தமிழ்லீடர்

தனது மருமகன் ஒரு அப்பாவி; அவர் மீது நம்பிக்கை உள்ளது

6

பயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர், மொஹமட் நிசாம்தீன் அவ்வாறான செயலில் ஈடுபட்டிருப்பதாக நம்ப முடியாது என்று அமைச்சர் பைஸர் முஸ்தபா கூறியுள்ளார். வௌிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மொஹமட் நிசாம்தீன் விளையாட்டுத்துறை அமைச்சரான பைஸர் முஸ்தபாவின் மருமகன் என தெரிவிக்கப்படுகின்றது. அவரின் நியாயத்தன்மை சம்பந்தமாக பூரண நம்பிக்கை இருக்கின்ற போதிலும் அவுஸ்திரேலியாவின் சட்டம் செயற்படுகின்ற முறை சம்பந்தமாக தமது குடும்பத்தின் அனைவரும் மதிப்பளிப்பதாக கூறியுள்ளார். தனது மருமகன் ...

Read More »

தேர்தல் காய்ச்சல்: மக்களை சந்தித்த தமிழ் அரசு கட்சி!

F9DA00E1-F247-467D-AD19-3BE8A547B2C7

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகளின் மக்கள் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வு சித்தாண்டி ஈரளக்குளம் கிராம அதிகாரி பிரிவில் செங்கலடி பிரதேச சபையின் சித்தாண்டி வட்டார உறுப்பினர் எஸ்.முரளிதரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாக ஞா.ஸ்ரீநேசன், சீனித்தம்பி யோகேஸ்வரன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் உட்பட கட்சியின் பிரநிதிகளும் கலந்து கொண்டனர். அத்துடன் ஈரளக்குளம், இலுக்கு, கூழாவடி ஆகிய கிராமங்களின் நடாத்தப்பட்ட மக்கள் சந்திப்பிலும் கலந்து கொண்டு மக்கள் ...

Read More »

எமக்கு உயிர் வாழ தண்ணீர் இல்லை உமக்கு வியாபாரத்திற்கு வேண்டுமா!

D8C15580-3E54-484B-9D40-FEDDA68CE472

மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேசத்துக்குட்பட்ட பெரியபுல்லுமலையில் மக்களின் எதிர்ப்பினையும் மீறி அமைக்கப்படுகின்ற போத்தலில் அடைக்கப்படும் குடிநீர்த் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதனை தடுக்கக் கோரியும் செப்டம்பர் 7ம் திகதி கடை அடைப்பிற்கு தயார் ஆகவேண்டும், என “முற்போக்கு தமிழர் அமைப்பு” வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்  இது ஒரு குறித்த சமூகத்திற்கான போராட்டம் இல்லை இது ஒட்டுமொத்த சமூகத்திற்கான போராட்டம் சகல பேதங்களுக்காப்பால் ஒன்று சேர்வோம். எனவும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்  சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் கூறியிருக்கிறார். போத்தலில் அடைக்கப்படும் குடிநீர் தொழிற்சாலை ஆரம்பிக்கும் நடவடிக்கைகளை ...

Read More »

கௌதாரிமுனை காப்பாற்றப்படுமா? மு.தமிழ்ச்செல்வன்

IMG_3362

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமமே கௌதாரிமுனை, மண்ணித்தலை, கௌதாரிமுனை,விநாசியோடை,கல்முனை போன்ற சிறிய பிரதேசங்கள் இதற்குள் அடங்குகின்றன.115 குடும்பங்களை சேர்ந்த சுமார் 386 பேர் வாழ்கின்றனர் என மாவட்டச்செயலக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கௌதாரிமுனையின் அழகு அல்லது சிறப்பு என்பது ஒன்று அதன் தொன்மை, இரண்டாவது இயற்கை அழகு, குறிப்பாக கௌதாரிமுனையில் காணப்படுகின்ற பளிச் என்ற வெள்ளை மணல் மேடுகள் ஆங்காங்கே வெண்ணிற ஆடைகளில் காட்சிதரும் தேவதைகள் போன்றுள்ளன. அத்தோடு அங்கே காணப்படுகின்ற கண்டல் தாவரங்களும், பனைகளும்  கௌதாரிமுனையின் அழக்கினை மேலும் மெருகூட்டுகின்றன ...

Read More »

நல்லாட்சி அரசில் வடக்கில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறவில்லை – சுமந்திரன்

625.500.560.350.160.300.053.800.900.160.90

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறவில்லை என்றும் அவை மஹிந்த காலத்திலேயே இடம்பெற்றதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,மகாவலி அதிகாரசபை முல்லைத்தீவில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கு காணி உத்தரவு பத்திரங்களை வழங்கும் நிலையில் அவ்வாறு வழங்கவில்லை. நாங்கள் ஆராய்ந்தமைக்கு அமைவாக அமைச்சர் ராஜித கூறிய கருத்து உண்மையானது. ராஜபக்ச காலத்திலேயே குடியேற்றப்பட்டார்கள்.ஆனால் ராஜபக்ச காலத்தில் ...

