செய்திகள்

சூட்சுமமாக பொலனறுவைக்கு எடுத்து செல்லப்படவிருந்த 4 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

IMG_7075

சூட்சுமமாக பொலனறுவைக்கு எடுத்து செல்லப்படவிருந்த 4 கிலோ கேரள கஞ்சா கிளிநொச்சி பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது இன்று(17) கிளிநொச்சி அரச புலனாய்வுபிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சோதனையிட்ட கிளிநொச்சி பொலிசார் குறித்த கஞ்சா பொதியை மீட்டுள்ளனர். பகல் 12 மணியளவில் கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில்  சோதனை மேற்கொண்டபோது மெத்தை ஏற்றிய வாகனமொன்றில் மெத்தைக்குள் சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்ல தயாராக இருந்தபோதே பொலிசார் அதனை மீட்டுள்ளனர். இதன் பின்னர் அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக தரித்து நின்ற முச்சக்கரவண்டியை சோதனை செய்த பொலிசார் அதிலிருந்தும் கஞ்சா பொதி ...

Read More »

எதிர்க்கட்சி அரசியல் செய்வதற்கு தயாராக இருக்கிறேன்

rauff-hakeem1-720x450

எதிர்க்கட்சி அரசியலுக்கு அஞ்சாத கட்சி என்றால் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் வளர்த்த இந்த கட்சியை தவிர வேறெதுவும் இருக்கமுடியாது. எதிர்க்கட்சி அரசியல் செய்வதற்கு நானும் தயாராக இருக்கிறேன். ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் முஸ்லிம்களை ஆளும் கட்சி இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகர் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃபின் 18 ஆவது நினைவேந்தல் நிகழ்வு நேற்று (16) மாலை சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரி ...

Read More »

TID பிரிவின் பணிப்பாளர் நாலக சில்வா IT பிரிவிற்கு இடமாற்றம்

----------------------------------------9

பொலிஸ் மா அதிபரின் உத்தரவிற்கு அமைய பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் நாலக சில்வாவை தற்காலிகமாக தகவல் தொழிநுட்ப பிரிவிற்கு இடமாற்றம் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் மீது கிழக்கு மாகாணத்தில் வைத்து தாக்குதல் செய்யும் திட்டத்தில் இருந்ததாக, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நாலக சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார கடந்த 12 ஆம் ...

Read More »

மஹிந்தவை பிரதமராக நியமிக்க வேண்டும் – வாசுதேவ நாணயக்கார

hhh-689x405

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் செய்துகொண்டுள்ள தேசிய அரசாங்கத்துக்கான ஒப்பந்தத்தை இரத்து செய்துவிட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்க வேண்டும்  என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையிலான கருத்து மோதல்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், நல்லாட்சி அரசாங்கம் விரைவிலேயே கவிழும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More »

சிவனொளிபாத மலை பெயர் மாற்றம்; அறிக்கை கோரும் மனோ

image_1517506661-76d7695256-620x330

சிவனொளிபாதமலையின் பெயர் மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் அறிக்கையொன்றை  கோரியுள்ளதாக தெரிவிக்கும், நுவரெலியா மாவட்டச் செயலாளர் எம்.பி.ஆர். புஸ்பகுமார, இது குறித்து ஆராயுமாறு பிரதேச செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதென்றும் குறிப்பிட்டார். அண்மையில் “சிவனொளிபாத மலை“ என்று பெயர் பொறிக்கப்ட்டிருந்த தூண் அகற்றப்பட்டு “ஸ்ரீ கௌதம புத்தரின் பாதஸ்தானம்“ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட தூண் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. எனவே, மேற்படி சம்பவம் குறித்து அமைச்சர் ம​னோ கணேசன் தன்னிடத்தில் அறிக்கை கோரியுள்ளதாகவும், அது குறித்த அறிக்கையொன்றினை தமக்கு சமர்பிக்குமாறு பிரதேச செயலாளருக்கு ...

