செய்திகள்

புகையிரதத்துடன் கார் மோதியதில் நால்வர் பலி – இருவர் காயம்

unnamed-26-780x405

ஓமந்தை பன்றிக்கெய்த குளம்  பகுதியில் கார் ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஞாயிற்றுக் கிழமை புகையிரதம் பயணிக்கும் போது பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஒன்றில்  கடக்க முற்பட்ட போதே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றார்.

Read More »

கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும்

download

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நாலக டி சில்வா தெரிவித்திருப்பதாக கூறப்படும் கருத்து தொடர்பில் விசாரணை ஆரம்பித்திருப்பதை காண முடியவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். பாதுகாப்பு தரப்பினர் உடனடியாக இது தொடர்பில் விசாரணையை ஆரம்பித்து உண்மைய நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அநுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில் கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் ...

Read More »

தனி ஈழம் பெறலாம் என்ற ஒரு மாயையை ஒரு பகுதியினர் ஏற்படுத்துகிறார்கள்.;இமானுவேல் ஆனோல்ட்

1-197

போருக்கான சூழ்நிலையை உருவாக்கி மீண்டும் தனி ஈழம் பெறலாம் என்ற ஒரு மாயையை ஒரு பகுதியினர் ஏற்படுத்துகிறார்கள். அது மக்களை மீண்டும் நிரந்தர அழிவிற்குள் தள்ளிவிடும். என  யாழ்.நகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தெரிவித்துள்ளார். யுத்தத்தினால் அழிவுற்ற யாழ்ப்பாண நகரை மீண்டும் தூய்மையான, நகராக உருவாக்க உறுதி பூண்டுள்ளேன் என  அவர் மேலும் தெரிவித்துள்ளார். கனடாவிற்கு விஜயம் செய்துள்ள அவர், அங்கு இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ...

Read More »

மத்திய அரசு மனம் வைத்தால் மட்டுமே ஏழுபேருக்கும் விடுதலை

raa_13092018_SPP_GRY

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் 27 ஆண்டுகளாக இருக்கும் 7 பேரையும் விடுவிக்கும் நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் கூறி இருந்தது. அதன்படி, தமிழக அமைச்சரவை கூடி, ‘பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்’ என்று தீர்மானம் எடுத்தது. இதுகுறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும். இந்நிலையில், அந்த 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்றால் மத்திய அரசின் அனுமதி வேண்டும் என்று சில அதிகாரிகள் ...

Read More »

டெனிஸ்வரனுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்க வடக்கு முதல்வர் இணக்கம்

1536974588

வடமாகாண முன்னாள் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனை அமைச்சுப் பதவியில் மீண்டும் உள்வாங்குவதற்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இணக்கம் தெரிவித்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வடக்கு மாகாண சபையின் 131 ஆவது அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை(11) நடைபெற்றிருந்த நிலையில் அன்றிலிருந்து வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கு வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்றும் நேற்று முன்தினமும் இந்த விவகாரம் தொடர்பில் வடக்கு மாகாண அவைத்தலைவர் வடக்கு மாகாண முதலமைச்சருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். ...

Read More »

திருகோணமலையில் நிலநடுக்கம்; கிண்ணியா, மூதூரில் உணர்வு

Earthquake-Trincomalee

திருகோணமலை, களப்பை அண்டிய பகுதியில் இன்று (15) நள்ளிரவு சிறியளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இன்று (15) நள்ளிரவு 12.40 மணியளவில் ஏற்பட்டதாகவும் சிறியளவான ஒரு அதிர்வு எனவும் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் கே. சுகுனதாஸ் தெரிவித்தார். இது விடயமாக தொடர்பு கொண்டு கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவித்த அவர். இவ் அதிர்வானது கிண்ணியா, மூதூர், திருகோணமலை ,லங்கா பட்டிணம், வெருகல் பகுதிகளிலேயே இடம் பெற்றுள்ளது.  3.58 ரிச்டர் அளவில் இந்நிலஅதிர்வு பதிவாகியதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து, திருகோணமலை ...

Read More »

பாதுகாப்பு படைகளின் பிரதானியை கைது செய்யும் தேவை இல்லை

Cabinet_decisions-300x162

பாதுகாப்பு படைகளின் பிரதானியை கைது செய்யும் தேவை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு இல்லை என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரி ஒருவரை கைது செய்வதற்கு தயாராக இருப்பதாக கூறப்படும் செய்தி உண்மையற்றது என்று அரச தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கப்பம் பெறுவதற்காக 11 நபர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் ஆரம்பபிக்கப்பட்டு என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பிரதான சந்தேகநபராக லெப்டினென்ட் கமாண்டர் சம்பத் முனசிங்க ...

Read More »

2020 இல் பொதுஜன பெரமுன வெற்றி பெறும்

625.500.560.350.160.300.053.800.900.160.90

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2020ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் என்று இகொனமிஸ்ட் இன்டர்லிஜன்ட்ஸ் யுனிட் நிறுவனம் (Economist Intelligence Unit (EIU)) வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நாட்டின் அரசியலில் ஓரளவு செல்வாக்கு இருந்த போதிலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிளவு காரணமாக அந்த செல்வாக்கு படிப்படியாக குறைந்து கொண்டிருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிளவு காரணமாக அந்த கட்சியில் இருந்து விலகும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன ...

Read More »

தி.மு.க. ஒரு வார்த்தை மத்திய அரசிடம் கூறியிருந்தால் தமிழர்களை காப்பாற்றியிருக்கலாம்

Jayakumar-720x450

தி.மு.க. ஒரு வார்த்தை மத்திய அரசிடம் கூறியிருந்தால் தமிழர்களை காப்பாற்றியிருக்கலாம் என அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் விஷயத்தில் தமிழக அரசுக்கு  அதிகாரம் இருப்பதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அந்த பரிந்துரை மீது  ஆளுநர் காலம் தாழ்த்தாமல் முடிவெடுக்க வேண்டும் என பல்வேறு கட்சியினரும் தெரிவித்துள்ளது. இந்நிலையில்  ஆளுநர் முடிவு ...

Read More »

தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது – அரசாங்கத்தின் மீது கூட்டமைப்பு அதிருப்தி

Sumanthiran

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை காப்பாற்றாது தப்பிப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது. காரணம் இரண்டு தடவைகள் இலங்கை அரசாங்கம் தானாக இணை அனுசரணை வழங்கியுள்ளது. எனவே தொடர்ந்தும் தமிழ் மக்களை அரசாங்கம் ஏமாற்ற முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தற்போது அரசாங்கம் தேர்தல்களிலேயே தனது முழுக்கவனத்தையும் செலுத்தியுள்ளது. இதன் காரணமாக அரசியல் தீர்வு கேள்விக்குறியாக்கப்படுமா? ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவத்தினரை பாதுகாக்கும் நோக்கிலேயே செயற்படவுள்ளதாக ...

Read More »