நீந்திக்கடந்த நெருப்பாறு

‘நீந்திக்கடந்த நெருப்பாறு’ வெளியீட்டுவிழா- சிட்னி வாழ் மக்களுக்கு தமிழ்லீடர் அழைப்பு!

ts

ஈழவிடுதலைப்போராட்டத்தின் இறுதிக் காலப்பகுதிகளை பிரதிபலிக்கும் வகையில் தமிழ்லீடர் இணையத்தளத்தில் வெளியாகும் “நீந்திக்கடந்த நெருப்பாறு” நாவல் வெளியீட்டு நிகழ்வு நாளை சிட்னியில் நடைபெறவுள்ளது. நிகழ்வினைச் சிறப்பிக்க தமிழகத்திலிருந்து தமிழருவி மணியன் உட்பட்டவர்களும் அவுஸ்திரேயா வந்திருக்கின்றனர். நிகழ்வு தொடர்பில் தமிழ்லீடர் குழுமம் தமிழ் உணர்வாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. குறித்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,அன்பார்ந்த சிட்னிவாழ் தமிழர்களே, விடுதலை வேட்கையில் கனன்றெழுந்து வீரமும் தியாகமும் சோகமும் சாதனையும் பின்னடைவும் புடை சூழ புயலாக மேலெழுந்த போராட்டத்தின் பதிவுகளுடன் பயணம் செய்ய உங்களை அன்புடனும் உரிமையுடனும் அழைக்கிறோம். தாயை நேசிப்பவனே தாய் மண்ணையும் ...

Read More »

கந்தகக் கிடங்காக கனலச் செய்யும் ‘நீந்திக்கடந்த நெருப்பாறு’ காப்பியமாகத் திகழும்! – வைகோ

vaiko

தேக்குகளை விட வலிமையான பேனாமுனையால் ஈழ விடுதலை சாத்தியமாகும் காலம் தொலைவில் இல்லை. முள்ளிக்குளம் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரையான வீர வரலாற்றின் பெருமைமிகு பதிவாகத் திகழும் இந்நூல், படிப்போர் உள்ளங்களைக் கந்தகக்கிடங்காகக் கனலச் செய்கின்றது என ஈழத்து எழுத்தாளர் அரவிந்தகுமாரனின் நீந்திக்கடந்த நெருப்பாறு என்ற வரலாற்று நாவலுக்கு வழங்கிய அணிந்துரையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தெரிவித்துள்ளார்.  இறுதிப்போரின் சம்பவங்களைக் கண்முன்கொண்டுவரும் அரவிந்தகுமரானின் ‘நீந்திக்கடந்த நெருப்பாறு’ நாவலுக்கு வைகோ அவர்கள் வழங்கிய அணிந்துரையின்  சுருக்கம் வருமாறு, அரவிந்தகுமாரனின் அற்புதப்படைப்பான ‘நீந்திக்கடந்த நெருப்பாறு’ தலைப்பைப் ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 34

bookebaylow

இடம்பெயர்ந்து கொண்டிருந்தவர்களில் பெரும்பாலானோர் இலுப்பைக் கடவையிலேயே தங்கிவிட்டனர். கூடாரங்கள் இல்லாதவர்களில் ஒரு பகுதியினர் பாடசாலையிலும் கமநல சேவைக் கட்டிடத்திலும் தங்கிக் கொண்டனர். மாந்தை உதவி அரசாங்க அதிபரும் கிராமசேவகர்களும் இணை்நது மூன்று நாட்களுக்குச் சமைத்த உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்தனர். பாடசாலை அதிபரும் பிள்ளைகளுக்கு மதிய உணவு வழங்குவதற்காக கிடைத்த பொருட்களின் ஒரு பகுதியைக் கொடுத்து உதவினார். எல்லோர் மனதிலும் வெகு விரைவில் திரும்பிப் போய்விட முடியும் என்ற நம்பிக்கையே மேலோங்கியிருந்தது. பரமசிவம் கூட பெரியமடுவில் இருந்த போது அப்படியான எதிர்பார்ப்பு நிறைந்தவராகவே காணப்பட்டார். ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 33

