செய்திகள்

விளக்கேற்றி அஞ்சலி செலுத்த மட்டுமே பயன்படுத்தப்படும் முல்லைத்தீவு?!

mul

முல்லைத்தீவு மாவட்டத்தை விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மாத்திரமே பலர் பயன்படுத்துவதாகவும், எமது மாவட்டம் அபிவிருத்தி அடைவதை அவர்கள் விரும்பாது இருப்பதாகவும் முல்லைத்தீவு அபிவிருத்தி ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. வடமாகாண ஆளுநருக்கும், முல்லைத்தீவு அபிவிருத்தி ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று(வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

Read More »

ராஜீவ் கொலை குற்றம்சாட்டப்பட்டோர் விவகாரம் – மத்திய அரசு விடாப்பிடி!

rajeev

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய முடியாது என்று மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Read More »

பழைய முறையிலேயே தேர்தல் – இணங்கினராம் மஹிந்த!

mahinda

மாகாணசபை தேர்தலை பழைய தேர்தல் முறைபடி நடத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.

Read More »

சம்பந்தனே தான் எதிர்க்கட்சித் தலைவர் – சபாநாயகர் அறிவிப்பு!

sampanthan

எதிர்க்கட்சி தலைவராக இரா.சம்பந்தனே தொடர்ந்தும் செயற்படுவார் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். சபாநாயகர் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வுகளின்போதான சபாநாயகர் அறிவிப்பு நேரத்திலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

Read More »

முல்லைத்தீவு மீனவர்கள் போராட்டம்!

mullitivu 2

தடை செய்யப்பட்ட வலைகளின் பயன்பாட்டை நிறுத்த கோரி முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2 ஆம் திகதி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Read More »

இசையமைப்பாளர் யாழ்.ரமணன் காலமானார்!

ramanan

யாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளர் யாழ்.ரமணன் அவர்கள் இன்று காலமாகியுள்ளார். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இசைத்துறையில் பிரபல்யம் பெற்றுவிளங்கிய அவர் பல்லாயிரக்கணக்கான இசை அரங்குகள் ஊடாக இரசிகர்களுக்கு இசை விருந்து படைத்துள்ளார்.

Read More »

மீண்டும் அதிகரிக்குமாம் எரிபொருள் விலை!

ranil

எதிர்வரும் காலங்களில் எரிபொருள் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) பிரதமர் மீதான கேள்வி நேரத்தின் போது கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Read More »

குழப்பம் விளைவிப்பவர்கள் எதிர்க்கட்சியினராக செயற்பட முடியாது என்கிறார் ராஜித!

rajitha

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு அதிகபடியான ஆசனங்கள் கிடைத்தமையே அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் பதவி கிடைக்க காரணமாக அமைந்தது. மாறாக நாடாளுமன்றில் நெருக்கடிகளும், குழப்பங்களும் விளைவித்து, மக்களுக்கு செல்லவேண்டிய நன்மையை சென்றடையாதவாறு தடுத்துக் கொண்டிருப்பவர்கள் எதிர்க்கட்சியினராக செயற்பட முடியாது என அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

Read More »

யாழ்ப்பாணத்தில் குள்ள மனிதர்களாம்! கட்டுப்படுத்த நடவடிக்கை என்கிறது பொலிஸ்!

SL-POLICE-720x450

யாழ்ப்பாணத்தில் அண்மைய காலமாக அதிகரித்து வரும் குள்ள மனிதர்களின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்தும் வகையில், இளைஞர்கள் பத்து பேர் வீதம் உள்ளடக்கி அவர்களோடு மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களையும் இணைத்து குழுக்களை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுக்கள் இரவு நேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக யாழ்.பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

சரவணபவனை மிரட்டிய சயந்தன்!

saravanabavan-and-sayanthan

வட்டுக்கோட்டை -அராலியில் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனுக்கும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தனுக்கும் இடையே இன்று பெரும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

Read More »