நீந்திக்கடந்த நெருப்பாறு

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 46

bookebaylow

அருட்சகோதரர் ஒரு புன்னகையுடன் திரும்பி கந்தசாமியைப் பார்த்துவிட்டு, “கந்தசாமி நீங்கள் சொல்லுறதிலை இருக்கிற நியாயம் எனக்கு விளங்குது எண்டாலும் விசாரித்து முடிக்க முன்பு தீர்ப்பு வழங்க முடியாதல்லே?” என்றார். கந்தசாமி அமைதியானான். பின்பு அவர் துணை இராணுவக்குழுவைச் சேர்ந்தவனைக் கேட்டார். “நீ பொய் சொல்லித்தான் பள்ளிமுனை ஆக்களைக் கூட்டி வந்தனீ, இல்லையே?” அவன் அனுங்கும் குரலில் தயங்கியவாறே, அப்படித்தான் கொமாண்டர் சொல்லிவிட்டவர்”, என்றான். அருட்சகோதரர் எல்லோரையும் ஒரு முறை பார்த்துவிட்டுச் சொன்னார், “ரணகோஷ நடவடிக்கையின் போது மடு சின்னக் கோவில் மேலை எறிகணை வீசி ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 45

nkna

அன்று ஆழியான் தலைமையிலான கடற்புலிகளின் சிறப்புப் படையணி களத்தில் இறங்கியது. அவர்கள் அந்தக் கடலை அங்குலமங்குலமாக அறிந்து வைத்திருந்தபடியால் ஆழங்குறைந்த கடல் பகுதியிலும் ஆங்காங்கே உள்ள ஆழமான குறுகிய ஓடைகளால் பீரங்கிப் படகுகளை நகர்த்திச் சண்டையிட்டனர். ஆழியான் ஒரு சிறு குருவியில் ஏறி தாக்குதலை நடத்தியவாறே கட்டளைகளை வழங்கிக்கொண்டிருந்தான். கடற்படையினரின் டோறாக்கள் கடலின் ஆழமான பகுதியில் நின்றே தாக்குதலை நடத்தின. அருகருகாக இரு டோறாக்கள் மட்டுமே ஆழமான ஆறு போன்ற பகுதிகளில் நின்று சண்டையிட முடியும். ஏனைய இரு டோறாக்கள் ஏறக்குறைய முந்நூறு மீற்றர் ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 44

bookebaylow

மிகச் சிரமப்பட்டு நடந்து வந்த பெருமாள் அப்படியே முற்றத்தில் இருந்துவிட்டார். அவர் தாங்க முடியாத களைப்பில் மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கிக் கொண்டிருந்தார். இரு கரங்களையும் பின்புறமாக ஊன்றியவாறு, முகத்தை வானத்தை நோக்கி வைத்தவாறு வாயைத் திறந்து கடும் முயற்சியுடன் சுவாசித்துக்கொண்டார். தகப்பன் வருவதைக் கண்டதும் குடிசையை விட்டு வெளியே வந்த முத்தம்மா அவரருகில் சென்று குந்தியவாறு, “என்னப்பா – என்ன செய்யுது?” எனக் கேட்டாள். “ம்.. கொஞ்சத் தூரம் நடந்தது.. தாங்க ஏலாமல் களைக்குது”, எனத் தட்டுத் தடுமாறி சொல்லி முடித்தார் அவர். நிலைமையப் புரிந்து ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 43

nkna

பரமசிவமும் முருகரும் பொதுநோக்கு மண்டபத்தை அடைந்த போது மக்கள் வித்துடல்களுக்கு மலர் வணக்கம் செலுத்திக்கொண்டிருந்தனர். சுற்றி அமர்ந்திருந்த மக்களின் முகங்களில் எல்லையற்ற சோகம் படர்ந்திருந்த போதிலும் அங்கு ஒருவிதமான புதினம் கலந்த அமைதி நிலவியது. பரமசிவம் முருகரின் பின்னால் வரிசையில் நின்று மெல்ல, மெல்ல ஒவ்வொரு அடியாய் முன்னால் நகர்ந்தார். அவர் மனம் என்றுமில்லாதவாறு பதை பதைத்துக் கொண்டிருந்தது. சிவம் போராளியாகக் களமாடத் தொடங்கி பல வருடங்கள் கடந்துவிட்டன. அவர் எப்போதுமே அவனுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சியதில்லை. அது மட்டுமன்றி, “அவன் காத்தானுக்கல்லே ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 42

bookebaylow

சுந்தரம் மருத்துவமனைச் சந்தியில் வந்து ஏறியபோது அது ஓரளவு வெறிச்சோடிப் போய்விட்டது. நோயாளர்களையோ, காயமடைந்தவர்களோ எவருமே அங்கு காணப்படவில்லை. மருத்துவமனைப் பணியாளர்களும் சில இளைஞர்களும் மருத்துவமனையின் தளபாடங்களை வாகனங்களில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அவன் சைக்கிளை தான் ஏற்கனவே விட்ட இடத்திலிருந்து எடுத்துக்கொண்டு வீதியில் ஏறிய போது விடத்தல் தீவுப் பக்கமாக விமானங்கள் குண்டுகளைப் பொழிய ஆரம்பித்தன. மக்கள் செறிவாக வாழும் விடத்தல் தீவின் மீதே இப்படிக் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தும் விமானப் படையினர் இலுப்பைக்கடவை மருத்துவமனையையும் விட்டு வைக்கப்போவதில்லை என்பதாலேயே அது வேறு இடத்துக்கு மாற்றப்படுவதாக ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 41

