தமிழ்லீடர்

கனகராயனகுளம் பொலீஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக மக்களும் மாணவர்களும் ஆர்ப்பாட்டம்

41631445_2205846856319470_8990787153910824960_n

வவுனியாவில் பொலிஸாருக்கு எதிராக பாரிய போராட்டம் : பேரூந்து மூலம் பொலிஸார் குவிப்பு வர்த்தகர்களும் வர்த்தக நிலையத்தினை மூடி எதிர்ப்பு தெரிவிப்பு வவுனியா கனகராயன் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு எதிராக இன்று (11.09.2018) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று கனகராயன்குளம் பாடசாலைக்கு முன்பாக நடைபெற்றது. கனகராயன்குளம் வர்த்தக சங்கம், பொது அமைப்புக்கள், கிராம மக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டமானது கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சிவில் உடையில் சென்று இரண்டு சிறுவர் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் மேல் கொலை வெறி தாக்குதல் ...

Read More »

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை மீது விசனம்

Michelle-Bachelet UN

நிலைமாறும்கட்ட நீதி தொடர்பான நிகழ்ச்சிநிரலை இலங்கையில், அதிகாரிகள் அர்த்தபூர்வமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மிக மெதுவான நகர்வையே முன்னெடுக்கின்றனர் எனத்தெரிவித்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் திருமதி மைக்கேல் பசேல் ஜெரியா, இலங்கை தொடர்பிலான சில விடயங்கள் குறித்து, தன்னுடைய கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39ஆவது கூட்டத்தொடர், நேற்று (10) ஆரம்பமானது. அத்தொடர், எதிர்வரும் 28ஆம் திகதி வரை நடைபெறும். இந்தக் கூட்டத்தொடரில், நியாயமற்ற வகையில் தடுத்து வைக்கப்பட்டிருப்போர் பற்றி ஆராயும் ஐ.நா பணிக்குழுவின் இலங்கை விஜயம் பற்றிய ...

Read More »

இந்துக் கோவில்களில் மிருகபலி செய்வதை தடை செய்ய அமைச்சரவை அனுமதி

500px-கடாவெட்டு

இந்துக் கோவில்களில் அல்லது அதன் எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் மிருகபலி மற்றும் பறவைகள் பலியிடுவதை தடைசெய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா கூறியுள்ளார். மிருக பலி சம்பந்தமாக சட்ட ஒழுங்கமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டீ.எம். சுவாமிநாதன் முன்வைத்த யோசனைக்கு அமைவாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதுடன், அது தொடர்பான சட்ட வரைவை இயற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்து மதத்தின் ...

Read More »

ஜனாதிபதிக்கு எதிராக இராஜதந்திர நடவடிக்கை – ததேகூ

tna_CI

இலங்கை இராணுவத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களில் இருந்து இராணுவத்தை விடுவித்து அவர்களை பாதுகாக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் ஜனாதிபதி முன்வைக்கவுள்ள யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் குறித்த நடவடிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் ஏனைய அங்கத்துவ நாடுகளுடனும் இராஜ தந்திர தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாகவும் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மேலும் யுத்தக்குற்றம் இளைத்த இராணுவத்தினர் மீது விசாரணை செய்யப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற ஐ.நா.தீர்மானத்தில்  எந்தவிதமான விட்டுக் கொடுப்புக்களையும் கூட்டமைப்பு மேற்கொள்ளாது, என்பதுடன் அத் ...

Read More »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எப்போது தலைவரானார் சுமந்திரன்?

49D96564-4089-4CA4-844A-03AD0AC6DE43

வடமாகாணசபை முதலமைச்சரும், நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் சிலோன்  ருடே பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் நான் என்னுடைய காலத்திற்குள் பல தடைகள் வந்த போதும் மக்களின்  ஆதரவுடன் தமிழ் மக்களுக்கு செய்ய வேண்டிய விடயங்களை  என்னால் முடிந்தவரையில் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சேவை செய்வதே எனது கடப்பாடாகக் கருதி செய்துள்ளேன்  என்று குறிப்பிட்டார்.  சிலோன் ருடே பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி தமிழில் : 1. கேள்வி – உங்கள் முதலமைச்சர் பதவிக்காலம் விரைவில் முடிவடையவிருக்கின்றது. முதலமைச்சர் என்ற வகையில் இது வரையான உங்கள் ...

