செய்திகள்

முல்லைத்தீவு மக்கள் எதிர்கொள்ளவுள்ள பாரிய ஆபத்து?!!

mahavali

முல்லைத்தீவில் கரைத்துறைபற்று பிரதேசசெயலகத்தின் கடமைகளிற்கு சவால் விடுத்து, சிங்கள மக்களை குடியமர்த்தும் முயற்சியை ஆரம்பித்துள்ள மகாவலி அதிகாரசபையின் நடவடிக்கையால் மாவட்டத்திலுள்ள சுமார் 20 ஆயிரம் மக்களின் காணி உரிமங்களின் சட்டபூர்வ தன்மை கேள்விக்கிடமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Read More »

வெலிக்கடைச் சிறைச்சாலையில் போராட்டம் நடத்திய பெண் கைதி மரணம்!

velikadai

வெலிக்­க­டைச் சிறைச்­சா­லை­யில் பெண் கைதி ஒரு­வர் உயி­ரி­ழந்­துள்­ளார். மார­டைப்பு கார­ண­மாக இந்­தக் கைதி உயி­ரி­ழந்­தி­ருக்­கக்­கூ­டும் என்று சந்­தே­கம் ஏற்­பட்­டுள்­ள­தாக சிறைச்­சா­லை­கள் ஊட­கப் பேச்­சா­ளர் துசார உபுல்­தெ­னிய தெரி­வித்­தார்.

Read More »

சம்பந்தன் பக்கத்திலா பந்து? – நிலாந்தன்

sam

யாழ்ப்பாணத்தில் மிகக்குறைந்தளவு விற்கப்படும் ஒரு பத்திரிகை மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக சர்ச்சைகளை ஏற்படுத்தும் ஒரு பத்திரிகை அச்சர்ச்சைகளின் மூலமாகவே விற்பனைப் பரப்பைக் கூட்டிக்கொள்ளும். ஆனால் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகை இதுவரை பல சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. ஆனால் அதன் விற்பனை மட்டம் இன்று வரையிலும் லாப இலக்கை எட்டவில்லை. மிக விசித்திரமான ஓர் ஊடகவியல் யதார்த்தம் இது. அப்பத்திரிகையின் ஆசிரியர் வித்தியாதரன் “மின்னல்” என்ற பெயரில் எழுதும் பத்திகளை பெரும்பாலான அரசியல்வாதிகள் அதிகாலையிலேயே வாசித்து விடுகிறார்கள். இப்பத்தியில்தான் கோத்தபாய ஜனாதிபதியாக வருவதை ...

Read More »

மகாவலி அபிவிருத்தித் திட்டத்துக்கு எதிரான போராட்டம் தொடரும் – ஆனந்தன் எம்பி!

ananthan

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் மகாவலி நீரை வழங்குவதற்கான திட்டம் என்ற பெயரில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளை கபளீகரம் செய்வதற்கு எதிராக தொடர்ந்து போராடவுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

Read More »

விக்னேஸ்வரனின் அரசியல் எதிர்காலம் குறித்து சிவாஜிலிங்கம் கருத்து!

sivaji

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து விலக வேண்டுமா, இல்லையா என்பது தொடர்பில் வடக்கு மக்களே தீர்மானிக்க வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

Read More »

தீர்வு திட்டத்தை இலங்கை அரசு வழங்க வேண்டியது கட்டாயம் என்கிறார் மனோ!

Mano-Ganesan-01

தமிழர்களுக்கான தீர்வு திட்டத்தை இலங்கை அரசு வழங்க வேண்டியது கட்டாயம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற பண்டாரவன்னியனின் நினைவு தினத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

Read More »

தமிழ்த் தலைவர்களை ஐக்கியப் பட வலியுறுத்தி கிளிநொச்சியில் துண்டுப்பிரசுரம்!

letter

”இது தமிழ்த் தலைவர்கள் எனப்படுவோர் ஐக்கியப்பட வேண்டிய நேரம் ” என்று குறிப்பிட்டு துண்டு அறிக்கைகள் கிளிநொச்சி நகர்ப்பகுதி மற்றும் தர்மபுரம் பகுதிகளிலும் விநியோகிக்கப்பட்டுள்ளது

Read More »

மாகாணசபைத் தேர்தல் எல்லை நிர்ணய அறிக்கை தோல்வி!

parliamnet

மாகாண சபைத் தேர்தல் எல்லை மீள் நிர்ணய அறிக்கை மீதான வாக்கெடுப்பு நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதில் மாகாண சபைத் தேர்தல் எல்லை மீள் நிர்ணய அறிக்கை எகமனதாக தோற்கடிக்கப்பட்டது.

Read More »

பொது வேட்பாளர் விவகாரத்துக்கு பொன்சேகா மீண்டும் எதிர்ப்பு!

Sarath-Fonseka1

எதிர்வரும் காலங்களில் பொதுவேட்பாளர் என்ற சிந்தனையே இருக்ககூடாது என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை மீண்டும் களமிறக்குவது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Read More »

தேர்தல் பிற்போடப்படுவதற்கு காரணம் சொன்ன ரணில்!

ranil

தேர்தல் முறைமை தொடர்பில் எழுந்துள்ள சிக்கல் நிலையே மாகாணசபை தேர்தல் பிற்போடப்பட்டு வருவதற்கு காரணம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Read More »