நீந்திக்கடந்த நெருப்பாறு

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 16

bookebaylow

அந்த மரத்தை நோக்கிய போது அவர்கள் நிற்குமிடம் கஜுவத்தை இராணுவமுகாமிலிருந்து நான்கு அல்லது ஐந்து கிலோமீற்றருக்குள்ளேயே இருக்க வேண்டுமென சிவம் ஊகித்துக் கொண்டான்.சின்னப்பர் சொன்னார், “இப்பிடியே நேர கஜூவத்தையை நோக்கிப் போனமெண்டால் இடையில ஒரு பெரிய கஞ்சாத் தோட்டம் கிடக்குது. அது ஒரு சிங்களவன் நடத்துறான். நாலு பக்கமும் கடுமையான காவல். ஆர் அந்தப் பக்கம் போனாலும் வெடிதான்.. கதை பேச்சுக்கே இடமில்லை”. முருகரும் அந்தக் கஞ்சாத் தோட்டம் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். ஆனால் இராணுவ முகாமுக்கு அண்மையில் கஞ்சாத் தோட்டம் இருப்பதைக் கேள்விப்பட்ட போது ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் -15

nkna

சுந்தரம் எதுவும் பேசாமல் போனமை அவளுள் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது. அவனும் பதிலுக்கு ஏதாவது சொல்லித் தன்னுடன் சண்டையிட்டிருப்பான் என்றே எதிர்பார்த்தாள். அவனின் பின்னால் ஓடிச்சென்று அவனைச் சமாதானப்படுத்த வேண்டும் என ஒரு உணர்வு அவளை உந்தித் தள்ளிய போதும் தாய் வேலம்மா அருகில் நின்ற காரணத்தால் சிரமப்பட்டு அந்த எண்ணத்தை அடக்கிக்கொண்டாள்.கடகத்தை நிரப்பும் முகமாக மிளகாய்களை வேகமாக ஆய ஆரம்பித்தாள். பத்து பதினைந்து நிமிடங்களில் அரைக்கடகம் நிறைந்துவிட்டது. கைகள் மிளகாய்களை ஆய்ந்த போதும் கண்கள் அடிக்கடி கொட்டில் வாசலை நோக்கிப் பாய்ந்தன. அவன் வெளியில் ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 14

bookebaylow

ஒரு பெரிய முதிரை மரத்திலிருந்து பாய்ந்து வந்த ஒளி சின்னப்பரின் ஐந்து பற்றி லைற்றிலிருந்துதான் வருகிறது என முருகர் ஊகித்துக் கொண்டார். மரத்திலிருந்து, “அடி.. அடி.. நில்லடி.. கறுப்பி!”, என்ற அதட்டல் வந்ததும் நாய்கள் இரண்டும் அப்படியே நின்றன. “அது.. சின்னப்பண்ணை.. நானண்ணை”, என்றார் முருகர்.சின்னப்பர் மரத்திலிருந்து இறங்கிக் கீழே வந்தார். “இப்ப நாலைஞ்சு நாளாய் காடுவளிய சில வித்தியாசங்கள் கண்ணிலை படுது. ஆரோ புது ஆக்கள் நடமாடுற மாதிரிக் கிடக்குது. அதுதான் காடு சரசரத்ததோடை துவக்கோடை ஒளியில ஏறியிட்டன்”, “இஞ்சை ஆர்.. என்னைப் ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 13

nkna

அப்பகுதியில் குறிப்பிட்டளவுக்குப் பெரிய முகாம்களாக முருங்கன், பறையனாலங்குளம், மடுவீதி என்பனவே இருந்தன என்பதை “வேவு”ப் போராளிகள் மூலம் சிவம் அறிந்திருந்தான். ஏனைய சிறு முகாம்களிலும் காவலரண்களிலும் பகலில் நின்றுவிட்டு இரவில் பிரதான முகாம்களுக்குப் போய்விடுவார்கள். முருகர் சொன்னார், “இப்ப நாங்கள் மடுறோட்டுக்கும் பறையனாலங்குளத்துக்கும் இடையில நிக்கிறம். ஒரு காக்கட்டை போக மன்னார் றோட்டில மிதக்கலாம்”. “அதுக்கை அவங்கடை காவலரண் ஒண்டுமில்லையே?” “இருக்குது. பொழுது பட்டால் அதிலை நில்லாங்கள்”, என்றார் முருகர். நன்றாகப் பொழுது படும் வரை நால்வரும் ஒரு மறைவான இடத்தில் அமர்ந்தனர். புள்ளினங்களின் ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 12

bookebaylow

சிவம் சிறிது நேரம் இருந்துவிட்டு புறப்படுவதற்குத் தயாரானான். கணேஸ் கண்களாலும், ஒரு புன்னகையாலும் விடை கொடுத்தான். ரூபா சிவத்துடன் வெளிவாசல் வரையும் கூடவே வந்தாள். சிவம் ஒரு மெல்லிய சிரிப்புடன், “ரூபா.. அடிக்கடி அவனுக்கு தலையை வருடி விடுங்கோ.. அப்ப தான் கெதியா சுகம் வரும்”, என்றான்.“சிவம்”, என்ற ரூபாவின் குரல் சற்று அழுத்தமாகவே ஒலித்தது. “என்ன ரூபா?” எனக் கேட்டான் அவன். ஏன் திடீரென அவளின் குரல் அப்படி மாறியது என அவனால் புரிந்து கொள்ளமுடியவில்லை. “அவர் அந்த நிலைமையில இருந்ததால தவிர்க்க ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 11