Read More »

நளினி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைக்க முடிவு

rajiv-murder

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரை விடுதலை செய்வதற்காக ஆளுநருக்கு பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அமைச்சரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறையிலுள்ளனர். இவர்களை விடுதலை செய்ய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முயற்சித்தார். ஆனால் இவர்களது விடுதலைக்கு பல்வேறு காரணங்கள் தடையாக இருந்தது. இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய எவ்வித ஆட்சேபனையும் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் ...

Read More »

உரிய காலத்திற்கு முன் ஜனாதிபதி தேர்தல் இல்லை – மைதிரி

my3pala

ஜனாதிபதி தேர்தல்பற்றி தேவையற்ற பரபரப்பொன்று இன்ற நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகக் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மிக விரைவில் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை பெற்றுத் தருவதாக சிலர் தெரிவித்து வருகின்றபோதும், உரிய காலத்திற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தான் ஒருபோதும் தயாராக இல்லையென்றும் அவ்வாறு நடத்துவதாயின் அதுபற்றிய தீர்மானமொன்றை தனக்கு மட்டுமே மேற்கொள்ள முடியுமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நிவித்திகல சந்தை வளாகத்தில் இடம்பெற்ற நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இங்கு தொடர்நது உரையாற்றிய ஜனாதிபதி , பொதுஜன முன்னணியும் ...

Read More »

முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றம் நடப்பது உண்மையே-மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவை

l

முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றம் நடப்பது உண்மையே என தெரிவித்து முல்லைத்தீவில் நடைபெறும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவையால் அறிக்கை ஒன்று வெளியிடபட்டுள்ளது . அந்த அறிக்கை வருமாறு முள்ளிவாய்க்கால் வரலாற்றுத்தளத்தின் பின் தமிழர்கெதிரான அடக்குமுறை வெவ்வேறு வடிவங்களை எடுத்துள்ளது அதில் தமிழர் நில அபகரிப்பு முதன்மையானது. மகாவலி அதிகாரசபை தொல்லியல் திணைக்களம்  வன பாதுகாப்புத் திணைக்களம் வன ஜீவராசிகள் திணைக்களம் பாதுகாப்புப் படையினர் என பல்பரிமாண நிலபகரிப்புக்கெதிராக தமிழினம் முகங்கொடுக்க வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளது. இவ் அடக்குமுறைகளுக்கெதிராக  நெருக்கடிகளைக் கையாள ...

Read More »

புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிராக ஒன்றுதிரண்ட மக்கள்.

batti3

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பற்று பிரதே சபைக்கு உட்பட்ட பெரியபுல்லுமலை பிரதேசத்தில்  தண்ணீர் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டம் முழுவதிலும் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. தண்ணீர் பற்றாக்குறையினால் அவதியுறும் புல்லுமலை பிரதேசத்தில் நிலத்தடி நீரை உறிஞ்சி பாலைவனமாக்கும் நோக்குடன் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் மேற்படி தண்ணீர் தொழிற்சாலையின் கட்டுமாணப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டியும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசாங்கம் செயற்பட வேண்டியும் மட்டக்களப்பு மாவட்டம் பூராக பூரண ஹர்த்தாலுக்கு பொது அமைப்புக்கள் அழைப்பு விடுத்தன. பொது அமைப்புக்களின் கோரிக்கைகளுக்கு இணங்கி ...

Read More »

நீதியரசரின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்

Vigneshwaran-01

வட மாகாண அமைச்சராக செயற்பட்ட ப.டெனீஸ்வரனினால் தமக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை தொடர்ந்தும் விசாரணை செய்வதை தடுக்கும் வகையில், வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் விடுத்த கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ப. டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கி, 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானியை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் வகையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவை நீக்குமாறு கோரி சி.வி. விக்னேஷ்வரனால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு எதிர்வரும் 20 ஆம் திகதி ...

Read More »