நீந்திக்கடந்த நெருப்பாறு

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 26

bookebaylow

பரமசிவம்பிள்ளையின் குடும்பத்தினர் பெரியமடுவுக்கு வந்து சேர நேரம் காலை பதினொரு மணியைத் தாண்டிவிட்டது. பெரியமடுக்குளத்துக்கு அண்மையில் நின்ற ஒரு கிளைவிட்டுப் படர்ந்திருந்த ஒரு பெரிய ஆலமரத்தின் நிழலில் வண்டியை நிறுத்தினார் பரமசிவம். மாடுகளை அவிழ்த்து குளத்தில் தண்ணீர் காட்டிவிட்டு புற்கள் நிறைந்த இடத்தில் மேயக் கொண்டு போய்விட்டார். நான்கைந்து ஊர்களின் மக்களை அந்த சிறிய கிராமத்தில் அடக்குவது அவ்வளவு சுலபமான காரியமாக இருக்கவில்லை. எனினும் அந்த ஊர் மக்கள் தங்கள் காணிகளில் எல்லோருக்கும் இடம் கொடுத்தனர். ஒவ்வொரு காணிகளிலும் பதினைந்து இருபது குடும்பங்கள் தங்க ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 25

nkna

தொடர்ச்சியாக ஏறக்குறைய மூன்று வாரங்கள் எவ்வித மோதல்களுமின்றியே கழிந்தன. அது புயலுக்கு முன்பு கடலில் ஏற்படும் மரண அமைதி போன்று ஒரு பயங்கரத் தோற்றம் என்பதை எவருமே உணர்ந்து கொள்ளவில்லை. தம்பனை முன்னரங்கக் காவலரண்கள் சிவத்தின் பொறுப்பிலேயே இருந்தன. சிவம் மிகவும் விழிப்புடனேயே நிலைமைகளை அவதானித்து வந்தான். ஒன்றுவிட்ட ஒரு காவலரணில் மகளிர் படையணிப் போராளிகளே அமர்த்தப்பட்டிருந்தனர்.வதனி நடுச்சாம வேளைகளில் தேனீர் தயாரித்து அருகிலுள்ள காவலரண்களுக்கும் கொடுப்பாள். அவள் ஒரு நல்ல சண்டைக்காரியாக இருந்த போதும் சிறுபிள்ளை போன்று எல்லோருடனும் கலகலப்பாகப் பழகுவாள். அவள் எல்லோரையும், ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 24

bookebaylow

சிறப்புத்தளபதி திடீரென மயங்கி விழுந்துவிட்டாரெனவும், பதினைந்து நிமிடங்களுக்கு மேலாகியும் நினைவு திரும்பவில்லையெனவும், அவரை அவசரமாக அம்புலன்சில் கிளிநொச்சியில் இயங்கும் பிரதான மருத்துவப் பிரிவு முகாமிற்குக் கொண்டு சென்றுவிட்டனர் எனவும் சிவம் அறிந்த போது அதிர்ந்தே போய்விட்டான். அவன் அப்படியான ஒரு நிலைமை ஏற்படும் என சற்றும் எதிர்பார்க்கவில்லை.அவர் ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரைத் தொடர்ந்து ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் வலியுறுத்திய போதும் அவர் அதைப் பொருட்படுத்துவதில்லை. அவர் நித்திரை கொள்வதை அவன் என்றுமே கண்டதில்லை. நோய்த் தாக்கம் அதிகமாகும் போது கூட அதைப் பொருட்படுத்தாமல் ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 23

nkna

சிவம் மரத்தின் மீது தொலைநோக்கியுடன் விட்டிருந்த போராளி விரல்களை விரித்து ஆறு எனச் சைகை செய்தான். பாதையின் இரு புறங்களிலும் மறைவாகப் படுத்திருந்த போராளிகள் படையினரின் வரவை மிகவும் அவதானமாகக் கவனித்துக் கொண்டிருந்தனர்.சிறு சத்தங்களிலிருந்து அவர்கள் நெருங்கி விட்டதைச் சிவம் புரிந்து கொண்டான். அவனின் விரல்கள் விசையை அழுத்தத் தயாராகியிருந்தன. வந்த படையினரில் ஒருவன் ஏதோ ஒரு அசைவைக் கவனித்துவிட்டிருக்கவேண்டும். ஏதோ சிங்களத்தில் கத்தியவாறு சிவத்துக்கு எதிராகப் பாதையின் மறுபக்கத்தில் இருந்த பற்றையை நோக்கிச் சுட்டவாறு நிலத்தில் படுக்கமுயன்றான். ஆனால் நிலத்தில் விழுந்து படுப்பதற்கு ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 22

bookebaylow

இரு புறங்களிலிருந்து பறந்துவந்த விமானங்கள் குண்டுகளை வீசிவிட்டு மேலெழுந்த போது தரையிலிருந்து விமான எதிர்ப்பு பீரங்கிகள் முழங்கத்தொடங்கின. உடனடியாகவே இரு கிபிர் விமானங்களும் வான்பரப்பைவிட்டு மறைந்தன. பெரியபண்டிவிரிச்சான் பாடசாலைப் பக்கம் புகைமண்டலம் எழுந்தது. இப்போதெல்லாம் விமானத் தாக்குதல்கள் மக்களுக்குப் பழகிப்போய்விட்டன. ஒவ்வொரு வீடுகளிலும் பதுங்குகுழிகள் அமைக்கப்பட்டிருந்தன. விமானங்கள் போய் சில நிமிடங்களிலேயே இயல்பு நிலை வந்துவிடும். புஷ்பம் புகைமண்டலம் எழும்பிய திசையைப் பார்த்து ஒரு பெரு மூச்சுடன், “பாருங்கோ சிவம்.. கோயிலுக்கு ஷெல் அடிச்சு எங்கடை குடும்பத்தையே அழிச்சாங்கள், இப்ப பள்ளிக்கூடங்களுக்கு விமானத் தாக்குதல் ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 21

