப் போர்

leader

ஒரு காலத்தில் ‘ஹோ மாமா” என்று சொல் வியட்நாம் மக்களை விடுதலை வேட்கை கொண்டு சிலிர்தெழ வைக்கும் வேத மந்திரமாக விளங்கியது. வியட்நாம் விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று வழி நடத்திய தலைவர் ஹோ.சி.மின் அவர்களுக்கு வியட்நாம் மக்கள் வைத்த அன்புப் பெயர் தான் ‘ஹோ மாமா”. தலைவர் ஹோசிமின் தலைமையில் தளபதி ஜியாட்பின் நெறிப்படுத்தலில் வியட்நாம் மக்கள் வீரமும், நியாயமும் நிறைந்த விடுதலைப் போராட்டத்தை நடத்தி 1975 இல் சுதந்திர வியட்நாமை உருவாக்கினர். உலகின் அசைக்க முடியாத வல்லரசு என கருதப்பட்ட அமெரிக்கா படுதோல்வியை ...

Read More »

ஆமோனிய மக்களின் உணர்வுகளுடன் நாமும்…

leader

1915ஆம் ஆண்டு ஓட்டமான் சாம்ராஜ்யம் என அழைக்கப்பட்ட துருக்கி சின்னஞ்சிறு ஆமோனியா மீது பெரும் படையெடுப்பை மேற்கொண்டது. அதை எதிர்த்துக் குரல் கொடுத்த ஆமோனியப் புத்திஜீவிகள் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டனர். மக்கள் பொங்கியெழுந்தனர். ஒரு பெரும் சாம்ராஜ்யத்துக்கு எதிராக சிறிய தேசத்தின் மக்கள் போராட்டக் களத்தில் குதித்தனர். மக்கள் எழுச்சிக்கு முகம் கொடுக்க முடியாத துருக்கிய அரசு பெரும் இனப்படுகொலையைக் கட்டவிழ்த்துவிட்டது. அதில் 15 இலட்சம் ஆமோனிய மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். துருக்கி இன்றுவரையில் அவை உள்நாட்டுப் போரில் இடம்பெற்ற மரணங்கள் எனக் கூறி ...

Read More »

அலையில் எழுந்த நரிகள்!

ain

1977ஆம் ஆண்டில் இலங்கைத் தீவில் இரு பேரலைகள் எழுந்தன. வடக்கு கிழக்கில் தனி நாட்டுக்கோரிக்கை என்ற பேரலை எழுந்து தமிழர் விடுதலைக் கூட்டணிக்குப் பெரும் தேர்தல் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. அவ்வாறே தென்னிலங்கையில் ஜே.ஆர். அலையெழுந்து தென்னிலங்கையில் மாபெரும் தேர்தல் வெற்றியை ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெற்றுக்கொடுத்து நாடாளுமன்றில் மூன்றில் இரண்டுக்கு அந்தப் பெரும்பான்மையை அடைய வழிவகுத்தது. தானுண்டு தன் தொழிலுண்டு என வழக்கறிஞர் தொழில் பார்த்து வந்த இரா.சம்பந்தனை காலஞ்சென்ற அமிர்தலிங்கம் அவர்கள் சட்டத்தரணிகள் கட்சி என்ற மரபின் அடிப்படையில் திருமலை தொகுதியில் ...

Read More »

சனநாயகவெளி : கூட்டமைப்பு பயன்படுத்துகின்றதா? பயப்படுத்துகின்றதா?

leader

இந்தியப்பிரதமரின் இலங்கை விஜயம் எதிர்பார்த்ததை போலவே அனைவரதும் கவனத்தை ஈர்த்திருந்தது. 27 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைத்தீவுக்கு வருகைதந்த பிரதமர் நரேந்திரமோடியின் பயணம் பல்வேறு வகையில் முக்கியமானதாக அமைந்திருந்தது. இலங்கையில் அதிகரித்துவரும் சீனாவின் ஆதிக்கத்தை குறைத்து பிராந்திய வல்லரசு என்ற பெரியண்ணன் அந்தஸ்தை நிலைநிறுத்தவேண்டிய தேவை இந்தியாவுக்கு எப்போதுமே இருந்துவந்தது. பிராந்திய ஒத்துழைப்பு என ஆரம்பிக்கும் இந்த உறவுநிலை பிராந்திய வல்லாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கே எப்போதும் முன்னுரிமை கொடுத்துவந்தது. சிறிலங்காவைப் பொறுத்தவரை இந்தியாவை கையிற்குள் வைத்திருப்பதன் மூலமே சர்வதேசத்தை தனது கையிற்குள் கொண்டுவரலாம் என்பது தெரிந்தவிடயம். இந்தியாவின் ...

Read More »

“நெஞ்சில் நிலைத்த உயிரோவியங்கள்” – தமிழ்லீடர் ஆசியர்பீடம்

leader

‘நவம்பர் – 27′ ஒப்பற்ற தியாகங்களாலும் ஈடிணையற்ற அர்ப்பணிப்புக்களாலும் ஒளியேற்றப்பட்ட உன்னதத் திருநாள்; தாயக விடுதலை என்ற விலைமதிக்க முடியாத இலக்கை எட்டுவதற்காகத் தமது உயிரையே விலையாகத் தந்து எமது மக்களின் மனங்களில் நிலைபெற்றுவிட்ட உத்தமர்களை நினைவு கூரும் அற்புதத் திருநாள்; மனித வாழ்வில் சாவென்பது இயற்கையானது. அந்த வாழ்வை மக்களுக்கான வாழ்வாக வாழ்வது, அந்தச் சாவை மக்களுக்காகவே சாவது என்பது வரலாறே தலைவணங்கும் ஒரு உயரிய வேள்வியாகும். அந்த வேள்வியில் தாமாகவே விரும்பிக் குதித்து விடுதலைச் சக்கரத்தை முன் தள்ளும் பணியில் தம்மை ...