nkna

அன்று அதிகாலை மூன்று மணிக்கே படையினரின் தாக்குதல் ஆரம்பமாகிவிட்டது. ஏற்கனவே அவர்கள் நிலைகொண்டிருந்த இடத்தை நோக்கி எறிகணைகள் சரமாரியாக விழுந்து கொண்டிருந்தன. ஏற்கனவே தாங்கள் அப்பகுதியை விட்டு விரட்டியடிக்கப்பட்டதால் அந்த வெற்றிடம் போராளிகளால் நிரப்பப்பட்டிருக்குமென அவர்கள் எதிர்பார்ப்பாக இருக்கவேண்டும். அதனால் தான் அப்பகுதியை இலக்குவைத்து எறிகணைகளை வீசிக்கொண்டிருந்தனர். சிவத்தின் அணியினர் கட்டைளைப் பீடத்தின் உத்தரவின் பேரில் தங்கள் பழைய நிலைகளுக்குப் பின்வாங்கிவிட்டனர். ஆனால் போராளிகளும் இராணுவத்தினருமற்ற வெற்றிடப் பிரதேசத்தில் இரவோடிரவாக பீரங்கிப் படைப்பிரிவினர் ‘பிக்ஸ்’ அடித்துவிட்டனர். அது அந்த இரவுப் பொழுதில் மிகச் சுலபமாகவே ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 32

bookebaylow

மதிய வேளை ஓய்ந்திருந்த சண்டை பிற்பகல் நான்கு மணியளவில் மீண்டும் ஆரம்பமாகி விட்டது. அகோர எறிகணை வீச்சுடன் இராணுவத்தினர் முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டனர். சிவத்தின் அணியினர் மிகவும் கடுமையாகவே போராட வேண்டியிருந்தது. போராளிகளின் மோட்டார் தாக்குதல் எதிரிகளைத் துல்லியமாக வேட்டையாடிய போதும் ஒருவர் விழ மற்றவர் என்ற வகையில் அவர்கள் முன்னேற்ற முயற்சிகளில் இறங்கியிருந்தனர். ரூபாவின் தலைமையிலான பெண்கள் அணியும் கடுமையான எதிர்ச் சமரை நடத்திக்கொண்டிருந்தது. அவள் தனித்துவமான ஆற்றலுடன் போராளிகளை வழிநடத்திக்கொண்டிருந்தாள். படையினரின் பெரும் எண்ணிக்கையே அவர்களுக்கு கள நிலைமையைச் சாதகமாக்கிக் கொண்டிருப்பதை ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 31

nkna

காடுகளுக்கு நடுவே வளைந்து நெளிந்து சென்ற பாதையில் நீண்ட வரிசையில் நகர்ந்து கொண்டிருந்த மக்கள்திரளை நோக்கி தாழ்ந்து பதிந்த விமானம் குண்டுகள் எதையும் தள்ளாமலேயே பேரிரைச்சலுடன் மீண்டும் மேலெழுந்தது. வானத்தை நோக்கி மேலெழும்பிய அது மீண்டும் சற்று உயரத்தில் போய் ஒரு முறை அந்த இடத்தை வட்டமிட்டது. “பிள்ளையாரே காப்பாத்து”, “மடுமாதாவே நீ தான் துணை”, என்றும் மக்கள் எழுப்பிய அவல ஒலி இன்னும் ஓயவில்லை. விமானம் மேற்குப் புறமாகப் போய் வானில் மறைந்தது. முருகேசர் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனார். அவர் எதுவுமே ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 30

bookebaylow

போராளிகளைப் பொறுத்தவரையில் களநிலை முன்னெப்பொழுதையும் விட மிகவும் நெருக்கடி மிக்கதாகவே அமைந்திருந்தன. முள்ளிக்குளம், பெரியபண்டிவிரிச்சான், பரப்புக்கடந்தான், அடம்பன் என நாலுபக்கங்களிலும் பெரும் இராணுவப் படையணிகள் இறக்கிவிடப்பட்டிருந்தன. எறிகணைகள் மழை போல் பொழிந்து கொண்டிருந்தன. குறிப்பாக எறிகணைகள் போராளிகளின் விநியோகப் பாதைகளில் தொடர்ச்சியாக விழுந்து கொண்டிருந்தன. கிபிர் விமானங்களும் விமான எதிர்ப்புப் பீரங்கிகளின் தாக்குதல்கள் மத்தியிலும் அடிக்கடி வந்து குண்டுகளைத் தள்ளிக் கொண்டிருந்தன. எங்கும் பெரும் கரும்புகை மண்டலங்கள் எழுந்து கொண்டிருந்தன. சிவம் படையினரை ஒரு அங்குலம் கூட முன்னேற விடுவதில்லை என்ற உறுதியுடன் தனது ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 29

