தமிழ்லீடர்

டெனிஸ்வரனுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்க வடக்கு முதல்வர் இணக்கம்

1536974588

வடமாகாண முன்னாள் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனை அமைச்சுப் பதவியில் மீண்டும் உள்வாங்குவதற்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இணக்கம் தெரிவித்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வடக்கு மாகாண சபையின் 131 ஆவது அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை(11) நடைபெற்றிருந்த நிலையில் அன்றிலிருந்து வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கு வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்றும் நேற்று முன்தினமும் இந்த விவகாரம் தொடர்பில் வடக்கு மாகாண அவைத்தலைவர் வடக்கு மாகாண முதலமைச்சருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். ...

Read More »

தி.மு.க. ஒரு வார்த்தை மத்திய அரசிடம் கூறியிருந்தால் தமிழர்களை காப்பாற்றியிருக்கலாம்

Jayakumar-720x450

தி.மு.க. ஒரு வார்த்தை மத்திய அரசிடம் கூறியிருந்தால் தமிழர்களை காப்பாற்றியிருக்கலாம் என அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் விஷயத்தில் தமிழக அரசுக்கு  அதிகாரம் இருப்பதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அந்த பரிந்துரை மீது  ஆளுநர் காலம் தாழ்த்தாமல் முடிவெடுக்க வேண்டும் என பல்வேறு கட்சியினரும் தெரிவித்துள்ளது. இந்நிலையில்  ஆளுநர் முடிவு ...

Read More »

திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவேந்தலில் கட்சி முரண்பாடுகள்

41788460_1756290664482126_1381920394801315840_n

தியாக தீபம் திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் முதல் நாள் நிகழ்வு, இன்று (15) ஆம்பிக்கப்பட்ட நிலையில் நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கிடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டது. பருத்தித்துறை வீதி – நல்லூர் பகுதியில் அமைந்துள்ள திலீபன் நினைவு தூபியில், மேற்படி நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதில், யாழ். மாநகர சபை பிரதி மேஜர் ஈசன், தமிழத் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் எஸ். கஜேந்திரன், ஜனநாயகப் போரளிகள் கட்சிப் பிரதிநிதிகள், வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் ...

Read More »

சுமந்திரனுக்கு எதிராக முல்லைத்தீவில் ஒட்டப்பட்டுள்ள துண்டுபிரசுரம்

625.0.560.320.160.600.053.800.700.160.90

இது தமிழ் தலைவர்கள் எனப்படுவோர் ஐக்கியப்படவேண்டிய நேரம் “எனும் தலைப்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை விமர்சித்தும் தமிழ் தேசியகூட்டமைப்பின் செயற்பாடுகளை விமர்சித்தும் முல்லைத்தீவு நகரில் பரவலாக துண்டுபிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி கண்டறியும் சங்கம் எனும் அமைப்பின் பெயரை தாங்கி குறித்த சுவரொட்டிகள் ஒட்டபட்டுள்ளன. இந்த சுவரொட்டியில் ‘முதலில் நாம் ஒரு தமிழ் தலைவரை தேர்ந்தெடுக்கவேண்டும் ,நாம் ஒரு இணைப்பை அல்லது கூட்டணியை உருவாக்க வேண்டும் . சிங்களவர்களால் ஏமாற்றப்பட்ட அரசியல்வாதிகள் ,தமிழர்களை ...

Read More »

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜெனிவா செல்ல விசா மறுப்பு

IMG_7892

கிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்புப்போட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஜ.நா. மனித உரிமைகள் ஆணையக கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்கான விசா மறுக்கப்பட்டமை தொடர்பில் ஊடக சந்திப்பொன்றை இன்று நடத்தியுள்ளனர். இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளுக்கு நீதிகோரி கடந்த 560 நாட்களாக போராடி வருகின்றோம் ஆனால் தமக்கான தீர்வுகிடைக்கும் வரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும்.எனவும் தெரிவித்தனர் அத்தோடு காணாமல் ...

