தமிழ்லீடர்

மக்கள்பேரவை மாற்றம் தருமா?

makkal-peravai

விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் தமிழ்மக்களின் அடிப்படை அரசியல் உரிமைக்கான போராட்டத்தை முன்னகர்த்த வேண்டிய கூட்டமைப்பானது தனது தேசியப்பணியை கைவிட்டு நீண்டதூரம் சென்றுவிட்டது. தமிழ்மக்களின் ஆதரவுபெற்ற அமைப்பு என்ற பலத்தை பயன்படுத்தி தமிழ்மக்களின் உரிமைக்கான கோரிக்கைகளை முன்வைக்காமல் வெளிநாட்டு அரசுகள் என்ன சொல்லுகின்றதோ அதற்கு ஆமாம் போடும் சாமியாக வந்து அதிக நாட்கள் கடந்துவிட்டன. இப்போது கூட்டமைப்பானது இன்னும் கீழிறங்கி தற்போதைய மைத்திரி அரசு என்ன சாக்குப்போக்குகளை சொல்லுகின்றதோ அதனையே தானும் ஒப்புவிக்க தயாராகிவிட்டது. போர்க்குற்றங்கள் பற்றிய விடயத்திலும் சரி சர்வதேச விசாரணை என்ற ...

Read More »

அரசியலமைப்பு மாற்றமும் தமிழ்க்குடியானவர்களும் – நிலாந்தன்

sri-lankan-parliament

அரசியலமைப்பை சீர்திருத்துவதா? அல்லது புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதா? என்பது தொடர்பில் அரசாங்கத்துக்குள்ளேயே இரு வேறு கருத்துக்கள் இருப்பதாகத் தெரிகிறது. யு.என்.பி. அணியினர் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்று கூறுவதாகவும் ஆனால் எஸ்.எல்.எவ்.பி.யினர் அரசியலமைப்பைத் திருத்தினால் போதும் என்று கருதுவதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் பிரதமர் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் அரசியலமைப்புத் சீர்திருத்தம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அண்மை வாரங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை வைத்துப்பார்த்தால் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்கப்போவதான ஒரு தோற்றமே எழுகிறது. நாடாளுமன்றத்தை அரசியலமைப்புப் பேரவையாக மாற்றுவதற்குரிய பிரேரணை கடந்த ...

Read More »

ஈழத்துக் கவிஞர் இருவருக்கு ‘கவிஞர்கள் திருநாள்’ விருதுடன் 1 இலட்சம் இந்தியரூபா பணப்பரிசு – கவிப்பேரரசு வைரமுத்து

IMG_8057

வைரமுத்துவின் பிறந்த தினமான யூலை 13ந்திகதி தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள ‘கவிஞர்கள் திருநாள்’ நிகழ்வில் ஈழத்துக் கவிஞர்கள் இருவருக்கு விருதுடன் 1 இலட்சம் இந்திய ரூபா பணப்பரிசும் வழங்கி கொளரவிக்கப்படும் என கவிப்பேரரசு வைரமுத்து அறிவித்துள்ளார். இன்று (24-01-2016 ) காலை 10.30 மணியளவில் யாழ். நூலக வளாக கேட்போர் கூடத்தில் கவிப்பேரரசு வைரமுத்து யாழ்ப்பாண இலக்கியவாதிகள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களைச் சந்தித்தார். எழுகலை இலக்கியப்பேரவையின் ஏற்பாட்டில் நடந்த இச்சந்திப்பில் ஏற்புரை வழங்கிய கவிஞர் வைரமுத்து பாராபட்சம் பார்க்காமல் ஈழத்திலிருந்து இரு திறமையான கவிஞர்களைத் தேர்வு ...

Read More »

தமிழ் மக்கள் பேரவையுடனும் பேசுவோம் – கூட்டமைப்பு தீர்மானம்

vikiinkili

தமிழ் மக்கள் பேரவை உட்பட அனைத்து தமிழ்த் தரப்புக்களினதும் கருத்துக்கள் பெறப்பட்டே அரசியல் தீர்வுத் திட்டம் தயாரிக்கப்படவுள்ளதாக தமிழ்த்தேசிக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்  கிளிநொச்சி கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். நேற்று (21-01-2016) காலை 10.30 மணிக்கு கூட்டம் ஆரம்பமானது. இதன்போது கூட்டம் நடைபெற்ற கட்டடத்தொகுதிக்கு வெளியில் ...

Read More »

பேரவையின் தலைமைப் பதவியைத் துறக்கமுடியாது : ஆர்னோல்ட்-அஸ்மின் குழுவுக்கு முதல்வர் பதில்!

முதல்வர்

தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக விலகுமாறு மாகாண சபை உறுப்பினர்கள் சிலரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டார். தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைமைப் பதவியை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டிருப்பதையடுத்து உருவாகியுள்ள சர்ச்சைக்கு முடிவைக்காணும் வகையில் வடமாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கான விஷேட அமர்வு இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதில், மாகாண சபை உறுப்பினர்களான ஆர்னோல்ட், பரஞ்சோதி, அஸ்மின், சுகிர்தன், சயந்தன் ஆகியோர், பேரவையின் இணைத் தலைவர் பதவியிலிருந்து விக்னேஸ்வரன் விலக வேண்டும் என ...

