செய்திகள்

நல்லூர் கந்தனுக்க தங்கத்தில் கூரை

40523319_2333806739968003_797366206125309952_n

நல்லூர்  கந்தசுவாமி ஆலயத்தில் தங்கித்தில் வேயப்பட்ட பொற்கூரைக்கு மஹா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றுள்ளது. இன்று பொற்கூரைக்கான ஸ்வர்ண விமான கும்பாபிஷேகம் இடம்பெற்றது. இன்று காலை 06 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து பொற்கூரை மீதுள்ள கலசங்களுக்கு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வசந்த மண்டப பூஜை இடம்பெற்று முத்துக்குமார சுவாமி வள்ளி தெய்வானை சமேதரராய் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி உள் வீதியுலா வந்தார்.காலை 6.45 மணியளவில் வேத பாராயணம் ஓதி மங்கள இசை எழும்ப கலச அபிஷேகம் நடைபெற்றது. தென்னிந்தியாவில் ...

Read More »

இலங்கை – நேபாள ஜனாதிபதிகள் சந்திப்பு

1535874744-maithiri-president-2

பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக நேபாளத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (01) பிற்பகல் இடம்பெற்றது. நேபாள ஜனாதிபதி மாளிகையான ஷிதல் நிவாஸுக்குச் சென்ற ஜனாதிபதியை நேபாள ஜனாதிபதி மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நேபாள விஜயம் தொடர்பாக நன்றி தெரிவித்த நேபாள ஜனாதிபதி, இரண்டு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார பிணைப்பு மட்டுமன்றி மிக நீண்ட உறவுகள் குறித்து நினைவுகூர்ந்தார். பிம்ஸ்டெக் மாநாட்டின் புதிய ...

Read More »

கௌதாரிமுனை காப்பாற்றப்படுமா? மு.தமிழ்ச்செல்வன்

IMG_3362

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமமே கௌதாரிமுனை, மண்ணித்தலை, கௌதாரிமுனை,விநாசியோடை,கல்முனை போன்ற சிறிய பிரதேசங்கள் இதற்குள் அடங்குகின்றன.115 குடும்பங்களை சேர்ந்த சுமார் 386 பேர் வாழ்கின்றனர் என மாவட்டச்செயலக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கௌதாரிமுனையின் அழகு அல்லது சிறப்பு என்பது ஒன்று அதன் தொன்மை, இரண்டாவது இயற்கை அழகு, குறிப்பாக கௌதாரிமுனையில் காணப்படுகின்ற பளிச் என்ற வெள்ளை மணல் மேடுகள் ஆங்காங்கே வெண்ணிற ஆடைகளில் காட்சிதரும் தேவதைகள் போன்றுள்ளன. அத்தோடு அங்கே காணப்படுகின்ற கண்டல் தாவரங்களும், பனைகளும்  கௌதாரிமுனையின் அழக்கினை மேலும் மெருகூட்டுகின்றன ...

Read More »

பொது எதிரணியின் பாரிய பேரணியை எவ்வாறு எதிர்கொள்வது –அரசாங்கம் தீவிர கவனம்

Dinesh-Gunawardena

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவு பொது எதிரணியினர் புதன்கிழமை கொழும்பை மையமாக கொண்டு நடத்த தீர்மானித்துள்ள பாரிய பேரணி குறித்து நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். பொது எதிரணி பெருமளவு மக்களை பேரணிக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள அதேவேளை அரசாங்கம் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து வருகின்றது. இந்த மோதலில் யாருக்கு வெற்றி என்பது அடுத்த 48 மணித்தியாலத்திற்குள் தெரிந்துவிடும் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். பேரணிக்கு  மக்கள் அழைத்துவரப்படுவதை தடுப்பதற்கான முயற்சியின் ஒரு ...

Read More »

நல்லாட்சி அரசில் வடக்கில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறவில்லை – சுமந்திரன்

625.500.560.350.160.300.053.800.900.160.90

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறவில்லை என்றும் அவை மஹிந்த காலத்திலேயே இடம்பெற்றதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,மகாவலி அதிகாரசபை முல்லைத்தீவில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கு காணி உத்தரவு பத்திரங்களை வழங்கும் நிலையில் அவ்வாறு வழங்கவில்லை. நாங்கள் ஆராய்ந்தமைக்கு அமைவாக அமைச்சர் ராஜித கூறிய கருத்து உண்மையானது. ராஜபக்ச காலத்திலேயே குடியேற்றப்பட்டார்கள்.ஆனால் ராஜபக்ச காலத்தில் ...