nkna

காட்டுப்பாதையால் உழவுயந்திரம் செலுத்துவது அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை. அவை ஏற்கனவே கள்ள மரம் ஏற்றுவதற்குப் பாவிக்கப்பட்ட பாதைகள், காட்டுக்குள் மரம் அறுப்பதைப் போராளிகள் முற்றாகத் தடை செய்துவிட்டதால் அந்தப் பாதைகள் முற்றாகவே பற்றைகள் வளர்ந்து பாவிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன. பாதை அருகிலும் பற்றைகள் வளர்ந்து நீட்டிக்கொண்டு உழவுயந்திரத்தில் இருந்தவர்களின் உடலைப் பதம்பார்த்தன. ஒரு மைல் தூரம் வருவதற்குள்ளாகவே முருகையா சலித்துப் போய் வாகனத்தை நிறுத்திவிட்டான். அவன் போராளிகளைப் பார்த்து, “தம்பியவை, இதுக்காலை வாகனம் கொண்டு போகேலாது.. மேலை கவனமாய்ப் பாத்துக் கொண்டு றோட்டால போவமே?”, ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 40

bookebaylow

வானம் மெல்ல மெல்ல மஞ்சள் நிறத்தை இழந்து கொண்டிருந்த அந்தக் காலைப் பொழுதில் அண்மையில் கேட்ட இரு குண்டோசைகளும் கிபிர் விமானம் மேலெழும்பிய இரைச்சலும் காட்டு மரங்களையும் ஒரு முறை நடுங்கவைத்தன. காலைப் பயிற்சிகளை முடித்துவிட்டு அப்போதுதான் முகாம் திரும்பி வந்திருந்த போராளிகள் மேலிடத்தின் கட்டளைகளை எதிர்பார்த்து அவசர அவசரமாகத் தம்மைத் தயார் படுத்திக் கொண்டனர். அடுத்தடுத்து வந்த மூன்று விமானங்கள் மாறி மாறிக் குண்டுகளைப் பொழிந்து தள்ளின. சிவம் விடத்தல் தீவின் மீது தான் விமானத் தாக்குதல் இடம்பெறுகிறது என்பதைப் புரிந்து கொண்டான். ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 39

nkna

மண்ணால் கல்லறை போன்று உருவாக்கப்பட்ட பதினொரு மண் அமைப்புக்களில் தடிகள் நடப்பட்டு அதில் அறையப்பட்ட தகரத் துண்டுகளில் பெண்பிள்ளைகளின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. அவை கடந்த வருடம் மாவீரர் வாரத்தின் போது மல்லாவி மருத்துவமனையில் முதலுதவிப் பயிற்சி பெற்றுவிட்டுத் திரும்பி அம்புலன்ஸ் வாகனமொன்றில் வந்து கொண்டிருந்தபோது இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்த ஐயங்கன் குளம் பாடசாலை மாணவிகளின் நினைவுச் சின்னங்கள் என்பதை சுந்தரம் புரிந்து கொண்டான். அதேவேளையில் மடுவில் ஆழ ஊடுருவும் படையினரால் தமிழ்த்தினப் போட்டிகளில் கலந்துவிட்டுத் திரும்பிய பாடசாலை ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 38

bookebaylow

ரூபா மலையவனைச் சமாதானப்படுத்தி அவனைத் தென்பூட்டிய போதிலும் அந்த முகாமுக்கு வந்த நேரம் தொடக்கம், அவளின் இதயமும் இரும்பாகக் கனத்துக் கொண்டிருந்தது. போராட்ட வாழ்வில் வீரச்சாவுகள் தவிர்க்கமுடியாதவை என்பதை அவள் நன்கறிவாள். ஆனால் சிலரின் இழப்புக்கள் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்திவிடுவதுண்டு. அவள் காலை உணவு முடித்த பின்பு தனியாகப் புறப்பட்டுப் போய் அந்த சிறு கிளையாற்றின் அருகில் நின்ற மருதமரமொன்றின் திரண்ட வேரில் அமர்ந்து கொண்டாள். ஆற்றின் மறுகரையில் தெரிந்த பெரு விருட்சங்கள் அடங்கிய காட்டைப் பார்த்தபோது அவளின் எண்ணங்கள் பின்னோக்கி நகர ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 37

nkna

அன்று இரவு அரசியல்துறைப் படையணி வந்திறங்கியது. சிவத்தின் பொறுப்பிலிருந்த படையணியிடமிருந்து சகல காவலரண்களையும் பொறுப்பேற்றுக் கொண்டது. ரூபாவின் அணியையும் பின்நகர்த்தி அதற்குப் பதிலாக வேறு ஒரு மகளிர் அணி அந்த இடத்தில் நிறுத்தப்பட்டது. சிவம் தனது அணி பின்னகர்த்தப்படுவதை விரும்பியிராத போதிலும் கூட ஒரு வித்தியாசமான எதிர்பார்ப்பு அவனையும் சந்தோசப்படவைக்கத்தவறவில்லை. ஏதோ ஒரு பெரிய தாக்குதலை நடத்துவதற்கோ அல்லது முகாம் தகர்ப்பு நடவடிக்கை ஒன்றை நடத்துவதற்கோ தாங்கள் காவல் வரிசையிலிருந்து பின் பகுதிக்கு அழைக்கப்பட்டதாகவே கருதினான். கட்டளைப் பீடம் தனது ஆற்றலை அங்கீகரித்திருப்பதாகவே தனக்குள் ...

Read More »