nkna

அன்று இரவு இறந்த படையினரை மீட்கவும், வதனியின் உடலைக் கொண்டுபோகவும் இராணுவத்தினர் மூன்று முறை முயற்சிகளை மேற்கொண்டும் அதில் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. இம் மீட்பு முயற்சியில் படையினர் எவரும் இறந்ததாக தெரியவில்லை.அவர்கள் படுத்திருந்தவாறே நகர்வுகளை மேற்கொள்வதும், போராளிகள் சுட ஆரம்பித்ததும் இறந்தது போல பாசாங்கு செய்துவிட்டு பின்பு தாக்குதல் ஓய்ந்ததும் பின் நகர்வதும் என முயற்சிகளை மேற்கொண்டனர். வதனியின் வித்துடலை அவர்கள் கையில் போய்விடாமற் பார்ப்பதில் மலையவன் மிகவும் விழிப்புடனிருந்தான். இரு பகுதியினரின் காவலரண்களும் ஒன்றையொன்று பார்க்க முடியாதபடியே அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் சடலங்கள் ...

Read More »

‘நீந்திக்கடந்த நெருப்பாறு’ – அங்கம் – 28

bookebaylow

சிவம் காவல் நிலைகளை கண்காணிக்க அன்றிரவு சென்ற போதுதான் ரூபாவைச் சந்தித்தான். “எப்பிடி ரூபா நிலைமையள் இருக்குது?”, எனக் கேட்டான். “கொஞ்சம் இறுக்கம் தான்… இருபத்தி நாலு மணி நேர விழிப்பு நிலையிலை இருக்கவேண்டியிருக்குது”, என்றாள் ரூபா. “எந்த ஒரு பக்கத்தாலையும் உடைக்க விட்டிடக் கூடாது. விட்டமெண்டால் லேசிலை திருப்பிப் பிடிக்கேலாது” “ஓமோம்.. விளங்குது.. இந்த இடத்தின்ரை அமைவு அப்பிடி.. நாங்கள் எத்தினை பேர் வீரச்சாவடைஞ்சாலும் ஒரு அங்குலம் கூட அவனை முன்னேற விடுறதில்லை” சிவம் ஒரு பெருமூச்சுடன் சொன்னான், “ம்.. இப்ப அதுதான் பெரிய ...

Read More »

‘நீந்திக்கடந்த நெருப்பாறு’ – அங்கம் – 27

nkna

வானொலிப் பெட்டியை எடுத்துவருவதற்காகச் சுந்தரம் பாலம்பிட்டிக்குப் போய்ச் சேர்ந்த போது ஊர் வெறிச்சோடிப் போய்க்கிடந்தது. எந்த ஒரு போராளியையோ, படையினரையோ கூடக் காணக்கிடைக்கவில்லை. அங்கு நிலவிய மயான அமைதி அவனை அச்சமடைய வைத்தது. போர் இடம்பெற்று முடிந்த இரத்தம் இன்னும் காய்ந்து விடாத எத்தனையோ களங்களுக்கு எத்தனையோ தடவைகள் போராளிகளுக்கு உதவியாகப் போய் வந்திருக்கிறான்.அப்போதெல்லாம் பயம் அவனை நெருங்கியது கிடையாது. ஆனால் தான் பிறந்து வளர்ந்த வீடு, ஊர் என்பனவே அவனை மனித ஜீவன்கள் காணப்படாத வெறுமையால் மிரட்டிக் கொண்டிருந்தன. முற்றத்துப் பாலையில் எந்தநேரமும் ...

Read More »