Read More »

விக்னேஸ்வரன் மனக் குழப்பத்திலுள்ளார்

imageproxy

மனக்குழப்பத்தில் இருக்கும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தனது மனக்குழப்பத்தை நீக்கி சரியான பதில் ஒன்றை தெரிவிப்பாராக இருந்தால், அதன் பின்னர் அடுத்த மாகாணசபை தேர்தல் குறித்து கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை  வெளிப்படுத்தும் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்துவரும் மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர்  குறித்தே கேட்ட மேற்கண்டவாறு கூறிய அவர், அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியான தீர்மானம் எதனையும் இதுவரை எடுக்கவில்லை. இந் நிலையில் முதலமைச்சர் உரையாற்றும்போது ...

Read More »

மர்ம பொருள் வெடித்ததில் மீனவர் பலி : மூவர் காயம்- மன்னாரில் சம்பவம்

DSC_0001-750x430-1

மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் மிதந்து வந்த மர்மப் பொருளை எடுத்து சோதனைக்கு உற்படுத்தியபோது மர்ம பொருள் வெடித்ததில் மீனவர்  ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் மூன்று மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மன்னார் பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் நேற்று  இரவு 11.30 மணியளவில் பள்ளிமுனை கடற்கரையில் இருந்து படகு ஒன்றில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். இதன் போது பள்ளிமுனை- நாச்சிக்குடா கடற்பகுதியில் மிதந்து வந்த மர்மப்பொருளை குறித்த மீனவர்கள் அவதானித்துள்ளனர். இதன் போது ஜேசு ரஞ்சித் ...

Read More »

வலம்புரி பத்திரிகை சிலரால் எரிக்கப்பட்டது

40582690_2332722366743107_5533882554202980352_n

வடக்கு மாகாண சபை  உறுப்பினர் அஸ்மினின் ஆதரவாளர்களால் யாழிலிருந்து வெளிவரும் வலம்புரி பத்திரிகைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, பத்திரிகையும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. குறித்த பத்திரிகையில் இன்று சனிக்கிழமை வெளியான தலைப்புச் செய்தியில் முஸ்லிம்களை வெளியேற்றிய புலிகளின் தீர்மானம் சரியானது என அஸ்மின் மறைமுகமாக ஏற்றுக்கொள்கின்றார் என எழுத்தப்பட்டிருந்தது. வடமாகாண சபையின் 130 ஆவது அமர்வு கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் போது அங்கு கருத்து தெரிவித்த அஸ்மீன் , ” மக்கள் ஆட்சி தத்துவத்திற்கு மாறாக இருந்தாலும் , விடுதலைப்புலிகள் போல் செயற்பட வேண்டும். ...

Read More »

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவேண்டும் – சிவி

சி.வி.விக்னேஸ்வரன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையானது, இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முற்படுத்த வேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையானது, இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முற்படுத்துவதன் பொருட்டு அல்லது விசேடமாக உருவாக்கப்படும் இலங்கைக்கான சர்வதேச நியாயசபையில் முற்படுத்துவதன் பொருட்டு, இலங்கையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு முன்கொண்டுவருதல் வேண்டுமென அவர் கூறியுள்ளார். யாழ் பலாலி வீதியின் கந்தர்மடச் சந்தியில் இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டமொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்து ...

Read More »

கிளிநொச்சியில் வறுமையின் விரக்தியால் தற்கொலை செய்த மாணவி

large_hjang-53887

கிளிநொச்சி திருமுருகண்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 09ம் தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். 14 வயதுடைய முருகேசு அபிசாலினி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தற்கொலைக்கான காரணம் வறுமை எனவும் பாடசாலை செல்வதற்கு புதிய சீரூடை இன்மை காரணமாக வீட்டில் ஏற்பட்ட  கருத்து முரண்பாட்டை தொடர்ந்தே மாணவி தற்கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது, மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Read More »