தமிழ்லீடர்

வலிசுமந்த பதிவுகள்- 03 (பரிவு)

vp03

அது 2009-ம்ஆண்டு மாசி மாதகாலப்பகுதி. இரவில் மாசி மாதத்திற்கேயுரிய பனிக்குளிரும் பகலில் பகலோனும் தன் பங்கிற்கு வெப்பத்தை அள்ளி வீசிக்கொண்டிருந்த காலம். வன்னிப் பெருநிலப்பரப்பில் தமிழ்மக்கள் மீதான இனவழிப்புப் போரின் ஆரம்பநாட்கள் அவை. சிங்கள ஆக்கிரமிப்புப் படைகள் நாளாந்தம் நூற்றுக்கணக்கான பொதுமக்ளைக் கொன்று குவித்தும் காயப்படுத்தியும் தமிழ்மக்களின் பூர்வீக நிலப்பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த காலம். இந்த நாட்களில்தான் அரசபடையினரின் கொலைவெறித் தாக்குதல்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வன்னியில் வாழ்ந்த நான்கு லட்சத்திற்கும் அதிகமான மக்களும் முல்லைத்தீவு மாவட்டத்தின் இரணைப்பாலை மாத்தளன் பொக்கணை வலைஞர்மடம் முள்ளிவாய்க்கால் ...

Read More »

சிறிதரன் புல் சப்போட், மாவை அண்ணையும் என்னை விடமாட்டார்!

kusumbu

வணக்கம் எல்லாருக்கும்! எல்லாரும் கடுப்பாயிருக்கிறியள் எண்டு விளங்குது. ஆனா விளக்கம் கொடுக்கிறது என்ர கடமை. நீங்கள் பின்கதவு வழியா வந்தவன் தானே நான் எண்டு, திருப்பிதிருப்பி சொல்லலாம். ஆனா நான் தான் இண்டைக்கு வெஸ்ரேன் பவர்சோட டீல் பண்ணிக்கொண்டிருக்கிறன் என்ன. வாற எலக்கசனில வேணுமெண்டா நிண்டுகாட்டட்டும் பாடம் ஒண்டு படிப்பிக்கிறம் எண்டு கொஞ்சப்பேர் கொடுக்கு கட்டிகினமாம். தம்பி ஒண்டு மட்டும் சொல்லிப்போட்டன். தமிழ் சிங்களம் இங்கிலீஸ் எண்டு 3 மொழியிலயும் உருப்படியாக கதைக்கிறதுக்கு நான் தான் இருக்கிறன். அடுத்தது வாற எலக்சனில நிக்கத்தான் போறன். ...

Read More »

வலிசுமந்த பதிவுகள் – 02 ( நட்பு)

vp02

அது 1999-ம்ஆண்டின் நடுப்பகுதி. சிங்கள ஆக்கிரமிப்புப்படைகள் வன்னிப் பெருநிலப்பரப்பில் அகலக்கால் பதித்திருந்தகாலம். தமிழீழத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வயது வேறுபாடின்றி பாடசாலை மாணவர்களும் இளைஞர்களும் சுயவிருப்பிலேயே தங்களை விடுதலைப்போராட்டத்தில் இணைத்துக்கொண்டிருந்த காலமது. இவ்வாறு சுயமாகவே விடுதலைப்போராட்டத்தில் இணைந்த புதியவர்களை சிறந்த போராளிகளாகப் புடம்போடுவதற்காக அரவணைத்துக்கொண்டது முல்லைத்தீவு மாவட்டத்தில் இயற்கை எழில்மிகுந்த முத்தையன் கட்டுக்கானகம். அப்போதுதான் றேகன் என்று பின்நாட்களில் நான் அவனையும் அவன் என்னையும் ஆழமாக நேசிக்கப்போகும் நண்பனான வேலரசன் அறிமுகமானான். அப்போது அவனுக்கு பதினைந்து வயது. சிறியஉருவம். மிடுக்கான தோற்றம். இவனைப் போலவே இவனையொத்த ...

