தமிழ்லீடர்

மனித உரிமை மீறல்கள் விவகாரம் தொடர்பில் சர்வதேச நீதிபதிகள் ஊடாகவே தீர்வு – கனடா வலியுறுத்து!

canada

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளின் ஊடாக உரிய தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு கனடா வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது அமர்வின் போது கனடா வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா பிரிலான்ட் இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More »

விக்னேஸ்வரனின் கணக்கு? – நிலாந்தன்

nilanthan

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னணியில் கடந்த வியாழக்கிழமை தமிழ்மக்கள் பேரவை கூடியிருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான வீதியோர போராட்டங்கள் ஓராண்டை பூர்த்தி செய்திருக்கும் ஒரு காலச் சூழலில் பேரவை கூடியிருக்கிறது. உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு முன் பேரவையில் பங்காளிகளாக காணப்பட்ட இரண்டு கட்சிகளையும் ஒருங்கிணைத்து அவற்றிற்கு தலைமை தாங்க கூடிய தகுதியும் பொறுப்பும் பேரவைக்கே இருந்தது. ஆனால் பேரவை அதை செய்யவில்லை. அதனால் அவ்விரு கட்சிகளும் தனித்தனியாக இருவேறு கூட்டுக்களை அமைத்தன. இதனால் தமிழ் வாக்குகள் சிதறின.தனது பங்காளி கட்சிகளுக்கு உரிய நேரத்தில் உரிய ...

Read More »

“வடக்கு அரசியல்“ – நடக்கப் போவது என்ன? – தமிழ்லீடருக்காக வித்தகன்

viky

மீண்டும் ஒரு தேர்தல் பரபரப்புக்கு இலங்கை தயாராகி விட்டது. ஆம்… மாகாண சபைத் தேர்தல் வரும் மே மாதம் அறிவிக்கப்படவுள்ளது. நாட்டின் அனைத்து மாகாணங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தி விட அரசாங்கம் எத்தனிக்கிறது. இந்நிலையில் தமிழ்க் கட்சிகள் சில ஒன்றிணைந்து புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க தீவிரமாக உழைத்து வருகின்றன. இந்தப் புதிய கூட்டணியின் மையமாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் – தமிழ் மக்கள் பேரவையினரும் உள்ளனர்.

Read More »

தமிழரசுக்கட்சிக்கு சிவகரன் சாபம் (கடிதம்)

sivakaran

உட்கட்சி சனநாயகத்திற்கு சாவுமணி அடித்து விட்டு அரசியல் அறத்திற்கு மரண தண்டனை கொடுத்து விட்டு கண்ணாடிக் கூண்டில் இருந்து கல்லெறிய வேண்டாம். நான் ஒன்றும் கருவாட்டுக்கடையில் கற்பூரம் விற்பவன் இல்லை. தழிழ்த் தேசியம் எனும் ஆணி வேரில் இருந்து அரும்பியவன். எனக்கு இலவச விளம்பரம் பெற்றுத்தந்தமைக்கு மிக்க நன்றிகள் என சனநாயக தமிழரசுக்கட்சியின் செயலாளர் வி.ஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

Read More »

“சிரியா“ – நடப்பது என்ன?

sriya

சிரியா… பெயரை உச்சரிக்கும்போதே இதயத்தை சோகம் வாட்டி வதைக்கிறது இல்லையா? ஆண்டாண்டு காலமாக அந்த நாட்டில் பிரச்னை நிலவிவந்தாலும் சமீபத்தில் நடந்த தாக்குதல்கள் கடந்துசெல்லமுடியாதவை. வீடற்றவர்களின் ஏக்கம்; நாடற்றவர்களின் அழுகுரல்; தாய் தந்தையரை இழந்த குழந்தைகளின் எதிர்காலம்; குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோர்களின் மரணவலி. இவையெல்லாம் கடந்த சில நாள்களாக மனிதம் போற்றும் அத்தனை பேரையும் கண்ணீர்விட வைத்துவருகிறது.

Read More »

தமிழ் மக்கள் பேரவையின் அடுத்த கட்டம் – வடக்கு முதல்வர் உரை!

viky

தற்­போது எமது இளைஞர் அணி­களை உரு­வாக்க தக்க தருணம் வந்­துள்­ளது. வட கிழக்கு மாகா­ணங்­களில் இளைஞர் அணி­களை ஒன்று சேர்க்­கவும் அவர்­க­ளுக்கு எமது தமிழ் மக்கள் பேர­வையூ­டாக போதிய அர­சியல் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தவும் வேண்­டி­யுள்­ளது என்று வட­மா­காண முத­ல­மைச்­சரும் பேர­வையின் இணைத் தலை­வ­ரு­மான சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

Read More »

காணாமல் போனோர் பணியகத்தின் தலைவராக சாலிய பீரிஸ்!

saliya

ஜெனிவா அமர்வில் மீண்டும் இலங்கை அவதானம் பெறும் இவ்வேளையில், காணாமல் போனோர் பணியகத்தின் ஏழு உறுப்பினர்களின் நியமனங்களுக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கீகாரம் அளித்துள்ள தகவல் வெளியாகிவுள்ளது.

Read More »

கேப்பாபுலவு போராட்டம் ஒரு வருடத்தை எட்டியது!

Keppapulavu

கேப்பாபுலவு பூர்விக கிராமத்தை மீட்பதற்காக கடந்த வருடம் (2017) மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த நில மீட்பு போராட்டம் இன்று (01) ஒரு வருடத்தை பூர்த்தி செய்கிறது. கேப்பாபுலவு மக்களுக்கு சொந்தமான காணிகளில் படையினர் அபகரித்துள்ள காணிகளில் இருந்து 133.4 ஏக்கர் காணிகள் கடந்த வருடம் டிசம்பர் 28 ஆம் திகதி மக்கள் முன்னிலையில் படைத்தரப்பில் இருந்து, மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

Read More »

கொத்துக்குண்டுகளை பயன்படுத்தவேயில்லையாம் – ராஜித சொல்கிறார்!

cluster-bomb-usage-in-sl-720x480

இலங்கை இராணுவப் படைகள் யுத்தத்தின்போது எந்தவொரு கட்டத்திலும் கொத்தணிக்குண்டுகளை பயன்படுத்தவில்லை. இதுதொடர்பான குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் நிராகரிக்கிறது. இலங்கை பாதுகாப்புத் தரப்பினர் கொத்தணிக்குண்டுகளை பாவித்தமைக்கான எந்தவொரு சாட்சியமும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாநாயக்க தெரிவித்தார்.

Read More »

வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் கைதாகி விடுதலை!

Ravikaran

வடக்கு மாகாணசபை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (28) காலை முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Read More »