செய்திகள்

மிக் விமானக் கொள்வனவு மோசடி விவகாரம் தொடர்கிறது!

mig

மிக் விமானக் கொள்­வ­னவு விவ­காரம் தொடர்பில் குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்ள, ரஷ்­யா­வுக்­கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உத­யங்க வீர­துங்­கவின் வங்கிக் கணக்­குகள் தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளுக்கு மேலும் கால அவ­காசம் வேண்டும் என உயர் நீதி­மன்­றுக்கு சட்ட மா அதிபர் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

Read More »

பாதுகாப்பு நீக்கப்பட்டமை தொடர்பில் மஹிந்த விசனம்!

maithripala and mahinda

மே தினத்தில் மக்கள் என்­னுடன் கைகோர்த்­ததன் பிர­தி­ப­ல­னா­கவே எனது பாது­காப்பு நீக்­கப்­பட்­டுள்­ளது. என்னை அச்­சு­றுத்த முன்­னெ­டுக்கும் எந்த நட­வ­டிக்­கை­யையும் கண்டு நான் அஞ்­சப்­போ­வ­தில்லை என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார். அர­சாங்­கத்­துடன் தனிப்­பட்ட கார­ணி­க­ளுக்­காக முரண்­ப­ட­வேண்­டிய அவ­சியம் எனக்கு இல்லை. இந்த மக்­க­ளையும் நாட்­டையும் அழிக்கும் அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களை எதிர்த்தே நான் போராடி வரு­கின்றேன் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

Read More »

கம்பளை சிறுவன் கடத்தல்; நடந்தது என்ன?!

child

கம்­பளை பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட கங்கவட்ட வீதி பகு­தியில் தனது பெற்­றோ­ருடன் வசித்து வந்த இரண்­டரை வயது குழந்­தையை கடத்­தி­யமை, சட்டபூர்­வ­மான பாது­காப்பில் இருந்து குழந்­தையை பிரித்­தமை, தடுத்து வைத்­தமை மற்றும் கப்பம் கோரி­யமை தொடர்பில் கைது செய்­யப்­பட்ட மூவ­ரையும் எதிர்­வரும் 18 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. குழந்­தை­யுடன் மாய­மான, பின்னர் கடத்­தலின் பிர­தான சூத்­தி­ர­தாரி என கண்­ட­றி­யப்­பட்ட மாமா உறவு முறை இளைஞர் முஹம்மத் அசாம் மற்றும் குழந்­தையை தடுப்பில் வைத்­தி­ருந்த இரு பெண்­க­ளை­யுமே இவ்­வாறு விளக்­க­ம­றி­யலில் வைக்க ...

Read More »

மஹிந்த நடிக்கிறார் – விளக்குகிறார் சந்திரிகா?!

(FILES) In this photograph taken on September 6, 2005, then-president of Sri Lanka Chandrika Kumaratunga (R) and her then-nominee for the forthcoming presidential election Mahinda Rajapakse chat at the 54th anniversary celebrations of their Sri Lanka Freedom Party in Colombo. Sri Lanka's former president has warned of a "short-lived peace" unless the government shares power with the ethnic Tamil minority after the end of the island's civil war, her office said July 25, 2011. Chandrika Kumaratunga, who ruled the island between 1994 and 2005, said her successor President Mahinda Rajapakse had followed a policy of "winner takes all" after crushing Tamil rebels in 2009.  AFP PHOTO/Lakruwan WANNIARACHCHI/FILES__

தமது பாது­காப்பை அதி­க­ரிக்க வேண்டும் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ நடிப்­பது ஏற்­க­னவே அவரும் அவ­ரது குடும்­பத்தில் உள்­ள­வர்­களும் அனு­ப­வித்த சிறப்பு சலு­கையின் கார­ண­மா­க­வே­யாகும். யுத்தம் நடந்த காலப்­ப­கு­தியில் இரு மாதங்­க­ளுக்கு எனது ஒட்­டு­மொத்த பாது­காப்பு அதி­கா­ரி­க­ளையும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பா­யவும் இணைந்து இல்­லா­ம­லாக்­கினர்.

