செய்திகள்

நீந்திக்கடந்த நெருப்பாறு : போர் நாவல் – அந்திமழை!

bookebaylow

தமிழில் இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த படைப்புகள் ஈழத்து மண்ணில் இருந்துதான் முகிழ்க்க வேண்டும். ஏனெனில் அந்த சமூகமே மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது என்று சொல்லுவதுண்டு. முள்ளிவாய்க்கால் போன்ற பெரும் அழித்தொழிப்புக்கும் ஆயுதப் போராட்டத் தோல்விக்கும் பின்னர் தன்னை மீட்டெடுக்க கடந்த நான்காண்டுகளாக அச்சமூகம் போராடி வருகிறது. அதில் ஒரு பகுதியாகத்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்துவரும் படைப்புகள். அதில்ஒன்றுதான் நீந்திக்கிடந்த நெருப்பாறு என்கிற இந்த நாவல். இது ஒரு போர் நாவல். ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் மன்னார் முள்ளிக்குளத்தில் இருந்து கிளிநொச்சி வரைக்கும் போரிட்டுக்கொண்டே பின்வாங்கிக்கொண்டு ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு:தலைவரின் வீரமும் கருணாக்களின் துரோகமும்!-கார்ட்டூனிஸ்ட் பாலா

bookebaylow (1)

கடந்த இரு நாட்களாக என்னை கட்டிப்போட்டிருக்கும் புத்தகம் நீந்திக்கடந்த நெருப்பாறு. இதை எழுதியவர் என்று அரவிந்தகுமாரன் என்பவரின் பெயர் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் அவர் யார் என்று எவருக்கும் தெரியாது. அவர் போராளிகளுடன் சுற்றித்திரிந்த ஒரு படைப்பாளியாக இருக்கலாம்.. அல்லது களப்போராளியாக இருக்கலாம். தமிழ் லீடர் ( www.tamilleader.com ) குழுமம் இந்நாவலை வெளியிட்டிருக்கிறது. ஒரு இனத்தின் வீரம் செறிந்த போராட்டம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல களத்திலிருந்து படைப்புகள் வந்தாக வேண்டும். ஒரு ஒற்றைக்குழல் துப்பாக்கியில் தொடங்கிய பிரபாகரனின் இனவிடுதலைப்போர் முப்படைகளை கட்டி அமைத்த வீரம், ...

Read More »

‘நீந்திக்கடந்த நெருப்பாறு’ தமிழீழ விடுதலைக்கான படைக்கருவி – வைகோ (காணொலி)

vaiko-speech

இந்த உலகில் வேறெங்கிலும் காணமுடியாத ஒப்பற்ற தமிழீழத் தேசியத் தலைவன் பிரபாகரனின் வீரம் செறிந்த போராட்டத்தின் விளைவை நீந்திக்கடந்த நெருப்பாறு நாவல் பதிவாக்கியிருக்கின்றது. இது வெறும் நாவலாக மட்டும் நின்றுவிடவில்லை. இது ஈழ விடுதலைக்கான படைக்கருவி என்று மறுமலர்ச்சி திராவிடர் கழகப் பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழ்லீடர் இணையக் குழுமத்தின் வெளியீடான, நீந்திக் கடந்த நெருப்பாறு நாவல், சென்னையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலர் வைகோ அவர்களினால் வெளியிட்டுவைக்கப்பட்டது. தமிழக மக்கள், ஈழ உணர்வாளர்கள், செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள், இளைஞர்கள், மாணவர்கள் ...

Read More »

தமிழ்லீடரின் ‘நீந்திக்கடந்த நெருப்பாறு’ சென்னையில் வெளியிட்டார் வைகோ!(படங்கள்)

nkna-vaiko

தமிழ்லீடர் இணையக் குழுமத்தினரின் வெளியீடான அரவிந்த குமாரனின் நீந்திக் கடந்த நெருப்பாறு நாவல் சென்னையில் வெளியிடப்பட்டிருக்கிறது.   சென்னை, எக்மோர் சென். அன்ரனீஸ் அரங்கில் தமிழ் நாடு மாணவர் கூட்டமைப்பினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் செயலர் வைகோ கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வைத்தார். நிகழ்வில் தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சியின் செயலர் பொ. மணியரசசன், மே. பதினேழு இயக்கத்தை சேர்ந்த செயற்பாட்டாளர் திருமுருகன் காந்தி, ம.திமுக . மல்லை சத்தியா, இமயம் தொலைக்காட்சியின் கட்டுப்பாட்டாளர் ஜெபராஜ், மற்றும் தமிழ் நாடு ...

Read More »

டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’ ஏற்படுத்திய பாதிப்பை நீந்திக்கடந்த நெருப்பாறும் ஏற்படுத்தும்!

தமிழருவி-பர்வீன்1

டால்ஸ்டாயின் போரும் அமைதியும் ரஸ்ய மக்களிடையே ஏற்படுத்திய பாதிப்பை அரவிந்தகுமாரனின் நீந்திக்கடந்த நெருப்பாறும் ஈழமக்களிடையே நிச்சயம் ஏற்படுத்தும் என ‘நீந்திக்கடந்த நெருப்பாறு’ நாவலுக்கு தமிழருவி மணியன் அவர்கள் வழங்கிய அணிந்துரையில் தெரிவித்துள்ளார். தமிழருவி மணியன் அவர்கள் நீந்திக்கடந்த நெருப்பாறு நாவலுக்கு வழங்கிய அணிந்துரையின் முழுவடிவம் வருமாறு: ஒரு இனம் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட போரின் மூலம் மூர்க்கத்தனமாக அழிக்கப்படுவதை செய்தித்தாள் வழியாக அறியும் போது ஒரு வாசகனின் இதயம் கொஞ்சம் வலிக்கும். அந்த வெறித்தனமான அழிவுப்படலத்தைத் தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தால் நெஞ்சம் முழுவதும ரணமாகி விடும். ...

