தமிழ்லீடர்

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு இந்த அரசின் காலத்தில் சாத்தியமாகும்.

2B0C86EE-7591-4413-9C41-A28C3D8CB12B

கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்  கருத்து தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்பின் ஊடாகத் தமிழர்களின் அபிலாஷைகளுக்கான ஓர் அரசியல் தீர்வு இந்த நல்லாட்சி அரசின் காலத்தில் சாத்தியமாகும் என்ற நம்பிக்கை இன்னமும் இருப்பதாகவும் அந்த நம்பிக்கையின் காரணத்தாலேயே  வெளியில்    இருந்துகொண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குகிறது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து கூறுகையில் தமிழ்மக்களுக்கான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு ஒத்துழைத்தார்கள். அதுபோல், சில விடயங்களைத் ...

Read More »

தொடர்ந்து காட்டு யானைகளால் அச்சம்!

C93B136F-6932-4DC6-9219-F0A5219B739E

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல கிராமங்களில் யானைகளின் அட்டகாசம் தொடர்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர், கடந்த 13ம் திகதி நள்ளிரவு வேளையில் வீட்டு வளாகத்தினுள் உட்புகுந்த யானை அங்கு உறங்கிக்கொண்டிருந்த நடராஜா (58) மாரிமுத்து (72) ஆகிய இருவரையும் தாக்கிவிட்டு சென்றுள்ளது. அதேவேளை அருகிலுள்ள நாமகள் வித்தியாலய சுற்றுமதிலையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் மண்டூர் பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கல்முனை ஆதாரவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அவசரசிகிச்சைப்பிரிவில் சிகிச்சைபெற்று வருகின்றனர். கடந்த சிலதினங்களுக்கு முன்னரும் இப்பகுதியில் வீடுகளை யானை சேதப்படுத்தி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து காட்டு யானைகளின் ...

Read More »

அரசியல் கைதிகளின் விடயத்தில் சாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளது – சுமந்திரன்

A-M-Sumanthiran

அநுராதபுரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளில் முதலில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 8 பேரையும், வெவ்வேறு கட்டங்களில் புனர்வாழ்வுக்கு அனுப்பி, அவர்களை விடுதலை செய்வதற்கான சம்மதத்தை, சட்டமா அதிபர் நேற்று (02) வெளியிட்டாரென, அது தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.ஏ.சுமந்திரன்  தெரிவித்தார். இதன் மூலமாக, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, புதிய நம்பிக்கைக் கீற்றொன்று பிறந்துள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நீதியமைச்சர் தலதா அத்துகோரள, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், சுமந்திரன் எம்.பி, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய ஆகியோர், ஏற்கெனவே மேற்கொண்டிருந்த கலந்துரையாடலில் ...

Read More »

2018 இல் மட்டகளப்பில் நுண் கடனால் 37 பெண்கள் தற்கொலை

DSC08256

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு நுண்கடன் காரணமாக 37 பெண்கள் தற்கொலை செய்துள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவியுமான செல்வி மனோகர் தெரிவித்தார். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு நேற்று (01) மாலை முறக்கொட்டாஞ்சேனையில் நடைபெற்றது. சிறுவர்களின் உரிமையினையும் அவர்களின் பாதுகாப்பினையும் சிறுவர்களின் கல்வி உரிமை மற்றும் ஏனைய உரிமைகளை வலியுறுத்தி மாபெரும் ஊர்வலம் நடாத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறுவர் தின நிகழ்வுகளும் சிறுவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் சிறப்பாக ...

Read More »

தமிழ் எம்பிக்கள் முன்பு போல எங்களது விடுதலைக்காக குரல் கொடுப்பதில்லை.

201710080617229591_South-African-healer-gets-life-in-beheading-of-Indianorigin_SECVPF (1)

பொதுமன்னிப்பு அல்லது வேறு எந்தப் பொறிமுறையிலாவது, தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள அரசியல் கைதிகள், தங்களது விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்றைய பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்காவிட்டால், புதிய மகசின் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளும் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுப்படப்போவதாக எச்சரித்துள்ளனர். வெலிக்கடை புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் சிலர்,  கருத்துத் தெரிவிக்கும்போதே, மேற்கண்டவாறு தெரிவித்தனர். இதன்போது மேலும் தெரிவித்த அவர்கள், “அநுராதபுர சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் மேற்கொண்டு வரும் ...