Read More »

தற்கொலை செய்வதற்கே சென்றோம், ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கழுத்தை நெரித்து கொலை செய்தேன்

IMG_8637

கிளிநொச்சியில் கொலை செய்யப்பட்ட  நித்தியகலாவினைக் கொலை செய்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஸ்னகீதன் என்பரே குறித்த பெண்ணை கழுத்து நெரித்தே கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் குறித்த அவரது ஒப்புதல் வாக்கு மூலத்தில் குறித்த பெண்ணுடன் தனக்கு தொடர்பு இருந்தது  அவரது வயிற்றில் வளந்த குழந்தை என்னுடையதுதான்   அதனால் அவள்  தனை கூட்டிச் செல்லுமாறு வற்புறுத்தினாள் பின்னர் நாம் இருவரும் நஞ்சு குடித்து இறந்துவிடுவோம் என்று முடிவெடுத்து 28.08.2017 அன்று  ...

Read More »

கிளிநொச்சிக் கொலை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் பொலிசாரால் கைது 

rape

கிளிநொச்சியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கொலை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் பெரும் குற்றப்பிரிவு  விசேட குழுவினரால் ஒருவர்   சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார் கைதுசெய்யப்பட்டவர்  அதே ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற தனியார்  பாதுகாப்பு நிறுவனத்தின் நிலையைப் பொறுப்பதிகாரி என அறியமுடிகிறது இவர் கிளிநொச்சி விநாயகபுரத்தை  சேர்ந்த இரண்டு பிள்ளைகளின்  தந்தை எனவும் பொலீஸ் தரப்பு தெரிவிக்கிறது. பொலிசார் குறித்த பெண்ணின் தொலைபேசியின் தரவுகளை அடிப்படையாக கொண்டு  விசாரணைகளை மேற்கொண்ட போது  குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் தொலைபேசியில் இருந்தே இறுதியாக அழைப்பு எடுக்கப்பட்டுள்ளதுடன் தொலைபேசியில்   இவருடனே அதிகளவாக தொடர்பில் ...

Read More »

கிளிநொச்சியில் கொல்லப்பட்ட பெண் ஐந்து மாதக் கர்ப்பிணி

IMG_3815

கிளிநொச்சியில் கொல்லப்பட்ட பெண் ஐந்து மாதக் கர்ப்பிணி கிளிநொச்சியில்  சடலமாக மீட்க்கப்பட்டவர் கழுத்து நெரித்தே கொல்லப்பட்டுள்ளதாக உடற்கூறுப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது உடற்கூறுப் பரிசோதனைக்காக நேற்று(29.08.2018) இரவு சடலம் யாழ்ப்பாணம் அனுப்பப்பட்ட நிலையில் சற்று முன் உடற்கூறுப் பரிசோதனை நிறைவடைந்துள்ளது அவ்  அறிக்கையிலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது குறித்த அறிக்கையில் இறப்புக்கான காரணம் கயிறு ஒன்றினால் கழுத்து நெரித்து  கொல்லப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பெண் ஐந்து மாதக் கர்ப்பிணி எனவும்,கொலைசெய்யப்பட்ட அன்று அவர் வன்புணர்வுக்கு உட்ப்படுத்தப்படவில்லை எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இடது ...

Read More »

திருமலையில்  திறக்கப்பட்ட ஏற்றம் அறக்கட்டளையின் கைத்தொழில் நிலையம் !

IMG-1616

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட சந்தோசபுரம் கிராமத்தில் ஏற்றம் நிறுவனத்தினரால் கைத்தொழில் நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.  ஏற்றம் அவுஸ்திரேலியாவின் நிதிப் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இக் கைத்தொழில் நிலையத்தில் தற்போது ஊதுபத்திகள் தயாரிக்கப்படுகின்றன. ஏற்றத்தின் நிறுவனப் பணிப்பாளர் இராசரத்தினம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஒழுங்கமைப்பை ஏற்றம் அறக்கட்டளையின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர்  டிசான் அவர்கள் செய்திருந்தார். ஏற்றம் அறக்கட்டளையின் கிளிநொச்சி இணைப்பாளர் மதிவாணன் அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.   இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதேச செயலாளர் அவர்கள் ஏற்றம் நிறுவனத்தின் இம்முயற்சியைப் பாராட்டியதோடு  ஊதுபத்தியுடன் ஏற்கனவே ...

Read More »

அரசு ஏமாற்றிவிட்டது. கஜனின் சகோதரி கவலை

IMG_3756

தம்பியின்  மரணத்திற்கு பின்னர் வழங்கப்பட்ட பல வாக்குறுதிகளில் வீடு மாத்திரமே  அமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. குறித்த வீடு எமக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையிலேயே  காணப்படுகிறது. என கஜனின் சகோதரி கவலை தெரிவித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற பொலீஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்ட  இரண்டு  யாழ் பல்கலை கழக மாணவர்களின் ஒருவரான கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த நடராஜா கஜனின் குடும்பத்தினருக்கு மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சினால் 13 இலட்சத்து 50 ரூபா நிதி ஒதுக்கீட்டில்  புதிய வீடு ஒன்று அமைக்கப்பட்டு நேற்று ...

Read More »