செய்திகள்

சிவனொளிபாத மலை பெயர் மாற்றம்; அறிக்கை கோரும் மனோ

image_1517506661-76d7695256-620x330

சிவனொளிபாதமலையின் பெயர் மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் அறிக்கையொன்றை  கோரியுள்ளதாக தெரிவிக்கும், நுவரெலியா மாவட்டச் செயலாளர் எம்.பி.ஆர். புஸ்பகுமார, இது குறித்து ஆராயுமாறு பிரதேச செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதென்றும் குறிப்பிட்டார். அண்மையில் “சிவனொளிபாத மலை“ என்று பெயர் பொறிக்கப்ட்டிருந்த தூண் அகற்றப்பட்டு “ஸ்ரீ கௌதம புத்தரின் பாதஸ்தானம்“ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட தூண் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. எனவே, மேற்படி சம்பவம் குறித்து அமைச்சர் ம​னோ கணேசன் தன்னிடத்தில் அறிக்கை கோரியுள்ளதாகவும், அது குறித்த அறிக்கையொன்றினை தமக்கு சமர்பிக்குமாறு பிரதேச செயலாளருக்கு ...

Read More »

2025ஆம் ஆண்டு வரையில் மைத்திரியே ஜனாதிபதி -துமிந்த திசாநாயக்க

duminda-dissanayaka--720x450

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே, 2025 ஆம் ஆண்டுவரையில் ஜனாதிபதியாக நீடிப்பார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர், துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 2020க்கு பின்னரும் ஜனாதிபதி பதவியில் மைத்திரிபால சிறிசேன நீடிப்பார் என உறுதியாக கூற முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசே​னவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதற்கான பொறிமுறை ஒன்றும் தங்களிடமிருப்பதாக கூறியுள்ள அவர், ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் அதனை கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Read More »

ஹிஸ்புல்லாவை கைதுசெய்ய வாழைச்சேனைநீதிமன்றம் உத்தரவு

Hisbullah-098

இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லாவையும் அவரது மகன் உள்ளிட்ட சந்தேகநபர்களை உடனடியாகக் கைதுசெய்து, நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு, வாழைச்சேனை நீதவான் எம். ரிஸ்வான் உத்தரவிட்டுள்ளார். சவூதி அரேபிய அரசின் நிதியுதவியின் கீழ், மட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்மாணப் பணிகளுக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட நிறுவனத்திடம் காணப்பட்ட 94 மில்லியன் ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள் மற்றும் ஏனையப் பொருட்களைக் கடத்தியதுடன், அந்தப் பொருட்கள் குறித்து நம்பிக்கையற்ற விதத்தில் தகவல்களை வெளிப்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே, இராஜாங்க அமைச்சரையும் அவரது மகனையும் கைதுசெய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. “லங்கா பில்டர்ஸ் கோப்பரேடிவ் சொஸையிட்டி” நிறுவனத்தின் தலைவர் பிரபாத் ...

Read More »

மட்டக்களப்பில் இலவச மருத்துவ முகாம்.

10CDC8F1-8D6C-4D86-A37B-AF04A58BF990

மட்டக்களப்பு மாவட்ட வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவிற்குப்பட்ட  திக்கோடைக் கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு  வைத்தியர் சக்திவேல் தர்சனன் அவர்களின் ஏற்பாட்டில்  இலவச மருத்துவ முகாம்  16 ஆம்திகதி  ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. இது திக்கோடை பல்தேவைக் கட்டிட மண்டபத்தில் காலை 9 மணி முதல் 4 மணி வரை இந்த இலவச மருத்துவமுகாம் நடைபெற்றது இதில் 300 இற்கு மேற்பட்ட நோயாளிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இந்த மருத்துவமுகாம் மருத்துவப்பிரதிநிதி நண்பர்களின் பங்களிப்புடனும் களுவாஞ்சிக்குடி செல்வா பாமசியின் அனுசரணையுடனும் நடாத்தப்பட்டதுடன் இதற்கு பல வழிகளிலும் உதவிய ...

Read More »

தமிழ் பேசும் மக்கள் – புலம்பெயர் தமிழர்கள் இடையே நல்லுறவு உருவாக்கம் – வட மாகாண முதலமைச்சர்

49D96564-4089-4CA4-844A-03AD0AC6DE43

தமிழர்களின் நீண்டகாலப் போராட்டத்திற்கு உங்களின் பங்களிப்பு என்னவென வட மாகாண முதலச்சர் சி.வி. விக்னேஸ்வரனிடம் ஊடவியலாளர்கள் கேள்வி எழுப்பியமைக்கு, தமிழ் பேசும் மக்களுக்கும் பாரளாவிய புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையே நல்லுறவை உருவாக்கியுள்ளதாகக் கூறியுள்ளார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம், புலம்பெயர் தமிழர்களுடன் தம்மை அடையாளப்படுத்துவதற்கு அச்சத்துடன் உள்ளதாகவும் தமக்கும் பயங்கரவாதிகள் என்ற நாமம் சூட்டப்படலாம் என்ற பயமே அதற்குக் காரணம் எனவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். தம்மைப் பொறுத்தவரையில் புலம்பெயர் மக்களின் அனுசரணையுடன் தான் எமது இனப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள வட ...