Read More »

கறுப்புக் கொடி விவகாரம்; சர்ச்சையில் சிக்கினார் வீரவன்ச!

Wimal Weerawansa_4

வெசாக் தினத்தில் மஞ்சள் கொடியை அகற்றி கறுப்புக்கொடி தூக்குமாறு தெரிவித்துள்ளதன் மூலம் விமல் வீரவன்ச பௌத்த தர்மத்தை இழிவு படுத்தியுள்ளார். புத்தி பேதலித்துப்போனவர்களால் மாத்திரமே இவ்வாறான கருத்துக்களை தெரிவிக்க முடியும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் ஸாலி தெரிவித்தார்.

Read More »

இரட்டை பிராஜாவுரிமை – பெப்ரல் அமைப்பு முன்வைக்கும் கோரிக்கை!

lanka

இரட்டை பிரஜாயுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றுவதை போன்று இரட்டை பிரஜாயுரிமை பெற்று அரச சேவையில் நீடிக்கும் உத்தியோகத்தர்கள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Read More »

வடக்கு தொழிற்சாலைகளை மீள ஆரம்பிகுமாறு முதல்வர் வலியுறுத்தல்!

viknesh

“வடக்கு மாகா­ணத்­தில் இயங்­கிய பெரி­ய­ள­வி­லான தொழிற்­சா­லை­கள் இன்று மூடப்­பட்­டுள்­ள­தால் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் வேலை­வாய்ப்­பின்றி உள்­ள­னர். எனவே அவற்றை மீள­வும் ஆரம்­பித்து உட­ன­டி­யாக வேலை­வாய்ப்பை வழங்க ஆவன செய்ய வேண்­டும்” இவ்­வாறு அரச தலை­வ­ரி­டம் நேரில் வலி­யு­றுத்­தி­னார் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன்.

Read More »

காணாமல் ஆக்கப்பட்டோர் சான்றிதழ் பெற 27 பேர் மட்டுமே விண்ணப்பம்?!

file

காணா­மல் ஆக்கப்பட்டோருக்கு சான்­றி­தழ் பெற வடக்கு மாகா­ணத்­தின் 5 மாவட்­டங்­க­ளில் இருந்­தும் 27 பேர் மட்­டுமே இந்த வரு­டம் விண்­ணப்­பித்­துள்­ள­னர் என வடக்கு மாகா­ணப் பதி­வா­ளர் நாய­கம் பிர­பா­கர் தெரி­வித்­தார்.

Read More »

போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை இடம்பெறும் என்கிறார் மனோ!

mano

இலங்கையின் இறுதிகட்ட போரின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை நடைபெறும் என்று அமைச்சர் மனோ கணேசன் பிபிசிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார். ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இலங்கை அரசும் ஒரு பங்குதாரராக உள்ளதால், அந்தக் கடப்பாட்டிலிருந்து நழுவிவிட முடியாது என்றும் எனவே இது குறித்து தற்போதைய அரசாங்கம் உறுதியாகவுள்ளது என்றும் தேசிய சகவாழ்வு மற்றும் அரச மொழிகளுக்கான அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

Read More »

ஆட்சியை கவிழ்க்க முடியுமான சூழல் தோன்றியுள்ளது – மஹிந்த!

Mahinda-Gota

தற்போது நாம் நினைத்த நேரத்தில் ஆட்சியை கவிழ்க்க முடியுமான சூழல் தோன்றியுள்ளது எனவும் சரியான நேரத்தில் ஆட்சியை கைப்பற்றுவோம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். 2017ம் ஆண்டு ஆட்சியை கவிழ்ப்பதாக கூறியமை தொடர்பில் திவயின நாழிதழுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

Read More »