Read More »

சரத்பொன்சேகாவுக்கு எதிராக மைதிரியும்,ரணிலும்

ranil6-1

சரத்பொன்சேகாவிற்கு எதிரான நடவடிக்கை  தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சிலர் அமைச்சர்கள் தமது கூட்டுப்பொறுப்பை புறக்கணித்துவிட்டு அரசாங்கத்தின் தீர்மானங்களை விமர்சனம் செய்வது குறித்து ஜனாதிபதி சீற்றத்துடன் உள்ளார் இது குறித்து அவர் பிரதமருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது ஜனாதிபதியை வெளிப்படையாக விமர்சித்து வரும் சரத்பொன்சேகாவிற்கு எதிராக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை யானைகளை தடுப்பதற்கான மின்சார வேலிகள் குறித்து ...

Read More »

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு அரசியல் கைதிகளை விடுதலை செய் – கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

IMG_4876

 பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு அரசியல் கைதிகளை விடுதலை செய் எனும் தொணிப்பொருளில் கிளிநொச்சியில் இன்று 01-10-2018 கண்டன கவனயீர்ப்பு போராட்டம்  ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் காலை பத்து மணிக்கு கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில்  குறித்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசியல் கைதிகளின் விடுதலை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட இக் கவனயீர்ப்பு போராட்டத்தில்  கலந்துகொண்டவர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்,   சட்டப் பூட்டினை உடை அரசியல் தீர்மானம் எடு  அரசியல் கைதிகளை விடுதலை செய்,   நல்லிணக்கத்துக்கான ...

Read More »

எதற்காக ஆயுதம் ஏந்தி போராடினோமோ அதற்காகவே இன்று அரசியல் ரீதியாக போராடுகிறோம்

cimg1256

இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யாது என்பதை பல விட்டுக் கொடுப்புகளை செய்து சர்வதேசத்திற்கு நிருபித்துள்ளோம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். சர்வதேசம் நாங்களே எங்களை ஆளக் கூடியதற்கான தீர்வினை தருவதற்கான முயற்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிச்சயமாக செய்யும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 10 வது தேசிய மாநாட்டின் நிறைவு நிகழ்வு நேற்று (30) மட்டக்களப்பில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் வடகிழக்கின் ...

Read More »

தமிழ் எம்.பி.க்கள் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக போராட்டத்திலீடுபட ஒன்று திரள வேண்டும் – ஜனநாயகப் போராளிகள் கட்சி

IMG-efc7417154c9c24247ef42b4a8e625a7-V

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அமர்வுகளைப் புறக்கணித்து, அனுராதபுரத்தில் ஒன்று கூடி, அரசுக்கும் சர்வதேசத்திற்கும் அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என ஜனநாயகப் போராளிகள் கட்சி கோரியுள்ளது. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் ஒரு நாள் சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதையொட்டி, அந்தக் கட்சி விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் ஊடகப் பிரிவின் சார்பில் துளசியினால் வெளியிடப்பட்டுள்ள  அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழர் தரப்பில்  பல தசாப்தகாலங்ளாக புரையோடிப்போய் இருக்கின்ற அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் மிகக்காத்திரமானதும் ...

Read More »

இலங்கை படையினர் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தினர்- யஸ்மின் சூக்கா மீண்டும் குற்றச்சாட்டு

YasminSooka-JUBA-SSUDAN-16SEPT16-625-415-720x450

இலங்கையில் முன்னர் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் கண்ணிவெடிகளைஅகற்றுபவர்கள் கொத்துக்குண்டுகளின் எச்சங்களை கண்டுபிடித்துள்ளமை குறித்து இலங்கை விளக்கமளிக்கவேண்டும் என சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மின் சூக்கா வேண்டுகோள் விடுத்துள்ளார். கொத்துக்குண்டுகள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் குறித்த அமைப்பின் தலைமைப்பொறுப்பை  இலங்கை பொறுப்பேற்றுள்ளதன்( Convention on Cluster Munitions0 காரணமாக இலங்கை தனது நாட்டில் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைப்பது குறித்து தெளிவுபடுத்தவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையின் உள்நாட்டு  யுத்தத்தின் இறுதி தருணத்தில் பொதுமக்களிற்கான பாதுகாப்பு வலயங்கள் என அறிவிக்கப்பட்ட பகுதியில் பெருமளவில் ...

Read More »