தொடர்கள்

ஒரு போராளி மருத்துவரின் தியாகப் பயணம் – பகிரப்படாத பக்கம் 13

kavi 6 copy

தமிழீழ விடுதலைப்போராட்டம் பல போராளிகளின் தியாகங்களால் கட்டியமைக்கப்பட்டது. எங்கள் தேசத்தின் விடியலுக்காக தமது வாழ்க்கையினை தியாகம் செய்த எம் போராளிகள் ஒவ்வொருவரும் எதோ ஒருவகையில் பெரும் தியாகத்தின் உச்சத்தை தொட்டுச் சென்றிருக்கிறார்கள்.

Read More »

“மக்கள் நீதி மய்யம்” – தனது கட்சியின் பெயர் தொடர்பில் கமல் விளக்கம்

kamal party_2018_2_21

அரசியல்பயணத்தை தொடங்கிய கமல் தனது கட்சியின் பெயர் தொடர்பிலும் கட்சிக் கொடி குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.

Read More »

மருத்துவப் போராளி மலரவன்; வீரம்மிகு விடுதலைப் பயணத்தில் ஒரு சாட்சி

Malar

பகிரப்படாமல் இருக்கும் பல்லாயிரம் வீரங்களும் தியாகங்களும் இந்த பகிரப்படாத பக்கங்களினூடாக ஒவ்வொன்றாக பகிரப்பட்டு வரும் சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றிலும் எம் தியாக வேங்கைகள் எங்கள் மனங்களில் உயிர்வாழ்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்நிலையில் வெளித் தெரியாமல் தேச வரலாற்றுப் பக்கங்களை நிரப்பி நிற்கும் தமிழீழ மருத்துவத் துறை நீண்ட பெரும் தியாகங்களைக் கொண்டது.

Read More »

ஆழிப்பேரலை அனர்த்தம்; அபரிமிதமான பணியாற்றிய போராளி மருத்துவர்கள்!

kavi 3

2004 மார்கழி மாதத்தின் 25 ஆம் நாள் இரவு தனது இருட்டைத் தொலைத்து சூரிய ஒளியால் ஒளிரத் தொடங்கிய அதிகாலை நேரம். பல ஆயிரம் ஆசைகள் நெஞ்சில் நிறைந்து கிடக்கிறது. எம் வாழ்வுக்கு ஒளி காட்ட பாலன் பிறந்துவிட்டான் என்று எம் ஊர்கள் மட்டுமல்ல உலகமே மகிழ்வில் திளைத்துக் கொண்டிருந்தது. தேவாலையங்கள் எங்கும் மங்களம் பொங்கும் நிகழ்வுகள், பூஜைகள் நடந்து ஜேசு பாலன் பிறப்பை கொண்டாடி மகிழ்ந்தது.

Read More »

மணலாற்றுக் காட்டிடை மேவிய தளபதி – பிரிகேடியர் சொர்ணம்

sornam 3

தமிழீழத்தின் தலைநகரில் தொடங்கிய 5 ஆம் கட்ட ஈழ யுத்தம் மன்னார் வவுனியா யாழ்ப்பாணம் என்று விரிந்து மணலாறு மண்ணிலும் தரித்து நின்ற காலம் அது. அந்தக் காலத்தின் ஒரு நாளில் தாயக தேசத்தை மூடி நின்ற வானம் இருண்டு போய்க் கிடக்கிறது. வானத்திற்கு வெளிச்சமூட்ட முனைந்து தோற்றுப் போன நிலையில் தன்னை முகில் கூட்டங்களுக்குள் மறைத்து மறைத்து எட்டிப் பார்க்கிறது தேய்பிறை. அந்த அழகை ரசித்தபடி நிற்கிறார்கள்  சோதியா படையணியின் பெண் போராளிகள். அவர்களின் கரங்கள் திடமாக பற்றி இருந்த துப்பாக்கிகள் எதிரியின் ...

Read More »

என்னுள் மையம் கொண்ட புயல்! – கமல்ஹாசன்

Kamalhasan

என்னுள் மையம் கொண்ட புயலை உங்கள் கரை வரை கொண்டு சேர்க்கும் தீரா ஆசையின் முதல் அலை இது. இன்னும் எவ்வளவு காலம் தமிழர் தம் கண்முன் நடக்கும் அநீதிகளையும் அநியாயங்களையும், மக்கள் செல்வங்கள் எல்லாம் தனியார் தம் ஆசைக் கோட்டைகள் கட்ட மண்ணெடுக்கும் மேடாய் மாறிவருவதையும் பார்த்துக்கொண்டிருப்பர்? இந்தக் கேள்வி பல கோடி மனங்களில் எழத்துவங்கி கால் நூற்றாண்டாகிவிட்டது. என் மனமும் இதற்கு விதிவிலக்கல்ல. தானுண்டு தன் வேலையுண்டு என்று கண்டும் காணாமல் இருந்த தமிழர்களில் நானும் ஒருவன். இந்த மெத்தனத்துக்கான தண்டனையைப் ...

