தமிழ்லீடர்

நாவற்குழி விஹாரை அமைக்கும் பணிக்கு தற்காலிக தடை!

naavarkuli

யாழ். நாவற்குழி பகுதியில் விஹாரை அமைக்கும் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் உத்தரவிட்டுள்ளார்.

Read More »

சம்பந்தன் இறங்கிவரவேண்டும் என்கிறது அரசாங்கம்!

dilan

சங்­க­பீ­டங்­க­ளுக்கு எதி­ராக தமிழ் கூட்­ட­மைப்பு செல்­வதில் அர்த்­த­மில்லை. மாறாக சங்க பீடங்­களின் கோரிக்­கையை ஏற்றுக் கொள்­வ­தாக கூட்­ட­மைப்பு அறி­விக்க வேண்டும். தேர்தல் முறை மாற்­றத்­தி­னூ­டாக அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தை முன்­னெ­டுக்­கலாம் என சங்­க­பீ­டங்கள் கூறி­யுள்­ளதால் அதனை பயன்­ப­டுத்தி அந்த திருத்­தத்­திற்குள் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வையும் உள்­ள­டக்கி விட வேண்டும். எனவே தற்­போது பந்து சம்­பந்தன் கையில் உள்­ளது. அவர் எப்­படி விளை­யாடப் போகின்றார் என்­பதே இங்கு முக்­கி­ய­மான விட­ய­மாகும் என்று சுதந்­திரக் கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார்.

Read More »

இறுதி வரைவு தயாரிப்புப் பணியில் புலம்பெயர் அமைப்புக்களாம்?!!

Dinesh-Gunawardena_5

எங்­க­ளு­டைய எதிர்ப்­புக்­க­ளுக்கு மத்­தி­யிலும் அர­சாங்­க­மா­னது கூட்­ட­மைப்­புடன் இணைந்து நாட்டின் ஒற்­றை­யாட்­சிக்கும் ஒரு­மைப்­பாட்­டுக்கும் பங்கம் ஏற்­படும் வகை யில் புதிய அர­சி­ய­ல­மைப்பை தயா­ரித்­து­ வ­ரு­கின்­ற­மையின் கார­ண­மாக மா­நா­யக்க தேரர்கள் எதிர்ப்பு வெளியிட்­டனர். அதனை நாங்கள் வர­வேற்­ப­து டன் தேரர்­க­ளுக்கு எமது ஆத­ர­வையும் தெரி­விக்­கின்றோம் என்று கூட்டு எதி­ர­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்தார். அந்­த­வ­கையில் அர­சி­ய­ல­மைப்பு வரைவை தயா­ரிக்கும் குழு­வி­லி­ருந்து வில­கு­வது குறித்து ஆராய்ந்­து­வ­ரு­கின்றோம். இது தொடர்­பான முடிவை கூட்டு எதிரணி விரைவில் எடுக்கும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

Read More »

ஒரேயொரு ஊழல் மாத்திரமே மேற்கொண்டோம் என்கிறார் கோத்தா!

gotabaya-rajapaksa

தம்மால் ஒரேயொரு ஊழல் மாத்திரமே மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை முறியடித்தமையே அந்த செயற்பாடு எனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

Read More »

சிறீதரனின் சின்னத்தனங்கள் (வாக்குமூலம்)

newq2

வடக்கு மாகாண முன்னாள் கல்விஅமைச்சர் த.குருகுலராஜா மீதான குற்றச்சாட்டு ஒன்றிற்கான காரணமாக தானே செயற்பட்டிருந்ததை தன்னுடைய ஊடகம் ஒன்றின் ஊடகவியலாளருக்கு வழங்கிய வாக்குமூலம் ஒன்றின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞான் சிறீதரன் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

Read More »

காசோலை விவகாரம்; அதிர்ச்சித் தகவல்கள் வெளியிடப்படும் என்கிறார் மைத்திரி!

maithripala and mahinda

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற ஜனவரி மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னதாக ஜனவரி 7 ஆம் திகதி அபிவிருத்தித் திட்டமொன்றிற்காக விநியோகிக்கப்பட்ட காசோலை தொடர்பில் முழுமையான தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Read More »

புதிய அரசியலமைப்பிற்கு சிங்களவர்கள் ஆதரவு வழங்க மனோ சொல்லும் காரணங்கள்?!

MK

புதிய அரசியலமைப்பில் வடக்கு – கிழக்கு இணைக்கப்படவில்லை எனவும், தற்போது பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் மாற்றப்படவில்லை எனவும், அது ஒருபோதும் சமஷ்டி யாப்பு இல்லை எனவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Read More »

‘மஹிந்தவுக்கான தமிழர் அமைப்பு’ ?!

Mahinda Rajapakse--621x414

முன்னாள் ஜனதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு ஆதரவாக ‘மஹிந்தவுக்கான தமிழர் அமைப்பு’ என்ற பெயரில் தமிழ் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அமைபின் பிரதிநிதிகள் நாமல் ராஜபக்க்ஷவை சந்தித்துக் கலந்துரையாடல் ஒன்றை மேற் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

மஹிந்த தரப்பை கூண்டில் ஏற்றுவேன் என்கிறார் மைத்திரி!

maithripala-sirisena

சட்டமா அதிபர் திணைக்களத்தினையும் பொலிஸ் திணைக்களத்தினையும் தன்னிடம் ஒப்படைத்தால் மஹிந்த தரப்பு உட்பட அனைத்து குற்றவாளிகளையும் கூண்டில் ஏற்றிக் காட்டுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Read More »

முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு! தீவிர முனைப்பில் தமிழரசுக்கட்சி!!

viky

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை ஊழல்குற்றச்சாட்டிற்கு உட்படுத்தி விசாரணைக்கு உட்படுத்தும் முயற்சியில் தமிழரசுக்கட்சி ஈடுபட்டிருப்பதாக தெரியவந்திருக்கிறது.

Read More »