nkna

போராளிகள் களத்தை விட்டு நீங்கிச் சிறிது நேரத்திலேயே கிபிர் விமானங்கள் அந்த இடத்தை இலக்குவைத்து குண்டுகளை வீசத் தொடங்கிவிட்டன. கண்காணிப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த சிறு தொகையினரான போராளிகளும் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பான காவலரண்களில் பதுங்கிவிட்டதால் அவர்களில் எவருக்கும் எதுவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. ஏறக்குறைய ஒரு மணிநேரம் நான்கு விமானங்கள் மாறி மாறித் தாக்குதல் நடத்திவிட்டுப் போய்விட்டன. அடுத்த சில நிமிடங்களில் தொடங்கிய எறிகணை வீச்சு மாலையில் நன்றாக இருட்டும் வரை தொடர்ந்தது. பல எறிகணைகள் காடுகளுக்குள்ளும் விழுந்து வெடித்தன. அன்று இரவு சிறப்புத் தளபதி முக்கிய ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 20

bookebaylow

வில்லவனின் வித்துடல் முகாமுக்குக் கொண்டுவரப்பட்ட போது “வோக்கி” அருகில் இருந்த தளபதி உடனடியாகவே எழுந்து வந்தார். அருகில் வந்த அவர் எவரிடமும் எதுவுமே பேசாமல் அவனுக்கு அஞ்சலி செலுத்தினார்.அவர் அவனது குறும்புகளுக்காக அவனுக்கு அடிக்கடி சிறு தண்டனைகள் கொடுத்த போதிலும் அவரும் அவனில் ஒருவித பாசம் வைத்திருந்தார். வழக்கமாக “வில்லவன் எங்க?” எனக் கத்தும் அவனின் கிளி கூட அமைதியாய் இருந்தது சிவத்துக்கு பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. அது ஓரிடத்தில் மிகவும் சோகமாக அமர்ந்திருந்தது. வில்லவனின் வீரச்சாவை அது தனது உள்ளுணர்வால் உணர்ந்து கொண்டுள்ளதாகவே ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 19

nkna

மகளிர் அரசியல்துறைச் செயலகத்தைச் சென்றடைந்த போது தான் பூநகரி புறப்படும் விடயத்தை அங்கு பொறுப்பாக நின்ற பெண் போராளியிடம் தெரிவித்துவிட்டு தனது மோட்டர் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள். அவள் மருத்துவப் பிரிவுக்குச் சென்ற போது கணேஸ் கண்களை மூடியவாறு படுத்திருந்தான்.அவள் மெல்ல, “கணேஸ்”, என அழைத்தாள். அவன் உடனேயே விழிகளைத் திறந்ததிலிருந்து அவன் தூங்கிக்கொண்டிருக்கவில்லை என்பதை அவள் புரிந்து கொண்டாள். “நான் வெளிக்கிடப்போறன்”, என்றவள் சற்று இடைநிறுத்திவிட்டு தயக்கத்துடன், “என்னிலை கோபமே?”, எனக் கேட்டாள். “பின்ன கோபம் வராதே?, நானும் போராட்டத்திலை எந்த ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 18

bookebaylow

“வாங்கோ சிவம் உங்களைக் கூப்பிட யோசிக்க நீங்களே வந்திட்டீங்கள்” , என சிவத்தை வரவேற்றார் தளபதி.  “என்னண்ணை செய்ய வேணும்?” எனக் கேட்டான் சிவம். “பெரிய தம்பனையை நோக்கி இராணுவம் ஒரு பெரிய முன்னேற்ற முயற்சியைத் தொடங்கியிருக்கிறாங்களாம்… எங்கடை கவனத்தை இங்கை திருப்பி எங்களை அங்கை இழுத்துப் போட்டு முள்ளிக்குளத்துக்கை இறங்கி அவங்கள் பழைய இடத்திலை நிலை கொள்ளக் கூடும் எண்டு சிறப்புத் தளபதி எதிர்பார்க்கிறார். அதாலை எங்கடை பக்கத்தை இறுக்கமாய் வைச்சிருகச் சொல்லி அறிவிச்சிருக்கிறார்” “அது பிரச்சினை இல்லையண்ணை.. எங்கடை காவலரண்கள் பலமாய் ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 17

nkna

வெளிச்சம் அணைக்கப்பட்டதுமே ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போவதைச் சிவம் புரிந்து கொண்டான். உடனடியாகவே நால்வரும் துப்பாக்கிகளைத் தயார் நிலையில் வைத்துக் கொண்டு தனித் தனியான மறைவிடங்களில் பதுங்கிக் கொண்டனர். மீண்டும் வாகனத்தின் லைற் எரிந்தது. கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் ஒருவனை இன்னொருவன்  எழுந்து முழங்காலில் நிற்க தள்ளி விட்டவன் அவனைக் காலால்  உதைத்துவிட்டு ஏதோ கத்தினான். அவனின் கையில் மின்னிய ஒரு வாள் லைற் வெளிச்சத்தில் பளபளத்தது. அவர்களைச் சுற்றி மேலும் நால்வர் சூழ்ந்து கொண்டனர். நின்றவர்களில் ஒருவன் முழங்காலில் நின்றவனைக் ...

Read More »