Read More »

2025ஆம் ஆண்டு வரையில் மைத்திரியே ஜனாதிபதி -துமிந்த திசாநாயக்க

duminda-dissanayaka--720x450

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே, 2025 ஆம் ஆண்டுவரையில் ஜனாதிபதியாக நீடிப்பார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர், துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 2020க்கு பின்னரும் ஜனாதிபதி பதவியில் மைத்திரிபால சிறிசேன நீடிப்பார் என உறுதியாக கூற முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசே​னவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதற்கான பொறிமுறை ஒன்றும் தங்களிடமிருப்பதாக கூறியுள்ள அவர், ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் அதனை கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Read More »

ஹிஸ்புல்லாவை கைதுசெய்ய வாழைச்சேனைநீதிமன்றம் உத்தரவு

Hisbullah-098

இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லாவையும் அவரது மகன் உள்ளிட்ட சந்தேகநபர்களை உடனடியாகக் கைதுசெய்து, நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு, வாழைச்சேனை நீதவான் எம். ரிஸ்வான் உத்தரவிட்டுள்ளார். சவூதி அரேபிய அரசின் நிதியுதவியின் கீழ், மட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்மாணப் பணிகளுக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட நிறுவனத்திடம் காணப்பட்ட 94 மில்லியன் ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள் மற்றும் ஏனையப் பொருட்களைக் கடத்தியதுடன், அந்தப் பொருட்கள் குறித்து நம்பிக்கையற்ற விதத்தில் தகவல்களை வெளிப்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே, இராஜாங்க அமைச்சரையும் அவரது மகனையும் கைதுசெய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. “லங்கா பில்டர்ஸ் கோப்பரேடிவ் சொஸையிட்டி” நிறுவனத்தின் தலைவர் பிரபாத் ...

Read More »

மட்டக்களப்பில் இலவச மருத்துவ முகாம்.

10CDC8F1-8D6C-4D86-A37B-AF04A58BF990

மட்டக்களப்பு மாவட்ட வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவிற்குப்பட்ட  திக்கோடைக் கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு  வைத்தியர் சக்திவேல் தர்சனன் அவர்களின் ஏற்பாட்டில்  இலவச மருத்துவ முகாம்  16 ஆம்திகதி  ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. இது திக்கோடை பல்தேவைக் கட்டிட மண்டபத்தில் காலை 9 மணி முதல் 4 மணி வரை இந்த இலவச மருத்துவமுகாம் நடைபெற்றது இதில் 300 இற்கு மேற்பட்ட நோயாளிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இந்த மருத்துவமுகாம் மருத்துவப்பிரதிநிதி நண்பர்களின் பங்களிப்புடனும் களுவாஞ்சிக்குடி செல்வா பாமசியின் அனுசரணையுடனும் நடாத்தப்பட்டதுடன் இதற்கு பல வழிகளிலும் உதவிய ...

Read More »

தமிழ் பேசும் மக்கள் – புலம்பெயர் தமிழர்கள் இடையே நல்லுறவு உருவாக்கம் – வட மாகாண முதலமைச்சர்

49D96564-4089-4CA4-844A-03AD0AC6DE43

தமிழர்களின் நீண்டகாலப் போராட்டத்திற்கு உங்களின் பங்களிப்பு என்னவென வட மாகாண முதலச்சர் சி.வி. விக்னேஸ்வரனிடம் ஊடவியலாளர்கள் கேள்வி எழுப்பியமைக்கு, தமிழ் பேசும் மக்களுக்கும் பாரளாவிய புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையே நல்லுறவை உருவாக்கியுள்ளதாகக் கூறியுள்ளார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம், புலம்பெயர் தமிழர்களுடன் தம்மை அடையாளப்படுத்துவதற்கு அச்சத்துடன் உள்ளதாகவும் தமக்கும் பயங்கரவாதிகள் என்ற நாமம் சூட்டப்படலாம் என்ற பயமே அதற்குக் காரணம் எனவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். தம்மைப் பொறுத்தவரையில் புலம்பெயர் மக்களின் அனுசரணையுடன் தான் எமது இனப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள வட ...

Read More »

இந்தியா செல்ல சிவாஜிலிங்கத்துக்கு வீசா மறுப்பு

sivajilingam

இந்தியாவில் நடைபெறவுள்ள பயிற்சி நெறிக்குச் செல்லும் குழுவில் உள்ளடக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு வீசா வழங்க இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ் மாகாண சபை உறுப்பினர்களுக்கான பயிற்சி நெறி ஒன்றை இந்தியாவின் மும்பையில் ஏற்பாடு செய்துள்ளதுடன் அதற்காக இலங்கையில் இருந்து 18 மாகாண சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். அதனடிப்படையில் குறித்த குழுவினர் இந்தியா நோக்கி பயணித்துள்ளதுடன் தனக்கு வீசா மறுக்கப்பட்டதன் காரணமாக அந்த சந்தர்ப்பத்தை இழந்ததாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு ...

Read More »