Read More »

பாலா அண்ணை சொன்ன இரகசியமும் பேச்சுக் கேக்காத தலைவரும்!

kusumbu

வணக்கம் வணக்கம் எல்லாருக்கும் வணக்கம் என்ன அப்பு இண்டைக்கு கலாதியா 3 தரம் வணக்கம் வைக்கிறார் எண்டுதானே யோசிக்கிறியள். தம்பி பிழையா நினைக்கக்கூடாது. நான் இப்ப கொஞ்சம் பிசி தம்பி. உங்களுக்கு தெரியும்தானே எங்கயும் பிரச்சனை எண்டால் என்னட்டைதான் வந்துநிப்பாங்கள். நான் இப்ப பாலா அண்ணை சொல்லிப்போட்டுப்போன விசயங்களை தம்பி ஒரு புத்தகமா எழுதிக்கொண்டிருக்கிறன். ஏனப்பு இப்ப அவசரம் எண்டு கேப்பியள் என்ன? உனக்கு சொன்னா என்ன தம்பி. பாலா அண்ணை கடைசி நேரத்தில சரியான கவலையோட கனக்க இரகசியங்களை சொன்னவர். ஓமோம் தலைவரைப்பற்றியும் ...

Read More »

வலிசுமந்த பதிவுகள் – 01 ( பசி)

vp01

அது 2009-ம்ஆண்டு வைகாசி மாதத்தின் இரண்டாவது வாரம். காலைப்பொழுதின் பறவைகளின் கானங்கள் அப்போது கேட்பதில்லை. முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்டிருந்த மக்களின் துயர் அறிந்ததாலோ என்னவோ பறவைகளும் தமது கடமைகளை மறந்திருந்தன. போரின் உக்கிரத்தன்மை அந்தச் சீவராசிகளையும் பாதித்திருக்கவேண்டும். சேவல்களின் கூவல்களுக்கும் பறவைகளின் கீதங்களுக்கும் பதிலாக அரசபடையினரால் ஏவப்படுகின்ற எறிகணைகளின் அதிர்வொலிகளும் துப்பாக்கிவேட்டொலிகளும் மக்களின் மரணஓலங்களுமே கேடகின்ற பொழுதுகளாகவே அந்தநாட்களின் அனேகமான காலைப்பொழுதுகள் புலர்ந்தன. அன்றயகாலைப்பொழுதும் படையினரின் எறிகணைவீச்சுக்களின் அதிர்வுகளோடுதான் விடிந்தது. முதல்நாள் இரவுமுழுவதும் வானத்தில் பட்டாசுகள் வெடித்ததுபோலவே துப்பாக்கிரவைகள் வெடித்துக்கொண்டேயிருந்தன.தொடரான வேட்டுச்சத்தங்களால் தூக்கம் வரமறுத்தது. பங்கருக்குள் ...

Read More »

அலையில் எழுந்த நரிகள்!

ain

1977ஆம் ஆண்டில் இலங்கைத் தீவில் இரு பேரலைகள் எழுந்தன. வடக்கு கிழக்கில் தனி நாட்டுக்கோரிக்கை என்ற பேரலை எழுந்து தமிழர் விடுதலைக் கூட்டணிக்குப் பெரும் தேர்தல் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. அவ்வாறே தென்னிலங்கையில் ஜே.ஆர். அலையெழுந்து தென்னிலங்கையில் மாபெரும் தேர்தல் வெற்றியை ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெற்றுக்கொடுத்து நாடாளுமன்றில் மூன்றில் இரண்டுக்கு அந்தப் பெரும்பான்மையை அடைய வழிவகுத்தது. தானுண்டு தன் தொழிலுண்டு என வழக்கறிஞர் தொழில் பார்த்து வந்த இரா.சம்பந்தனை காலஞ்சென்ற அமிர்தலிங்கம் அவர்கள் சட்டத்தரணிகள் கட்சி என்ற மரபின் அடிப்படையில் திருமலை தொகுதியில் ...