Read More »

யாழ்.குடாநாடு முப்படைகளின் பாதுகாப்பு கட்டமைப்புக்குள் வருகிறது?!

police

யாழ். குடாவில் இடம் பெறும் சட்ட விரோத செயல்­களைக் கட்­டுப்­ப­டுத்­தவும் அங்கு பாது­காப்பை உறுதி செய்­யவும் இரா­ணுவம், கடற்­படை, விமா­னப்­ப­டை­யி­ன­ருடன் பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ரையும் இணைத்து இறுக்­க­மான பாது­காப்பு கட்­ட­மைப்­பொன்றை செயற்­ப­டுத்தப் போவ­தாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­தர அறி­வித்­துள்ளார்.

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 55

nkna

படையினர் மிகவும் அவதானமாகவே தங்கள் நகர்வை மேற்கொண்டிருந்தனர். டாங்கிகள் இரண்டு கவசவாகனங்கள் இரண்டு என்பவற்றின் துணையுடன் மூன்று அடுக்கு வடிவமைப்பில் ஒவ்வொரு வரிசையும் ஒன்றன் பின் ஒன்றாக முன்னேறினர். இரு அணிகள் படுத்து காப்புக் கொடுக்க ஒரு அணி ஓடிச் சென்று முன்னால் படுப்பதும் பின்பு அடுத்த அணி குனிந்து ஓடி முன்னால் படுப்பதும் என மாறி மாறி செயற்பட்டவாறு முன்னேறினர். காகம் குருவி கூடக் காணப்படாமல் அப்பிரதேசம் வெறிச்சோடிப் போயிருந்த போதிலும் படையினர் மிகவும் எச்சரிக்கையாகவுமே நகர்வை மேற்கொண்டனர். திடீரென நிலமட்டத்திலிருந்து  வளிவந்த ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 54

bookebaylow

மன்னார் பூநகரி வீதியில் அந்த மக்கள் வெள்ளம் மிகவும் மெதுவாகவே நகர்ந்துகொண்டிருந்தது. கால் நடையாக தலையிலும் கையிலுமாகச் சில சிறிய மூடைகளுடனும் உடுப்புப் பெட்டிகளையும் சுமந்து செல்லும் பெருந்தொகையான மக்களைக் கடந்து வாகனங்கள் செல்வது எளிதான காரியமாக இருக்கவில்லை. உழவு இயந்திரங்களும், லான்ட் மாஸ்ரர்களும், வண்டில்களும் சைக்கிள் மோட்டார் சைக்கிள்களும் நின்று நின்றும் மெதுவாக ஊர்ந்தும் வசதியான இடங்களில் வீதியால் இறங்கித் தரவைகளாலும் செல்ல வேண்டியிருந்தது. குண்டும் குழியுமாகவும் குழிகளுக்குள் கூரான கற்கள் துருத்திக் கொண்டும் காட்சியளித்த அந்தப் பாதையால் நடந்து செல்வது கூட ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 53

nkna

அன்று இரவு எட்டுமணியளவில் சிவம் அணியினர் தங்கியிருந்த முகாமுக்கு அரசியல்த்துறைப் பொறுப்பாளர் வந்திருந்தார். அவர் வந்து சேர்ந்த சிறிது நேரத்தில் எல்லோரையும் ஒரு இடத்தில் கூடும்படி கட்டளை வந்தது. வழமையாக யாராவது பொறுப்பாளர்கள் வருவதாக இருந்தால் முதலில் போராளிகள் கூட்டப்பட்டுவிடுவார்கள். அதன் பின்பே அவர்கள் வருவார்கள். இன்று அவர் வந்த பின்பே கூட்டம் கூட்டப்பட்டது சிவத்துக்கு எதோ வித்தியாசமாகப்பட்டது. யாரோ ஒரு முக்கிய பொறுப்பாளர் வரப்போகிறார் என்ற விஷயம் தங்களுக்கே தெரியக்கூடாது என்பதற்காக அப்படி ஒரு மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனக் கருதினான் சிவம். மாவீர் ...

Read More »