செய்திகள்

முன்னாள் போராளிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கவில்லை என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது – பகிரதன்

IMG_20180904_113724

முன்னாள் போராளிகளுக்கு எவரும் வேலைவாய்ப்பினை வழங்கவில்லை என்ற அதிகாரிகளின் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என  தொழிலதிபர் கு. பகிரதன் தெரிவித்துள்ளார். அண்மையில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற உயர் மட்ட கூட்டமொன்றில் அதிகாரிகள் சிலர் கலந்துகொண்டு கலுத்து தெரிவிக்கும் போது சமூகத்தில் முன்னாள் போராளிகளுக்கு எவரும் தொழில் வாய்ப்பினை வழங்குகிறார்கள் இல்லை என்ற கருத்தை பொதுப்படையாக தெரிவித்திருந்தார். இதனை ஊடகங்களில் செய்தியாக பார்க்கும் போது  தொழில் வாய்ப்பினை வழங்குகின்ற எங்களை போன்றோருக்கு கவலையினை ஏற்படுத்துகிறது. சுமார் 122 பேர் பணியாற்றுகின்ற எங்களுடைய ஓப்பந்த ...

Read More »

முப்படை பிரதானி குறித்த விசாரணையில் சிறிசேன தலையிடுகின்றார்- சுமந்திரன்

Sumanthiran

இலங்கையின் முப்படைகளின் பிரதானி விவகாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிடுகின்றார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிஐடியினரின் விசாரணைகளில்  நேரடியாக தலையிடுவதன் காரணமாக வேறு வழியில்லாமல் இந்த விவகாரம் குறித்து சர்வதேச விசாரணையை கோரவேண்டியுள்ளது என சுமந்திரன் ஐலண்ட் நாளிதழிற்கு தெரிவித்துள்ளார். இலங்கையின் ஜனாதிபதியொருவரே இந்த விவகாரத்தில் தலையிடுவதன் காரணமாக  உள்ளுர் நீதிப்பொறிமுறை மூலம் பாதிக்கப்பட்டவர்கள் நீதியை எதிர்பார்க்க முடியாத நிலை காணப்படுவதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். ரவிராஜ் கொலை மற்றும் கொழும்பில் ...

Read More »

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புச் சார்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம்  முதலமைச்சருக்கு ஆனந்தசங்கரி கடிதம்

sangary-2

தமிழரக் கட்சி உள்ளடக்கிய தமிழத் தேசியக் கூட்டமைப்பில் சார்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் எனவும்      உட்கட்சி உரசலால்; நீங்கள் மனதில் நினைத்திருந்த பல நல்ல திட்டங்களை செயற்படுத்த முடியாமல் போய் விட்டது. அந்த இடைப்பட்ட காலத்தில் தங்களின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை நான் நன்கு அறிவேன். எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின்  செயலாளர் நாயகம், வீ. ஆனந்தசங்கரி வடக்கு முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார் அவரின் கடிதத்தின் முழு விபரம் வருமாறு மேதகு முதலமைச்சர் சீ. வி. விக்ணேஸ்வரன் அவர்களுக்கு, அன்புடையீர், ...

Read More »

தந்தை உட்பட இரு பிள்ளைகளை தாக்கியமை ; பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் இரண்டரை மணிநேர வாக்குமூலம்

rohitha_priyadarsana

கனகராயன்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் இன்று காலை மனித உரிமைகள் ஆணைக்குழு சுமார் இரண்டரை மணி நேரம் வாக்குமூலத்தை பெற்றுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய இணைப்பாளர் ரோஹித பிரியதர்ஷன தெரிவித்துள்ளார். கனகராயன்குளம் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் கடந்த 10 ஆம் திகதி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியொருவர் சிவில் உடையில் சென்று தாக்குதல் நடத்தியுள்ளர். இதனால் தாக்குதலுக்குள்ளாகிய தந்தை மற்றும் இரு பிள்ளைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதனையடுத்து தாக்குதலுக்குள்ளானவரின் மனைவி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மேற்கொண்ட ...

Read More »

கோத்தா, மைத்திரியை கொலை செய்ய சதி’ : உடனடி விசாரணை வேண்டும் என்கிறது பொது எதிரணி

images-5-3

முன்னாள் பாதுகாப்புச் செயளார் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கிழக்கு மாகாணத்தில் வைத்து கொலை செய்வதற்கு சதி மேற்கொள்ளப்பட்டதாக ஊழல் மோசடி எதிர்ப்பு செயலணியின் வழிநடத்தல் பணிப்பாளர் நாமல் குமார தெரிவித்துள்ளாரென பாரராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளை என். எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், எனவே அது தொடர்பில் ஜனாதிபதி உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து உரிய ...