Read More »

“வீரப் புயலே நீடு வாழ்க..” – ராணா கந்தசாமி –

thalaivar

வைரவிழாக் காணும் வல்லை மண் ஈன்றெடுத்த வரலாற்றின் நாயகனே எல்லைகளில் எதிரிகளை எரித்தொழித்த காவலனே என் குடும்பம் என் உறவு என் சுற்றம் என்றிராது எம்மினத்தின் விடிலுக்காய் எரிமலையாய் வெடித்தவன் நீ….! விடுதலைக்காய் போர் தொடுத்த வீரத் தமிழ் மறவா.. காலச் சக்கரத்துள் நீ கலந்தழிந்து போகாமல் எம்மினத்தை வேரறுக்க வந்த கொடும் பகைவர்களை வென்று வாகை சூடிய எம் பெருந்தலைவன் நீயல்லவா?! உன் விரல் சுட்டும் திசை நோக்கி விருப்போடு களமாட ஆயிரமாயிரமாய் உன் பின் அணி திரள்வர் எம் வீரர் சங்கமமைத்து ...

Read More »

“தமிழீழக் கோரிக்கையை கைவிடுங்கள்” தமிழகத்தில் மூக்குடைபட்ட ‘சம்பந்தன்’!

sampanthan1

“பாரதப் பிரதமர் நரேந்திரமோடி எம்முடனான உரையாடலின் போது தலைவர் சம்பந்தனை இலங்கையின் கௌரவமான ஒரு தலைவர் என பாராட்டியது எமக்கு மிகுந்த பெருமையாக இருந்தது” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா சில நாட்களின் முன்னர் நெகிழ்ந்து போய் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணல்கள் செய்திகளாக பத்திரிகைகளை அலங்கரித்திருந்தன. உண்மையில் சம்பந்தன் கௌரவம் மிக்க தலைவராக தன்னை அடையாளப்படுத்துவதற்கு கடந்த சில நாட்களாக மேற்கொண்டுவரும் பகீரப்பிரயத்தன முயற்சிகள் பற்றி வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு தமிழ்லீடர் விருப்பார்வம் கொண்டிருக்கிறது. சுவாமி சொன்னது ஒன்று, ...

Read More »

தமிழ்த்தேசியவாதிகள் கோமாளிகளா? – ச.வி.கிருபாகரனுக்கு பதிலடி!

தமிழ்த்தேசியவாதிகள்-கோமாளிகளா

ஜெனீவாவில் அமெரிக்காவினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலும் அதில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டமை தொடர்பாக குறிப்பாக அங்கு கலந்து கொண்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர்பாக மிகவும் காழ்ப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதும் அதற்கு தமிழ்த் தேசிய இணையத்தளங்களாக காட்டிக்கொள்ளும் இணையத்தளங்கள் அதனை அவ்வாறே தரக்குறைவான வார்த்தைப் பிரயோகங்களுடன் வெளியிட்டு பிரச்சாரப்படுத்துவதும் மிகவும் வேதனைப்படவேண்டியதாகும். ஜெனீவா கலந்துரையாடலுக்காக அங்கு சென்றிருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், மணிவண்ணன், யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியரும் மனித உரிமை ஆர்வலருமான குருபரன் ஆகியோர் அங்கு கலந்து கொண்டு ...

Read More »

‘தென்னாபிரிக்கப் பயணம்’; கூட்டமைப்பு சாதிக்கப்போவது என்ன?

south-2

தென்னாபிரிக்க அரசின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அங்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். ஏற்கனவே பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த தென்னாபிரிக்க ஜனாதிபதி யேக்கப் சுமோ இலங்கை அரச தரப்பினரிடமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடமும் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் தாம் உதவ முடியும் என்ற கருத்தை வெளியிட்டிருந்தார். இலங்கைத் தமிழ் மக்களைப் போன்றே தென்னாபிரிக்காவின் கறுப்பின மக்களும் இன ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள் என்ற வகையிலும் அதற்கெதிரான நீண்ட காலப் போராட்டத்தை நடத்தி வெற்றி பெற்றவர்கள் என்ற முறையில் அவர்களின் அனுசரணை பயனுள்ளதாக ...

Read More »