தமிழ்லீடர்

எண்பதுகளை நோக்கி; அரச பயங்கரவாதம் – மாரீசன் –

maree1

அது 1983ஆம் ஆண்டுக்கு முன்னைய சில வருடங்கள்! அது தமிழர் தாயகத்தின் ஒவ்வொரு வீடுகளுக்கும் அரச பயங்கரவாதம் தன் கோரக்கரங்களை விரித்து வேட்டையாடிய காலம்! திடீரென அதிகாலையில் கிராமங்கள் சுற்றிவளைக்கப்படும். சில இளைஞர்கள் கைது செய்யப்படுவார்கள்! இவர்களில் சிலர் காணாமல் போவதுண்டு. சிலர் சித்திரவதை செய்யப்பட்டு சிறை செய்யப்படுவர். வீதிகளில் இராணுவ ரோந்து அணி செல்லும்; திடீரென துப்பாக்கிகள் முழங்கும், கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தில் வீதியில் நடமாடியோர் செத்து விழுவர். சில சமயங்களில் வீதியருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களும் சுடப்படுவர். எந்த வீடுகளும் தீக்கிரையாக்கப்படும். ...

Read More »

‘மீண்டும் புலிகள்’ – வடக்கில் நடப்பது என்ன? – மாரீசன் –

maree

கடந்த 30 வருடங்களாக இலங்கையின் இனவெறி பிடித்த அரசுகள் தமிழ் மக்கள் மீது ஒரு இன அழிப்புப் போரைக் கட்டவிழ்த்து விட்டன. ஆனால் விடுதலைப்புலிகள் தோற்றம் அவர்களின் நப்பாசையில் மண் வீழ்த்தியது. அவர்களின் இன அழிப்புப் போரை விடுதலைப் புலிகள் இன விடுதலைப் போரால் எதிர்கொண்டனர். தட்டிக் கேட்க ஆளில்லை என்ற இறுமாப்புக் கொண்ட இராணுவம் காலத்துக் காலம் அடிக்கு மேல் அடிவாங்கி நடு நடுங்கியது. விடுதலைப் போராட்டத்தை தோற்கடிக்க முடியாத நிலையில் இலங்கை ஆட்சியாளர்கள் சர்வதேச உதவியை நோக்கி ஓடினர். துரோகிகளும் அடிவருடிகளும் ...

Read More »

சர்வதேசத்துக்கு சவால் விடும் இலங்கை – மாரீசன் –

mareesan

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவாலும் அதன் நட்பு நாடுகளாலும் ஒரு கண்டனத் தீர்மானம் முன்வைக்கப்படவுள்ள வேளையில் இலங்கையின் தருமபுரம் பகுதியில்  வைத்து இரு மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் தென்பகுதி மனித உரிமைச் செயற்பாட்டாளர் ருக்சி பெர்ணாண்டோ, மற்றையவர் அமைதிக்கும் சமாதானத்துக்குமான அமைப்பைச் சேர்ந்த அமைதிபுரம் பிரதேசப் பங்குத்தந்தை வண.பிரவீன் மகேசன். இருவரும் சர்வதேச மட்டத்திலான மனித ...

Read More »

‘அமெரிக்க பிரேரணை’ சதிவலை பின்னியது யார்? – தமிழ்லீடர் ஆசிரியர்பீடம்

Sumanthiran-sampanthan2

முள்ளிவாய்க்காலில் ஈழவிடுதலைக்கான ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டபோது ஏற்பட்ட உணர்விற்கு அண்மித்த ஒரு வலியினை உலகத்தமிழினம் இன்று சந்தித்திருக்கிறது. ஜெனீவா கூட்டத் தொடர் சிங்களப் பேரினவாத அரசுக்கு மிகப் பெரும் சவாலாக அமையும் என்ற ஒரு எதிர்பார்ப்பு உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழ் மக்கள் மனங்களில் சிறு நம்பிக்கை தருவதாக அமைந்திருந்தாலும் இறுதி நேரத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு மீண்டுமொரு அவகாசத்தைக் கொடுக்கும் ஒரு வரைபு அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டமை பலத்த ஏமாற்றத்தினை கொடுத்திருக்கிறது. ஆனால் அமெரிக்கா அண்மையில் தெரிவித்து வந்த கருத்துக்களுக்கும் தற்போது முன்வைத்திருக்கின்ற வரைபுக்கும் இடையில் ...

Read More »

இந்தியாவின் ‘புலி வியாபாரம்’ – மாரீசன் –

Puli

இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள அந்தமான், நிக்கோபார் தீவுகளில் விடுதலைப்புலிகள் நிலைகொண்டு ஆயுதப் பயிற்சிகளில் ஈடுபட்டுவருவதாக அங்குள்ள யுனியன் நிர்வாகம் தெரிவித்துள்ளதாக இந்திய உள்துறை அமைச்சு ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அப்படி ஒரு சந்தேகம் இருந்தால் அதை புலனாய்வு நடவடிக்கைகள் மூலம் உறுதி செய்து அப்படியான பயிற்சிகளில் ஈடுபடுபவர்களைக் கைது செய்வது தான் வழமையான நடைமுறை. ஆனால் அப்படி எந்த ஒரு விதமான தேடுதல் நடவடிக்கைகளோ, கைதுகளோ இடம்பெறவில்லை. மாறாக புலிகள் அங்கு நிலை கொண்டு பயிற்சி பெறச் சாத்தியமுண்டு என உத்தியோகபுர்வமாக இந்திய உள்துறை ...

