தொடர்கள்

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 52

bookebaylow

பொழுது விடிவதற்கு முன்பாகவே சகல அணிகளும் வாகனங்களில் ஏற்றப்பட்டு பல்லவராயன்கட்டிலுள்ள ஒரு முகாமுக்கு கொண்டுவரப்பட்டுவிட்டனர். ஏற்கனவே காயமடைந்த போராளிகள் முதலுதவியின் பின்பு நேரடியாகவே கிளிநொச்சி மருத்துவப்பிரிவு முகாமுக்கு ஏற்றப்பட்டுவிட்டனர். வித்துடல்களும் கிளிநொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு பின் அஞ்சலிகளுக்காக அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டன. அன்று முகாம் பெரும் சோகமயமாகவே காணப்பட்டது. போராளிகள் ஒருவருடன் ஒருவர் கதைப்பதே அரிதாக இருந்தது. ஒவ்வொருவரும் ஏதோ தாங்கள் பெரும் குற்றத்தை இழைத்துவிட்டது போன்று மனம் வாடிப்போயிருந்தனர். ஏராளமான தோழர்கள், தோழியரை இழந்தும் கூட முகாம் தாக்குதல் பெரும் தோல்வியில் முடிந்ததை ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 51

nkna

சிறிது நேரத்தில் காலை உணவு வந்தது, எல்லோரும் சாப்பிட்டுவிட்டு தென்னை நிழல்களிலும் இடையிடையே நின்ற மாமரங்களின் கீழும் படுத்து ஓய்வெடுத்துக்கொண்டார்கள். ஆனால் எல்லோர் மனதிலும் ஏதோ ஒரு பெரும் சாதனையை நிகழ்த்தப் போகும் மகிழ்ச்சி படர்ந்து கிடந்தது. சிவத்துக்கு ஓய்வெடுக்க முடியவில்லை. காணியை ஒருமுறை சுற்றிப் பார்ப்பதற்காக முடிவெடுத்த அவன் எழுந்து புறப்பட்டான். ரூபாவும் “சிவம் நானும் வாறன்”, என்றவாறே அவனுடன் இணைந்து கொண்டாள். மலையவன் அவர்களைப் பார்த்து, “இரண்டு தளபதியள் வாறமாதிரித்தான் கிடக்கு”, என்றான் கேலியாக. உண்மையாகவே அவர்களின் அந்த உயரமான கட்டுமஸ்தமான ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 50

bookebaylow

தொலைத்தொடர்பு அறையிலிருந்து சிவம் சிரித்த முகத்துடன் வெளியே வந்தான். சுகுணன் ஆவலுடன் அவனிடம் போய், “என்ன சிவமண்ணை என்னவாம்?”, எனக் கேட்டான். சிவம், “ஒரு பெரிய தாக்குதலுக்கு எந்த நேரமும் திடீரெண்டு வெளிக்கிடத் தக்க வகையில் தயாராய் இருக்கட்டாம்”, என்றான். அவன் வார்த்தைகளில் எல்லையற்ற மகிழ்ச்சி இழையோடியது. “பெரிய தாக்குதலோ… எதுவாயிருக்கும்?” எனக் கேட்டாள் ரூபா. “அதைப்பற்றி ஒண்டும் சொல்லேல்ல.. வழக்கமாய் சொல்லுறேல்ல தானே.. நான் நினைக்கிறன்..”, எனக் கூறிவிட்டு இடை நிறுத்தினான் சிவம். “சொல்லுங்கோ.. நினைச்சதும் நான் நினைச்சதும் ஒண்டோ எண்டு பாப்பம்”, ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 49

nkna

ஓமந்தை ரம்பைக் குளத்திலிருந்து மூன்றுமுறிப்பு, பனங்காமம் வரையான பகுதி நீண்டகாலமாகவே அமைதியாக இருந்தது. எனினும் ஓமந்தைப் படையினர் இடையிடையே காடுகள் வழியாகச் கொத்தம்பியா குளத்தை நெருங்க முயல்வதும் பலமாக அடி விழுந்ததும் திரும்பி ஓடுவதுமாக சிறு சிறு சண்டைகள் நடப்பதுண்டு. ரம்பைக் குளத்திலிருந்து ஒரு புறம் புளியங்குளம் வரையான ஏ – 9 வீதி மறுபுறம் சின்னப்புவரசங்குளம் வரையான பகுதி திவ்வியனின் தலைமையிலான படையணியின் பொறுப்பிலேயே இருந்தது. சின்னப் புவரசங்குளத்திலிருந்து பனங்காமம் வரையான பகுதியின் பாதுகாப்பை நகுலா தலைமையிலான மகளிர் படையணியே பாதுகாத்தது. சேமமடு ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 48

bookebaylow

அன்றும் சுந்தரம் வித்துடல் அஞ்சலி மாவீரர் துயிலும் இல்லப்பணிகள் என போராளிகளுடன் இணைந்து சகல வேலைகளையும் முடித்துவிட்டு வந்த போது நேரம் எட்டுமணியைத் தாண்டிவிட்டது. அன்று 32 வித்துடல்கள் வந்திருந்தன. ஒவ்வொரு நாளும் வரும் வித்துடல்களின் தொகையைப் பார்க்கும் போது அவர்களின் இடத்தைத் தங்களைப் போன்றவர்களே இட்டு நிரப்ப வேண்டும் என்ற எண்ணத்தை அது மேலும் மேலும் வலுப்படுத்தியது. எப்படியும் திருமணம் முடித்தால் தான் தன் பெற்றோரை முத்தம்மாவின் பொறுப்பில் விட்டுப் போகலாம் என்ற நிலைமையில் அவன் அவளின் முடிவை அறியத் தவித்தான். அவளோ ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 47

nkna

யோசப் குறிப்பாக அந்தப் பெண்ணை ஏன் அழைத்தார் என்பதை அருட்சகோதரரால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனினும் அந்த மக்கள் யோசப்பை மிகவும் மதித்தனர் என்பதை அவர் அறிந்திருந்தார். அருகில் வந்த அந்தப் பெண்ணிடம் யோசப், “றோசம்மா.. நீங்கள் ஏன் மடுவுக்கு வந்தனீங்கள்”, எனக் கேட்டார். அவள் தயங்கியபடி, “யாழ்ப்பாணத்திலை இருக்க முடியாமல் தான்”, எனப் பதிலளித்தார். “ஏன், அப்பிடி என்ன பிரச்சினை?” “வெள்ளை வானில வந்தவங்கள் என்ரை புருஷனை வீட்டு முத்தத்திலை வைச்சு சுட்டுப்போட்டு போட்டாங்கள். பிறகு ஒரு நாள் வந்து மகனைக் கொண்டு ...

Read More »

வலிசுமந்த பதிவுகள்- 13 (வெறுமை)

vp13

18-05-2009 அன்றையநாட்பொழுதும் புலர்ந்தது. காலையிலேயே கதிரவன் தனது கடமையை நிறைவாகச்செய்யத் தொடங்கியிருந்தான். நாங்களும் படையினரால் மேற்கொள்ளப்படுகின்ற உடற்சோதனைகளுக்குச் செல்வதற்கான வரிசையில் சேர்ந்துகொண்டோம். அந்த மக்களின் வரிசை மிகவும் நீண்டிருந்தது. நாங்கள் பின்வரிசையிலேயே நின்றிருந்தோம். எறும்புக்கூட்டம் நகர்கின்ற வேகத்திலும் குறைவான வேகத்திலேயே இந்த மக்கள்வரிசை நகர்ந்துகொண்டிருந்தது. கதிரவனும் எம்மக்கள்மீது கருணைகாட்டவில்லை. தனது வெப்பக்கதிர்களை பாரெங்கும் அள்ளிவீசினான். அந்த முல்லைத்தீவுக்கரைச்சிவெட்டையில் எங்காவது ஒருசிறுநிழல்கூடக்கிடைக்காதா என்று எனது மனம் அங்கலாய்த்துக்கொண்டிருந்தது. சுற்றுமுற்றும் அவதானித்தேன். ஆனால் எனக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. வெப்பமிகுதியால் உடலெங்கும் வியர்த்தொழுகியதோடு நாவு தொண்டை வரண்டு தண்ணீர்த்தாகம் ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 46

bookebaylow

அருட்சகோதரர் ஒரு புன்னகையுடன் திரும்பி கந்தசாமியைப் பார்த்துவிட்டு, “கந்தசாமி நீங்கள் சொல்லுறதிலை இருக்கிற நியாயம் எனக்கு விளங்குது எண்டாலும் விசாரித்து முடிக்க முன்பு தீர்ப்பு வழங்க முடியாதல்லே?” என்றார். கந்தசாமி அமைதியானான். பின்பு அவர் துணை இராணுவக்குழுவைச் சேர்ந்தவனைக் கேட்டார். “நீ பொய் சொல்லித்தான் பள்ளிமுனை ஆக்களைக் கூட்டி வந்தனீ, இல்லையே?” அவன் அனுங்கும் குரலில் தயங்கியவாறே, அப்படித்தான் கொமாண்டர் சொல்லிவிட்டவர்”, என்றான். அருட்சகோதரர் எல்லோரையும் ஒரு முறை பார்த்துவிட்டுச் சொன்னார், “ரணகோஷ நடவடிக்கையின் போது மடு சின்னக் கோவில் மேலை எறிகணை வீசி ...

Read More »

வலிசுமந்த பதிவுகள்- 12 (தோல்வி)

vp12

2009-ம்ஆண்டு மேமாதம் 16-ம்நாள் மாலைவேளயில் சுமார் இருபத்தையாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் யுத்தவலயமான வெள்ளாம்முள்ளிவாய்க்கால்ப்பகுதியிலிருந்து முதற்தடவையாக வட்டுவாகல் வழியாக முல்லைத்தீவிற்குச் சென்று அரசபடையினரிடம் சரணடைந்தார்கள். எதிர்பார்த்த தொகையைவிட மக்கள் அதிகப்படியாக சரணடைய வந்துகொண்டிருந்ததால் படையினருக்கும் நிலைமையை சமாளிக்கமுடியாமற்போய்விட்டது. இதனால் மாலை 6.00 மணிக்குப் பிற்பாடு பொதுமக்களை தமது கட்டுப்பாட்டுப்பகுதிக்கு உள்ளே எடுக்கும் பணியை படையினரே நிறுத்திவிட்டார்கள். அன்றையதினம் அதாவது 16-ம்நாள் சரணடைந்த மக்களை முல்லைத்தீவில் வட்டுவாகல்-செல்வபுரம் ஆகிய கிராமங்களுக்கு தெற்குப்புறமாகவுள்ள கரைச்சி வெளிப்பகுதியில் தங்கவைத்திருந்தார்கள். அந்த வெளிப்பகுதியைச் சூழவும் முட்கம்பிவேலி அமைத்திருந்தனர் படையினர். மேமாதம் 16-ம் ...

Read More »

வலிசுமந்த பதிவுகள்- 11 (துயரம்)

vp11

2009-ம்ஆண்டு மேமாதம் 10-ம்நாளன்று முள்ளிவாய்க்கால்ச் சந்தியை அரசபடையினர் ஆக்கிரமித்துக் கொண்டதையடுத்து போர்ச்சூழல் மேலும் தீவிரமடைந்தது. வானத்தில் பட்டாசுகள் வெடித்ததைப் போலவே கனரகத் துப்பாக்கிகளின் ரவைகள் இரவு பகலாக சடசடத்துக்கோண்டேயிருந்தன. போதாக்குறைக்கு எறிகணைகளும் கொத்துக்குண்டுகளும் ஆங்காங்கு வீழ்ந்துவெடித்துக்கொண்டிருந்தன. மகிந்தஅரசு தாம் யுத்தத்தில் கனரகஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம் என்று அன்றைய இந்தியஅரசின் மன்மோகனசிங் தலைமையிலான மத்தியஅரசிற்கு உறுதிமொழி வழங்கியிருந்த போதிலும் வன்னியில் இறுதியுத்தம் முடிவுற்ற 2009-ம்ஆண்டு மேமாதம் 18-ம்நாள் வரையிலும் கனரக ஆயுதங்களையும் சர்வதேசத்தால் தடைசெய்யப்பட்ட குண்டுகளையும் யுத்தத்தில் பயன்படுத்தினார்கள் என்பதற்கு யுத்தவலயத்தில் இறுதியாக அகப்பட்டிருந்த மூன்று லட்சம் ...

Read More »