Read More »

நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் – சம்மந்தன்

sampath

மகாவலி திட்டத்தின் பேரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் இருந்து வேறு மக்களை கொண்டு வருவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார் அதற்கு எங்களுடைய எதிர்ப்பு தொடர்ச்சியாக இருக்கும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். திருகோணமலை – திரியாய் அருள்மிகு வரத விக்னேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த பெருவிழாவில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் கலந்து கொண்டிருந்தார். இதன்போது மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் பேரில் சிங்கள குடியேற்றம் இடம்பெறுவதை தடுத்து நிறுத்த கோரி ...

Read More »

போலி முகவர் நிலையங்களை கண்டுபிடிக்க நாடு முழுவதும் சுற்றிவளைப்பு

download

நாடு முழுவதும் இயங்கும் வெளிநாட்டு முகவர் நிலையங்கள் தொடர்பில் 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எவ்வித சுற்றிவளைப்பும் முன்னெடுக்கப்படவில்லை. வெகுவிரைவில் போலி முகவர் நிலையங்களுக்கு எதிராக கடும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார். அத்துடன் 16 வயதுக்கும் குறைந்த கிண்ணியாவைச் சேர்ந்த சிறுமியை பணிப்பெண்ணாக அனுப்பிய இரண்டு இலங்கைப் பெண்களையும் கைது செய்வதற்கு துபாய் மற்றும் ஓமானிலுள்ள இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ நேற்று தெரிவித்தார். இதேவேளை பாதிக்கப்பட்டுள்ள சிறுமி அடுத்த ...

Read More »

10 வயது சிறுமியை 21 வயது யுவதி என போலி கடவுச்சீட்டில் பணிப்பெண்ணாக அனுப்பிய முகவர் கைது

Tamil_News_large_1984865

கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவரை 21 வயது யுவதி என போலி கடவுச்சீட்டில் வெளிநாட்டுக்கு அனுப்பிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2013 ஜனவரி 09 ஆம் திகதி, சவூதி அரேபியாவில் மரண தண்டனைக்குள்ளான சிறுமி ரிசானா நபீக்கை போலி ஆவணங்கள் ஊடாக வெளிநாட்டுக்கு அனுப்பிய அதே முகவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பேருவளையைச் சேர்ந்த தம்பி லெப்பை அப்துல் சலாம் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணங்களை தயாரித்து, ...

Read More »

உரிய நேரத்தில் கடிதத்தைக் கையளிக்காத தபால் ஊழியருக்கு விளக்கமறியல்

courts.

நுவரெலியா – வலப்பனை மகாஊவ கிராமத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவியிடம் உரிய நேரத்தில் கடிதத்தைக் கையளிக்கத் தவறிய தபால் ஊழியர் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வலப்பனை – மகாஊவ எனும் கிராமத்தில் தோட்டத்தொழிலாளர் குடும்பத்தில் பிறந்த மைக்கல் நிலுக்ஷியா மேரி, கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வணிகத்துறையில் தோற்றி, 2A, 1B பெறுபேற்றைப் பெற்று, மாவட்டத்தில் 34 ஆவது இடத்தைப்பிடித்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானார். களனி பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளமை தொடர்பில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் உரிய நேரத்தில் ...

Read More »

இறுதி யுத்தத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானவை – மகிந்த

28-1435483405-rajapaksa9-600

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது, மனித உரிமை மீறப்பட்டதாக சர்வதேச ரீதியில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தமது அரசாங்கம் LTTE அமைப்புக்கு எதிராக யுத்தம் மேற்கொண்டதே தவிர தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் மேற்கொள்ளவில்லை என மஹிந்த ராஜபக்ஸ டில்லியில் நேற்று (12) தெரிவித்துள்ளதாக ‘த ஹிந்து’ செய்தி வௌியிட்டுள்ளது. பா.ஜ.க வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பை ஏற்று இந்தியாவுக்கு சென்றுள்ள மஹிந்த ராஜபக்ஸ, ‘இந்திய – இலங்கை சகோதரத்துவத்தின் எதிர்காலம்’ ...

Read More »