Read More »

அன்றும் இன்றும் மும்மூர்த்திகள் – மாரீசன்

Sampanthan-3

இந்து சமயக் கடவுள்களில் மும்மூர்த்திகளே பிரதான தெய்வங்களாகப் போற்றப்படுகின்றனர். பிரமா, விஷ்ணு, சிவன் என மூன்று தெய்வங்களும் முறையே படைத்தல், காத்தால், அழித்தல் என மூன்று கருமங்களையும் செய்பவர்களாகக் கருதப்படுகின்றனர். எனினும் இவர்கள் இப்பணிகளுக்கு அப்பால் தமது பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப் பல திருவிளையாடல்களை மேற்கொள்வதுண்டு. நரியை பரியாக்கி, அரிவர்த்தன பாண்டியனை ஏமாற்றயிமை சரியான கருத்துக்காக விடாப்பிடியாக உறுதியாக நின்ற நக்கீரன் மேல் நெற்றிக்கண்ணை திறந்து வெப்பத்தில் அவதிப்படவைத்தமை உட்பட சிவனின் திருவிளையாடல்கள் ஏராளம். இவ்வாறே விஷ்ணுவும் தனது கண்ணன் அவதாரத்தின் நயவஞ்சகமாகக் கர்ணன் ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு : போர் நாவல் – அந்திமழை!

bookebaylow

தமிழில் இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த படைப்புகள் ஈழத்து மண்ணில் இருந்துதான் முகிழ்க்க வேண்டும். ஏனெனில் அந்த சமூகமே மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது என்று சொல்லுவதுண்டு. முள்ளிவாய்க்கால் போன்ற பெரும் அழித்தொழிப்புக்கும் ஆயுதப் போராட்டத் தோல்விக்கும் பின்னர் தன்னை மீட்டெடுக்க கடந்த நான்காண்டுகளாக அச்சமூகம் போராடி வருகிறது. அதில் ஒரு பகுதியாகத்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்துவரும் படைப்புகள். அதில்ஒன்றுதான் நீந்திக்கிடந்த நெருப்பாறு என்கிற இந்த நாவல். இது ஒரு போர் நாவல். ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் மன்னார் முள்ளிக்குளத்தில் இருந்து கிளிநொச்சி வரைக்கும் போரிட்டுக்கொண்டே பின்வாங்கிக்கொண்டு ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு:தலைவரின் வீரமும் கருணாக்களின் துரோகமும்!-கார்ட்டூனிஸ்ட் பாலா

bookebaylow (1)

கடந்த இரு நாட்களாக என்னை கட்டிப்போட்டிருக்கும் புத்தகம் நீந்திக்கடந்த நெருப்பாறு. இதை எழுதியவர் என்று அரவிந்தகுமாரன் என்பவரின் பெயர் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் அவர் யார் என்று எவருக்கும் தெரியாது. அவர் போராளிகளுடன் சுற்றித்திரிந்த ஒரு படைப்பாளியாக இருக்கலாம்.. அல்லது களப்போராளியாக இருக்கலாம். தமிழ் லீடர் ( www.tamilleader.com ) குழுமம் இந்நாவலை வெளியிட்டிருக்கிறது. ஒரு இனத்தின் வீரம் செறிந்த போராட்டம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல களத்திலிருந்து படைப்புகள் வந்தாக வேண்டும். ஒரு ஒற்றைக்குழல் துப்பாக்கியில் தொடங்கிய பிரபாகரனின் இனவிடுதலைப்போர் முப்படைகளை கட்டி அமைத்த வீரம், ...

Read More »

சிங்களத்துக்காக ஆஜராகும் ‘சின்னக்கதிர்காமர்’ – மாரீசன்

sumanthiran

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அண்மையில் நாடாளுமன்றில் ஆற்றிய உரை தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் அவர் தொடர்பாக மட்டுமன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாகவும் அவர்கள் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் வகிக்கும் பங்களிப்புப் பற்றியும் பல கேள்விகளை எழுப்பியுள்ளன. இவர் தமிழ் மக்களின் உரிமைக்குரலாக உரையாற்றினாரோ அல்லது இலங்கையின் இனவாத ஒடுக்குமுறை ஆட்சியாளர்களின் குரலாக உரையாற்றினாரோ என்ற சந்தேகத்தை தமிழ் மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளன. இவர் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல. ஆனால் மிகப் ...

Read More »

‘நீந்திக்கடந்த நெருப்பாறு’ தமிழீழ விடுதலைக்கான படைக்கருவி – வைகோ (காணொலி)

vaiko-speech

இந்த உலகில் வேறெங்கிலும் காணமுடியாத ஒப்பற்ற தமிழீழத் தேசியத் தலைவன் பிரபாகரனின் வீரம் செறிந்த போராட்டத்தின் விளைவை நீந்திக்கடந்த நெருப்பாறு நாவல் பதிவாக்கியிருக்கின்றது. இது வெறும் நாவலாக மட்டும் நின்றுவிடவில்லை. இது ஈழ விடுதலைக்கான படைக்கருவி என்று மறுமலர்ச்சி திராவிடர் கழகப் பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழ்லீடர் இணையக் குழுமத்தின் வெளியீடான, நீந்திக் கடந்த நெருப்பாறு நாவல், சென்னையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலர் வைகோ அவர்களினால் வெளியிட்டுவைக்கப்பட்டது. தமிழக மக்கள், ஈழ உணர்வாளர்கள், செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள், இளைஞர்கள், மாணவர்கள் ...

Read More »