Read More »

“தமிழீழக் கோரிக்கையை கைவிடுங்கள்” தமிழகத்தில் மூக்குடைபட்ட ‘சம்பந்தன்’!

sampanthan1

“பாரதப் பிரதமர் நரேந்திரமோடி எம்முடனான உரையாடலின் போது தலைவர் சம்பந்தனை இலங்கையின் கௌரவமான ஒரு தலைவர் என பாராட்டியது எமக்கு மிகுந்த பெருமையாக இருந்தது” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா சில நாட்களின் முன்னர் நெகிழ்ந்து போய் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணல்கள் செய்திகளாக பத்திரிகைகளை அலங்கரித்திருந்தன. உண்மையில் சம்பந்தன் கௌரவம் மிக்க தலைவராக தன்னை அடையாளப்படுத்துவதற்கு கடந்த சில நாட்களாக மேற்கொண்டுவரும் பகீரப்பிரயத்தன முயற்சிகள் பற்றி வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு தமிழ்லீடர் விருப்பார்வம் கொண்டிருக்கிறது. சுவாமி சொன்னது ஒன்று, ...

Read More »

அனந்திக்கு எதிரான அரசியல்; மாவை MPக்கு திறந்த மடல்! – தமிழ்லீடர் ஆசிரியர்பீடம்!

ananthi-mavai

கடந்த தேர்தல்களில் மக்களின் மனங்களை வென்று பெரிய வெற்றியீட்டிய நாம் மக்களின் மனங்களை இப்போதுவெல்லத் தவறி பதவிகளுக்காக எங்களுள் மோதிக்கொண்டிருக்கிறோம். சிலர் வேறு கட்சிகளின் தூண்டுதலின் பேரில்கட்சிக்குள் குழப்பங்களை விளைவித்து வருகின்றனர்”. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரில் ஒருவரிடம் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா சுன்னாகத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சந்திப்பின் போது வெளியிட்ட கருத்து. நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களே! தாங்கள் இளம் வயதிலிருந்தே ஒரு தீவிர தமிழ் உணர்வாளராகவும், பல போராட்டங்களில் நேரடியாக இறங்கிப் பல இன்னல்களைச் ...

Read More »

‘மே 18’ அன்றைய பாரதம் இன்றதன் ஞாபகம்!

inraiyabaratham

கைலை மலையின் தெய்வத்திருமணம்! பரமசிவனுக்கும் உமாதேவிக்கும் நடக்கும் திருமண வைபத்தைக் காண முப்பத்து முக்கோடி தேவர்களும், தேவகணங்களும், அசுரர்களுமெனப் பல கோடி ஜீவன்கள் கைலையங்கிரியை நிறைத்துவிட்டன. பூமாதேவி பாரம் தாங்க முடியாத நிலையில் வடக்கு தாழ ஆரம்பித்துவிட்டது. தெற்கு உயர ஆரம்பித்துவிட்டது. தன் சம நிலை குலைவதை உணர்ந்த பூமித்தாய் அலறியடித்துக் கொண்டு ஓடிச்சென்று ஆதிசிவனிடம் முறையிட்டாள். அவர் ஒரு புன்னகையுடன் அகத்தியரை அழைத்து தெற்கே போகும்படி கட்டளையிடுகிறார். அவரும் ஆண்டவன் கட்டளைக்கமைய பொதிகையை அடைகிறார். பூமி சமநிலையடைகிறது! கோடிக்கணக்கான தேவர்கள், அசுரர்கள், கணங்கள் எல்லாவற்றின் ...

Read More »

சுமந்திரனின் வடமராட்சி வண்டிலும்! விக்கியின் தலைமைக் கனவும்!

Sumanthiran-vandil2

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை கட்சியாகப் பதிவு செய்தல், சர்வதேச விவகாரங்களைக் கையாள்வதற்காக உயர்மட்டக்குழு நியமனம் என்று கூட்டமைப்பின் திடீர் ஞானோதயத்தின் தொடராக கூட்டமைப்பு அலுவலகங்கள் திறக்கும் நிகழ்வுகளும் தொடங்கியுள்ளதன் பின்னால் உள்ள சூத்திரத்தன்மைகள் தொடர்பில் மக்களைத் தெளிவுறுத்தவேண்டிய கடப்பாடு உணரப்பட்டுள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்டத் தலைமைகளாகச் சொல்லப்படுகின்ற இரா.சம்பந்தன், சி.வி.விக்னேஸ்வரன், தேசியப்பட்டியல் சுமந்திரன் ஆகியோரைத் தமிழ் மக்களின் தலைமைகளாகத் தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு தமிழ் மக்கள் விரும்புகிறார்களோ இல்லையோ சிங்கள இனவாத அரசாங்கம் விரும்புகின்ற வகையிலேயே குறித்த அரசியல்வாதிகள் மூவரும் தொடர்ந்தும் செயற்பட்டுவருகின்றனர். இந் ...

Read More »