Read More »

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புச் சார்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம்  முதலமைச்சருக்கு ஆனந்தசங்கரி கடிதம்

sangary-2

தமிழரக் கட்சி உள்ளடக்கிய தமிழத் தேசியக் கூட்டமைப்பில் சார்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் எனவும்      உட்கட்சி உரசலால்; நீங்கள் மனதில் நினைத்திருந்த பல நல்ல திட்டங்களை செயற்படுத்த முடியாமல் போய் விட்டது. அந்த இடைப்பட்ட காலத்தில் தங்களின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை நான் நன்கு அறிவேன். எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின்  செயலாளர் நாயகம், வீ. ஆனந்தசங்கரி வடக்கு முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார் அவரின் கடிதத்தின் முழு விபரம் வருமாறு மேதகு முதலமைச்சர் சீ. வி. விக்ணேஸ்வரன் அவர்களுக்கு, அன்புடையீர், ...

Read More »

ரவீந்திர குணவர்த்தனவை கைதுசெய்யவே விசேட அமைச்சரவை கூட்டம்

1536747630-avindra-wijegunaratne-2

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்ததை தொடர்ந்து விசேட அமைச்சரவை கூட்டம் தற்போது இடம்பெற்றுவரும் அதேவேளை முப்படைகளின் பிரதானி ரவீந்திர விஜேயகுணவர்த்தனவை கைதுசெய்வது குறித்து ஆராய்வதற்காவே இந்த கூட்டம் இடம்பெறுகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் சிரேஸ்ட படையதிகாரியான ரவீந்திர விஜயகுணவர்த்தனவை கைதுசெய்வதற்காகவே இந்த விசேட அமைச்சரவை கூட்டத்தை ஜனாதிபதி கூட்டியுள்ளார் என அரச வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் வாக்கு மூலம் வழங்குவதற்கு முன்னதாக முப்படைகளின் பிரதானி மெக்சிக்கோ சென்றுள்ளமையும் இலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

Read More »

2019ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரன் போட்டியிடலாம் – மகிந்த

625.500.560.350.160.300.053.800.900.160.90

எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரன் வேட்பாளராக இருக்கலாம் என்றும், அதனை கட்சியே முடிவு செய்யும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், ´த ஹிந்து´ பத்திரிகையுடன் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய எடுத்த தீர்மானம் இந்தியாவின் உள்ளக நடவடிக்கைகளில் ஒன்றாகும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் இலங்கையில் இடம்பெற்றிருப்பின் வேறு தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கும் எனவும் இருப்பினும் இது இந்தியாவின் ...

Read More »

தொல்லியல் திணைக்களத்தின் தலைமை அதிகாரி ஒரு பௌத்த பிக்கு

FB_IMG_15222511351768574

வடமாகாணத்தில் தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறல்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள நிலையில் அதனை தொடர்ந்தும் சகித்துக் கொண்டிருக்க முடியாது இதே நிலை இனியும் தொடர்ந்தால் தொல்லியல் திணைக்களத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என  வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறல்களை சுட்டிக்காட்டினார்.  குறிப்பா தொல்லியல் திணைக்களம் பௌத்த விகாரைகளையும், புத்தர் சிலைகளையும் தமிழர் பிரதேசங்களில் நிறுவ நினைக்கிறதே தவிர தனது வேலையை செய்யவே இல்லை என குற்றஞ்சாட்டினார். ...

Read More »

ஐ.நா சபையின் கண்காணிப்புடன் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் ; வடமாகாண சபை

IMG_4558

இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவது தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வட.மாகாண சபையின் 131 வது அமர்வு இன்று கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் சீ.வி.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியது.. குறித்த பிரேரணையில், ‘யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் நிலை, காணாமற்போனோர், தமிழ் அரசியற் கைதிகள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தொடந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழ்ப் பிரதேசங்களில் பெருமளவிலான பாதுகாப்புப் ...

Read More »