Read More »

உயிர்களைக்கொடுத்துக் காத்த இலட்சிய நெருப்பை அணையாமல் காக்கவேண்டும் – திக தலைவர்

dkleader-253x300

ஆயிரக்கணக்கான போராளிகளும் இலட்சக்கணக்கான தமிழர்களும் தங்கள் உயிரைக்கொடுத்து காத்த இலட்சிய  நெருப்பை அணையாமல் காக்க வரலாற்றுப் பாடங்களை நாம் தொடர்ந்து படித்தே ஆகவேண்டும். ஈழத் தமிழர்கள், உலகத் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் மட்டுமல்ல; இந்த நூலைப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து உலக மக்கள் அனைவரிடமும் கொண்டுசென்று, ஈழப் போராட்டத்தின் இலட்சியத்தை, அவசியத்தை, உண்மையை உணர்ந்து கொள்ளும் படியான வாய்ப்பை நாம் உருவாக்கவேண்டும் என திராவிடர் கழத் தலைவர் கி.வீரமணி அவர்கள் நீந்திக்கடந்த நெருப்பாறு நாவலுக்கு வழங்கிய அணிந்துரையில் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நவம்பர் 2ந் திகதி ...

Read More »

அரங்கம் நிறைந்த மக்கள் கூட்டத்தில் தமிழருவி வெளியிட்டுவைத்த ‘நீந்திக்கடந்த நெருப்பாறு’

IMG_5766

தமிழ்லீடர் இணையத்தளத்தில் வெளியாகிய ‘நீந்திக்கடந்த நெருப்பாறு’ நாவல் வெளியீட்டு நிகழ்வு அவுஸ்திரேலியாவில் அறுநூறுக்கு மேற்பட்ட மக்கள் முன்னிலையில் சிறப்புற நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் (2-11-2013) சிட்னியில் பொதுச்சுடர் ஏற்றல், அகவணக்கத்துடன் தொடங்கிய குறித்த நிகழ்விற்கு தமிழ் இவன்ஸ் பணிப்பாளர் திருவேங்கடம் ஆறுமுகம் தலைமை தாங்கினார். முன்னதாக பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் திருவுருவப்படத்திற்கு இன்பத்தமிழ் ஒலி வானொலிப் பணிப்பாளர் பாலசிங்கம் பிரபாகரன் சுடரேற்றி மலர்மாலை அணிவித்தார். தமிழ்த்தாய் வாழ்த்து, மாவீரர் வணக்க நடனம், எழுச்சிநடனம், தமிழ் மொழிப் பெருமை கூறும் பாடல்களைத் தொடர்ந்து வரவேற்புரையினை தமிழ்லீடர் இணையக்குழுமத்தைச் சேர்ந்த ...

Read More »

‘நீந்திக்கடந்த நெருப்பாறு’ வெளியீட்டுவிழா- சிட்னி வாழ் மக்களுக்கு தமிழ்லீடர் அழைப்பு!

ts

ஈழவிடுதலைப்போராட்டத்தின் இறுதிக் காலப்பகுதிகளை பிரதிபலிக்கும் வகையில் தமிழ்லீடர் இணையத்தளத்தில் வெளியாகும் “நீந்திக்கடந்த நெருப்பாறு” நாவல் வெளியீட்டு நிகழ்வு நாளை சிட்னியில் நடைபெறவுள்ளது. நிகழ்வினைச் சிறப்பிக்க தமிழகத்திலிருந்து தமிழருவி மணியன் உட்பட்டவர்களும் அவுஸ்திரேயா வந்திருக்கின்றனர். நிகழ்வு தொடர்பில் தமிழ்லீடர் குழுமம் தமிழ் உணர்வாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. குறித்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,அன்பார்ந்த சிட்னிவாழ் தமிழர்களே, விடுதலை வேட்கையில் கனன்றெழுந்து வீரமும் தியாகமும் சோகமும் சாதனையும் பின்னடைவும் புடை சூழ புயலாக மேலெழுந்த போராட்டத்தின் பதிவுகளுடன் பயணம் செய்ய உங்களை அன்புடனும் உரிமையுடனும் அழைக்கிறோம். தாயை நேசிப்பவனே தாய் மண்ணையும் ...

Read More »

கந்தகக் கிடங்காக கனலச் செய்யும் ‘நீந்திக்கடந்த நெருப்பாறு’ காப்பியமாகத் திகழும்! – வைகோ

vaiko

தேக்குகளை விட வலிமையான பேனாமுனையால் ஈழ விடுதலை சாத்தியமாகும் காலம் தொலைவில் இல்லை. முள்ளிக்குளம் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரையான வீர வரலாற்றின் பெருமைமிகு பதிவாகத் திகழும் இந்நூல், படிப்போர் உள்ளங்களைக் கந்தகக்கிடங்காகக் கனலச் செய்கின்றது என ஈழத்து எழுத்தாளர் அரவிந்தகுமாரனின் நீந்திக்கடந்த நெருப்பாறு என்ற வரலாற்று நாவலுக்கு வழங்கிய அணிந்துரையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தெரிவித்துள்ளார்.  இறுதிப்போரின் சம்பவங்களைக் கண்முன்கொண்டுவரும் அரவிந்தகுமரானின் ‘நீந்திக்கடந்த நெருப்பாறு’ நாவலுக்கு வைகோ அவர்கள் வழங்கிய அணிந்துரையின்  சுருக்கம் வருமாறு, அரவிந்தகுமாரனின் அற்புதப்படைப்பான ‘நீந்திக்கடந்த நெருப்பாறு’ தலைப்பைப் ...

Read More »