nkna

ஒரு புதிய தாக்குதல் திட்டத்தைச் சொல்லி தலைவரிடம் அனுமதி கேட்டபோது அதற்குப் பதிலாக ஐநூறு தோப்புக்கரணம் தண்டனையாக வழங்கப்பட்டதென்றால் அது நிச்சயமாக ஒரு படுபிழையான திட்டமாகவே இருக்கவேண்டும் என சிவம் ஊகித்துக் கொண்டான்.அந்த அதிகாலை வேளையிலும் கூட உடல் முழுவதும் வழிந்தோடிய வியர்வையை ஒரு துணியால் துடைத்தவாறே, “சிவம்” இருங்கோ நான் அண்ணைக்கு அறிவிச்சுப்போட்டு வாறன்” என்றுவிட்டு உள்ளே போனார் தளபதி. தலைவரிடம் தண்டனை பெறுமளவுக்கு அப்படி என்ன மோசமான திட்டமாயிருக்கும் எனத் தனக்குள்ளேயே கேள்வியை எழுப்பியவாறு காத்திருந்தான் சிவம். சிறிது நேரத்தில் வெளியே ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 10

bookebaylow

ஆசிரியையும் அவரின் கணவரும் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தி பாலம்பிட்டி, மடு, பண்டிவிரிச்சான் என எல்லாக் கிராமங்களிலும் பரவிவிட்டது. எங்கும் ஒரு அச்சம் கலந்த பரபரப்பே நிலவியது.அன்று பரமசிவம் நேரத்துக்கே மாடுகளை சாய்த்துக்கொண்டு வந்து பட்டியில் அடைத்துவிட்டு முற்றத்துக்கு வந்தபோது சுந்தரசிவம் அங்கு காணப்படாததால் அவன் எங்கு போயிருப்பான் என்ற கேள்வி அவருக்கு எழுந்தது. “இஞ்சரப்பா, உவன் தம்பி எங்கை போட்டான்?” எனப் பலமாகக் கேட்டார். அடுக்களைக்குள்ளிருந்த பார்வதி, “காலமை பெருமாளைக் கொண்டு போய் பண்டிவிரிச்சானிலை விட்டவனல்லே; ஏத்திவரப் போட்டான்”, என்றாள். “சரி, சரி.. ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 09

nkna

சிவம் மருத்துவப் பிரிவு முகாமைச் சென்றடைந்தபோது அதன் பொறுப்பாளரான மருத்துவப் போராளி நிமலன் வாசலில் நின்றிருந்தான். “என்ன நிமலன் – கணேஸ் பாடு எப்பிடியிருக்குது?; எனக் கேட்டான் சிவம். எந்த நெருக்கடி நேரத்திலும் நிமலன் சிரித்த முகத்துடனேயே பணியாற்றுவான். அன்று அவனின் முகம் சற்று வாட்டமடைந்திருப்பதைச் சிவம் அவதானிக்கத் தவறவில்லை. நிமலன் நேரடியாக எந்தப் பதிலையும் கூறாமல்; ரூபாக்கா வந்திட்டா. அவ தான் அங்க பக்கத்தில நிக்கிறா” என்றான். சிவம் கணேஸ் படுத்திருக்கும் அறையை நோக்கிப் போனான். கணேசுக்கு இன்னும் செயற்கைச் சுவாசம் ஏற்றப்பட்டுக்கொண்டேயிருந்தது. ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 08

bookebaylow

சுந்தரசிவம் பெருமாள் வீட்டுக்குப் போன போது ஆஸ்மா காரணமாகப் பெரும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அந்தச் சிறு குடிசைக்கு வெளியே நிற்கும் போதே மூச்சிழுக்கும் ஒலி சுந்தரத்தின் காதில் விழுந்தது.அவன் குடிசைக்குள் போன போது முத்தம்மா ஒரு போத்தலில் சுடுநீரை விட்டு அவரின் நெஞ்சில் ஒத்தடம் கொடுத்துக்கொண்டிருந்தாள். “எழும்புங்கோ, ஆஸ்பத்திரிக்குப் போவம்”, என்றவாறே கையைக் கொடுத்துத் தூக்கிவிட்டான் சுந்தரம். அவரால் நிமிர்ந்து நிற்கக் கூட முடியவில்லை. முத்தம்மா ஒருபுறமும் அவன் ஒரு புறமுமாகப் பிடித்து வெளியே கொண்டு வந்தனர். “எப்பிடித் தம்பி சைக்கிளிலை இருக்கிறது?” என ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 07

nkna

வோக்கியின் அருகில் தூக்கமும் விழிப்புமான சலன நிலையில் அமர்ந்திருந்த புனிதன் நீண்ட நேரமாக வெளியே போன சிவம் திரும்ப வராத காரணத்தால் எழுந்து வெளியே வந்து பார்த்தான். வானத்தையே பார்த்துக் கொண்டிருந்த சிவத்திடம் “என்னண்ணை.. தனிய இருந்து கடுமையாய் யோசிக்கிறியள்?” எனக் கேட்டான்.சிவம் அவனைப் பார்க்காமலே, “கணேசுக்கு பயப்பிடுற மாதிரி ஒண்டும் நடவாது”, என்றான். புனிதனுக்கு எதுவுமே புரியவில்லை, “என்னண்ணை சொல்லுறியள்”, எனத் தடுமாற்றத்துடன் கேட்டான். அப்போது தான் சிவம் தன்னையறியாமலே ஏதோ நினைவுகளில் உளறிவிட்டதை உணர்ந்தான். பின்பு சமாளித்தவாறே, “கணேசுக்கு கொஞ்சம் கடுமையான ...

Read More »