Read More »

இந்தியா செல்ல சிவாஜிலிங்கத்துக்கு வீசா மறுப்பு

sivajilingam

இந்தியாவில் நடைபெறவுள்ள பயிற்சி நெறிக்குச் செல்லும் குழுவில் உள்ளடக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு வீசா வழங்க இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ் மாகாண சபை உறுப்பினர்களுக்கான பயிற்சி நெறி ஒன்றை இந்தியாவின் மும்பையில் ஏற்பாடு செய்துள்ளதுடன் அதற்காக இலங்கையில் இருந்து 18 மாகாண சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். அதனடிப்படையில் குறித்த குழுவினர் இந்தியா நோக்கி பயணித்துள்ளதுடன் தனக்கு வீசா மறுக்கப்பட்டதன் காரணமாக அந்த சந்தர்ப்பத்தை இழந்ததாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு ...

Read More »

அனைத்து பிரச்சினைக்கும் ஆட்சி மாற்றத்தின் பின் தீர்வு என்கிறார் பந்துல

625.320.560.350.160.300.053.800.868.160.90

கடந்த 2017 ஆம் ஆண்டு ரவி கருணாநாயக்க ஐ.ஓ.சி. நிறுவனத்துடன் செய்துகொண்ட முறையற்ற உடன்படிக்கையே எரிபொருள் கட்டண மாற்றம் தொடர்பில் நீடித்து வரும் பிரச்சினைக்கு காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் 2020 ஆம் ஆண்டு  மஹிந்தவின் தலைமைத்துவத்திலான ஆட்சியே தோற்றம் பெறும் என்று சர்வதேச நிறுவனங்கள் கருத்துக்கணிப்புக்களின் ஊடாக  அறிக்கை வெளியிட்டுள்ளது. இக்கணிப்புக்கள் நிச்சயம் வெற்றிப் பெறும் என்றார். அத்துடன் அரசாங்கத்தின் முறையற்ற மூன்று வருடகால பொருளாதார  முகாமைத்துவத்தினால் பொருளாதாரம் பல துறைகளை பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றது. ஆகவே ...

Read More »

வட மகாண அரசியல் தலைவர்களை பற்றிப் பேச ஆளுநருக்கு அருகதையில்ல‍ை – சிறிதரன்

Sritharan-MP-099

இலங்கையின் மத்தியமாகாணத்திற்கு செல்ல முடியாதவாறு சமூக அடிப்படையில் விரட்டியடிக்கப்பட்ட வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேக்கு வடக்கு மாகாண அரசியல் தலைவர்கள் பற்றிக் கதைப்பதற்கு அருகதை இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன்  தெரிவித்தார். கரைச்சி பிரதேசசபையின் கந்தபுரம் இலத்திரனியல் நூலகத் திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்த அவர், வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் தெற்கில் வாழும் சிங்களவர்களை திருமணம் செய்தமை, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி போன்ற இடங்களில் இந்துக் கோவில்கள் அமைத்து ...

Read More »

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பொது பட்டமளிப்பு

image_d1734635fe

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பொது பட்டமளிப்பு வந்தாறுமூலையிலுள்ள நல்லையா மண்டபத்தில் நேற்று நான்கு அமர்வுகளாக சிறப்பாக நடைபெற்றது கிழக்குப் பல்கலைக் கழக வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா தலைமையில் நடைபெற்ற விழாவில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து உப உவேந்தர் கலாநிதி த.ஜெயசிங்கம், வளாகங்களின் முதல்வர்கள், பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். மெய்யியல் விஞ்ஞானம், மெய்யியல் கலை, கல்வி, வணிக முகாமைத்துவம், பொருளாதார அபிவிருத்தி, ஆகிய துறைகளில் முதுமானி, பட்ட மேற்படிப்பு டிப்ளோமா, சௌக்கிய பராமரிப்பு ...

Read More »

ஜனாதிபதியின் தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்காத அதிகாரிகள் நாட்டுக்கு திருப்பி அழைப்பு

11e3503953b20ae128c8d4156f5a0884_L

தன்னுடைய தொலைபேசி அழைப்புக்கு பல சந்தர்ப்பங்களில் பதிலளிக்க தவறிய ஒஸ்ட்ரியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரியானி விஜேசேகர உள்ளிட்ட ஐவரை மீண்டும் இலங்கைக்கு அழைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒஸ்ட்ரியாவுக்கான இலங்கைத் தூதுவர் அலுவலகத்திற்கு பல முறை தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில், அதற்கு எந்தவொரு அதிகாரியும் பதிலளிக்க வில்லை. இதனையடுத்து, குறித்த தூதுவராலயத்தின் தூதுவர் உள்ளிட்ட 5 அதிகாரிகள் மீண்டும் நாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »