தமிழ்லீடர்

அரசு ஏமாற்றிவிட்டது. கஜனின் சகோதரி கவலை

IMG_3756

தம்பியின்  மரணத்திற்கு பின்னர் வழங்கப்பட்ட பல வாக்குறுதிகளில் வீடு மாத்திரமே  அமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. குறித்த வீடு எமக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையிலேயே  காணப்படுகிறது. என கஜனின் சகோதரி கவலை தெரிவித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற பொலீஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்ட  இரண்டு  யாழ் பல்கலை கழக மாணவர்களின் ஒருவரான கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த நடராஜா கஜனின் குடும்பத்தினருக்கு மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சினால் 13 இலட்சத்து 50 ரூபா நிதி ஒதுக்கீட்டில்  புதிய வீடு ஒன்று அமைக்கப்பட்டு நேற்று ...

Read More »

மன்னாரில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு!

mannar3

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வு நடவடிக்கையில் இதுவரை 111 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மன்னார் சதொச வளாகத்தில் கடந்த மூன்று மாத காலமாக முன்னெடுக்கப்படும் அகழ்வு நடவடிக்கையில் குறித்த மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் ஏழு மனித எலும்புக்கூடுகள் குழந்தைகளினுடையதென தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

கிளிநொச்சியில் இளம்பெண்ணின் சடலம் மீட்பு! (இணைப்பு, திருத்தத்துடன்)

rape

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பிரவுண் வீதிப் பகுதியில் உள்ள வயல் கால்வாயில் இருந்து இன்று காலை யுவதியின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

Read More »

மகாவலி நில ஆக்கிரமிப்புக்கு எதிராக முல்லைத்தீவில் பாரிய பேரணி!

mull

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களுக்கு எதிரான 3 அம்ச கோரிக்கையை முன்வைத்து மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

Read More »

முல்லைத்தீவு மக்கள் எதிர்கொள்ளவுள்ள பாரிய ஆபத்து?!!

mahavali

முல்லைத்தீவில் கரைத்துறைபற்று பிரதேசசெயலகத்தின் கடமைகளிற்கு சவால் விடுத்து, சிங்கள மக்களை குடியமர்த்தும் முயற்சியை ஆரம்பித்துள்ள மகாவலி அதிகாரசபையின் நடவடிக்கையால் மாவட்டத்திலுள்ள சுமார் 20 ஆயிரம் மக்களின் காணி உரிமங்களின் சட்டபூர்வ தன்மை கேள்விக்கிடமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Read More »

சம்பந்தன் பக்கத்திலா பந்து? – நிலாந்தன்

sam

யாழ்ப்பாணத்தில் மிகக்குறைந்தளவு விற்கப்படும் ஒரு பத்திரிகை மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக சர்ச்சைகளை ஏற்படுத்தும் ஒரு பத்திரிகை அச்சர்ச்சைகளின் மூலமாகவே விற்பனைப் பரப்பைக் கூட்டிக்கொள்ளும். ஆனால் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகை இதுவரை பல சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. ஆனால் அதன் விற்பனை மட்டம் இன்று வரையிலும் லாப இலக்கை எட்டவில்லை. மிக விசித்திரமான ஓர் ஊடகவியல் யதார்த்தம் இது. அப்பத்திரிகையின் ஆசிரியர் வித்தியாதரன் “மின்னல்” என்ற பெயரில் எழுதும் பத்திகளை பெரும்பாலான அரசியல்வாதிகள் அதிகாலையிலேயே வாசித்து விடுகிறார்கள். இப்பத்தியில்தான் கோத்தபாய ஜனாதிபதியாக வருவதை ...

Read More »

தமிழ்த் தலைவர்களை ஐக்கியப் பட வலியுறுத்தி கிளிநொச்சியில் துண்டுப்பிரசுரம்!

letter

”இது தமிழ்த் தலைவர்கள் எனப்படுவோர் ஐக்கியப்பட வேண்டிய நேரம் ” என்று குறிப்பிட்டு துண்டு அறிக்கைகள் கிளிநொச்சி நகர்ப்பகுதி மற்றும் தர்மபுரம் பகுதிகளிலும் விநியோகிக்கப்பட்டுள்ளது

Read More »

புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணத்தில் மகிழ்ச்சி இல்லை! ராகுல் காந்தி

Gandhi

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதில் தனக்கு மகிழ்ச்சி இல்லை எனத் தெரிவித்திருக்கிறார் இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி. ஜேர்மனியில் பாடசாலை ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், பிரபாகரன் மீதான வன்முறை அவரது பிள்ளைகளையும் மற்றவர்களையும் பாதித்தது. என்னுடைய பாட்டியும் (இந்திரா காந்தி) என்னுடைய தந்தையும் (ராஜிவ் காந்தி) கொல்லப்பட்டனர். இதனால் நானும் வன்முறையால் பாதிக்கப்பட்டேன். நான் எனது அனுபவத்திலிருந்தே பேசுகிறேன். வன்முறைக்குப் பிறகு நீங்கள் முன்னேற ஒரே வழி மன்னிப்பு. மன்னிப்பதற்காக நீங்கள் என்ன ...

Read More »

யாழ்ப்பாணத்தில் விகாரைக்கு அடிக்கல் நாட்டினார் ஆளுநர்

DSC_0132-copy

யாழ்ப்பாணம் – தையிட்டியில் அமைக்கப்படவுள்ள விகாரைக்கு அடிக்கல் நாட்டினார் வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே. இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட தையிட்டியில் ஒன்றே கால் ஏக்கர் (20 பரப்பு) காணியை பிக்குகள் தமக்கு சொந்தம் என உரிமை கோரியுள்ளனர். இந்தக் காணியிலேயே விகாரை அமைப்பதற்கான அடிக்கல்லை ஆளுநர் நேற்று நாட்டினார். பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்ட நிலையில் இந்நிகழ்வு இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

கடற்புலிகளைக் காட்டிக்கொடுத்த வாஜ்பாய்!

INDIA - JUNE 11:  Atal Bihari Vajpayee with Ranil Wickremesinghe, Prime Minister of Sri Lanka ( PM, Together )  (Photo by Saxena Sharad/The India Today Group/Getty Images)

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற்புலிகளின் பிரவேசத்தை தடுத்து நிறுத்துவதற்கான ஒத்துழைப்புக்களை, இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் வழங்கியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Read More »