தொடர்கள்

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 05

nkna

சிவமும் கணேசும் நீண்டகாலமாகவே ஒரே அணியில் போராட்டங்களில் கலந்துகொண்டதாலோ என்னவோ இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக விளங்கினர். இருவரும் ஒரே விதமான சிந்தனைப் போக்குக் கொண்டவர்களாகவும், ஒரே விதமான ரசனை உள்ளவர்களாகவுமிருந்தனர். குடாரப்பு மாபெரும் தரையிறக்கத்தின் போது இருவருமே ஒன்றாக களமிறங்கினர். வெற்றிலைக்கேணியிலிருந்து கொந்தளித்துக்கொண்டிருந்த  கடலில் படகுமூலம் குடாரப்பு நோக்கிப் பயணித்தபோது கடல் பற்றிய எந்த ஒரு அனுபவமும் இல்லாத சிவத்துக்கு கணேஸ்தான் தைரியமூட்டினான். ஒரு புறம் ஆனையிறவு இராணுவத்தின் முன்னேற்ற முயற்சி, மறுபுறம் முகமாலை இராணுவத்தின் நகர்வு நடவடிக்கைகள், எறிகணை வீச்சுக்கள், கிபிர் ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 04

bookebaylow

சங்கரசிவம் ஏற்கனவே எதிர்பார்த்ததுபோன்று முன்னரங்கத் தாக்குதல்கள் இலகுவாக இருக்கவில்லை. திடீரென விளக்குகள் அணைந்ததாலும், அதேவேளையில் ரவைகள் அடர்த்தியாக வந்து கொண்டிருந்ததாலும் சில நிமிடங்கள் தடுமாறிப் போன படையினர் சில நிமிடங்களில் தம்மை சுதாகரித்துக்கொண்டு திரும்பித் தாக்க ஆரம்பித்தனர். அந்தச் சில நிமிடங்களில் காயப்பட்டவர்களையும் இறந்தவர்களையும் தூக்கிக் கொண்டு சிலர் ஓடுவது மங்கிய நிலவொளியில் அவனின் கண்களில் பட்டது. கண்ணிவெடிகளை அடையாளம் கண்டு அவற்றினை செயலிழக்கச் செய்தவாறே துரிதமாக போராளிகள் முன்னேற ஆரம்பித்தனர். முன்னரங்கில் நின்ற படையினர் முழுமையாகவே பின் வாங்கிவிட்டனர். எனினும் அந்த வரிசையில் ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 03

nkna

அன்று மதிய உணவு முடிந்த பின்பு அணித்தலைவர்களையும் குழுக்களுக்குப் பொறுப்பானவர்களையும் தளபதி அழைத்திருந்தார். அவர் தாக்குதல் திட்டங்களை வரைபடம் மூலம் விளக்கினார். “இண்டைக்கு நாங்கள் எதிரி எதிர்பார்க்காத நேரத்திலை, அவன் எதிர்பாராத விதமான ஒரு தாக்குதலை நடத்தப்போறம்” அவர் இப்படிச் சொல்லிவிட்டு இடைநிறுத்தியபோது அனைவரும் அவரின் முகத்தை ஆவலுடன் நோக்கினர். அவர் தாக்குதல் திட்டம் வரையப்பட்டிருந்த படத்தை ஒரு தடியால் குறிப்பிட்டுக் காட்டியவாறு கூற ஆரம்பித்தார். “எதிரி தன்ர பிரதான முகாமிலயிருந்து ஒரு வால் போன்ற வடிவத்திலை முன்னேறி அரண் அமைச்சிருக்கிறான். முதல் தாக்குதல் ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 02

bookebaylow

பண்டிவிரிச்சானுக்குச் சென்ற பரமசிவத்தால் எதையுமே திடமாக அறிய முடியவில்லை. போராளிகளிடம் விசாரித்த போது எவரும் காயப்பட்டோ, வீரச்சாவடைந்தோ வரவில்லை எனவும் முள்ளிக்குளத்துக்குள் இராணுவம் இறங்கிவிட்டது என்பதையும் மட்டும் அறிய முடிந்தது.அப்படியானால் சண்டை எதுவும் நடைபெறாமலே இராணுவம் முன்னேறியிருக்க வேண்டும் என்றே கருதவேண்டியிருந்தது. ஆனால் இரவு, பகலாக மழை, வெயில், பனி என்பவற்றைப் பொருட்படுத்தாமல் எல்லை காக்கும் போராளிகள் எந்தவித எதிர்ப்புமின்றிப் படையினரை முன்னேற விட்டிருப்பார்கள் என்பதை அவரால் நம்பமுடியவில்லை. பல்லாயிரம் சில் வண்டுகள் ஒன்றாக ஒலித்துவிட்டு திடீரென நிறுத்தும் போது ஏற்படும் ஒரு விதமான ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 01

nkna

மெல்ல மெல்லக் கிழக்கு வெளித்துக் கொண்டிருந்த அதிகாலைப் பொழுதில் வேலிக்கரை வேம்பில் ஒரு குச்சியை முறித்து பற்களைத் தீட்டியவாறே தென் கிழக்குப் பக்கமாக காட்டு மரங்களுக்கு மேல் தெரிந்த வானத்தைப் பார்த்தார் பரமசிவம் அண்ணாவியார். அது வழமை போலவே மங்கலான ஒரு நீல நிறத்திலேயே படர்ந்து கிடந்தது. ஆனால் மெல்ல மெல்ல அது செந்நிறமடையும் போதே சூரியன் உதிக்கும் என்பதையும் காட்டுமரங்கள் செவ்வண்ணம் படரும் என்பதையும் அவர் அறிவார். ஆனால் தென்கிழக்குத் திசையின் பற்றைகளும், மரங்களும் அடர்ந்த நிலப்பகுதி சூரியனின் வரவின் பல மணி ...

Read More »