Read More »

எமது விடயத்தில் மௌனம் காப்பதேன்? சம்பந்தனுக்கு தமிழ் அரசியல் கைதிகள் கடிதம்

prisoner

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய நீங்கள் மௌனம் காப்பது ஏன் என கேள்வி எழுப்பி இரா.சம்பந்தனுக்கு தமிழ் அரசியல் கைதிகள் கடிதம் அனுப்பியுள்ளனர், தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட அரசியல் கைதிகள் விடுதலை மக்கள் ஒன்றியம் இணைந்து அனுப்பி வைத்துள்ள அந்த கடிதத்தில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கைதிகள் விடயத்தில் சரியான தீர்;மானத்தினை முழுமையாக எடுப்பீர்;கள் என்ற நம்பிகையில் தான் கடந்த காலத்தில் கைதிகளினால் முன்னெடுத்த உண்ணாவிரதம் முடிவுக்கு வந்ததை தாங்கள் அறிவீர்கள். ஜனாதிபதி தொலைபேசியில் ...

Read More »

2013 தேர்தல் விஞ்ஞாபன அடிப்படையிலேயே பேரவையின் நடவடிக்கைகள்: வடமாகாண உறுப்பினர்களுக்கு முதல்வர் பதில்

Vigneshwaran

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 2013ம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபன அடிப்படையிலேயே தமிழ் மக்கள் பேரவையின் நடவடிக்கைகளை எடுத்துச் செல்கின்றோம்” எனத் தெரிவித்திருக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், “இப்பொழுதும் நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவே செயற்பட்டு வருகின்றோம். தமிழ் மக்கள் பேரவையுடன் எனக்குத் தொடர்பிருந்தமையால் அதனைக் காரணங்காட்டி நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு முரணான வகையில் நடந்து கொள்ளப் பார்க்கின்றேன் என்ற குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு அபத்தமான குற்றச்சாட்டு” எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். மாகாணசபை ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் கூட்டம் இன்று புதன்கிழமை மாலை 5.00 ...

Read More »

சம்பந்தரின் அருவருக்கும் அலட்சியம்! – -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

sampanthan

உயிர் பிரிந்த சடலம் போலாகிவிட்டது, கூட்டமைப்பின் தலைமை. அதன் அலட்சியம் எல்லை மீறிவிட்டது. புதிதாய்த் தொடங்கப்பட்ட, தமிழ்மக்கள் பேரவை தந்த அதிர்வால், தமிழ் கூட்டமைப்புக் கட்டிடத்தின், தாங்கு தூண்கள் ஒவ்வொன்றாய் அசைந்து கொண்டிருக்கின்றன. முதலமைச்சர் விக்னேஸ்வரன், பிரேமச்சந்திரன், சித்தார்த்தன், பேராசிரியர் சிற்றம்பலம் போன்ற, கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் பலர், கூட்டமைப்பின் எதிர்ப்பை அலட்சியம் செய்து நடக்கத்தொடங்கியிருக்கின்றனர். அதுபற்றி எந்தக் கவலையுமில்லாமல், எவர் எப்படிப் போனால் எனக்கென்ன எனும் அலட்சியத்துடன், ‘யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க’ என்று பாடாத குறையாய், தலைவர் சம்பந்தன் அலட்சியத்தின் ...

Read More »

எகிறிய ஆர்னோல்ட், சயந்தன்! அடக்கிய அனந்தி,சிவாஜிலிங்கம் !!

ssaa1

‘வடக்கு முதலமைச்சர் வேறெங்கும் இயங்கக்கூடாது! அழுத்திக் கூறிய வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள்’ என்று தலைப்பிட்டு தமிழரசுக் கட்சி ஆதரவு ஊடகங்கள் சில பரபரப்பு செய்திகளை வெளியிட்டுள்ளன. ஒட்டுமொத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களும் விக்கினேஷ்வரன் அவர்கள் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைமைப் பொறுப்பை ஏற்றதை விரும்பவில்லை என்ற பாணியில் செய்தியாக்கின. ஆனால் உண்மையில் அந்தக் கருத்தை வலியுறுத்தி உரையாற்றியவர்கள் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களான ஆர்னோல்ட், சயந்தன் மற்றும் விந்தன் ஆகியோர் மட்டுமே என்பதே உண்மையாகும். முதலமைச்சர் உடனான சந்திப்புக்கு முன்னர், ...

Read More »

வலிசுமந்த பதிவுகள்- 13 (வெறுமை)

vp13

18-05-2009 அன்றையநாட்பொழுதும் புலர்ந்தது. காலையிலேயே கதிரவன் தனது கடமையை நிறைவாகச்செய்யத் தொடங்கியிருந்தான். நாங்களும் படையினரால் மேற்கொள்ளப்படுகின்ற உடற்சோதனைகளுக்குச் செல்வதற்கான வரிசையில் சேர்ந்துகொண்டோம். அந்த மக்களின் வரிசை மிகவும் நீண்டிருந்தது. நாங்கள் பின்வரிசையிலேயே நின்றிருந்தோம். எறும்புக்கூட்டம் நகர்கின்ற வேகத்திலும் குறைவான வேகத்திலேயே இந்த மக்கள்வரிசை நகர்ந்துகொண்டிருந்தது. கதிரவனும் எம்மக்கள்மீது கருணைகாட்டவில்லை. தனது வெப்பக்கதிர்களை பாரெங்கும் அள்ளிவீசினான். அந்த முல்லைத்தீவுக்கரைச்சிவெட்டையில் எங்காவது ஒருசிறுநிழல்கூடக்கிடைக்காதா என்று எனது மனம் அங்கலாய்த்துக்கொண்டிருந்தது. சுற்றுமுற்றும் அவதானித்தேன். ஆனால் எனக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. வெப்பமிகுதியால் உடலெங்கும் வியர்த்தொழுகியதோடு நாவு தொண்டை வரண்டு தண்ணீர்த்தாகம் ...

Read More »