செய்திகள்

தேர்தல் காய்ச்சல்: மக்களை சந்தித்த தமிழ் அரசு கட்சி!

F9DA00E1-F247-467D-AD19-3BE8A547B2C7

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகளின் மக்கள் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வு சித்தாண்டி ஈரளக்குளம் கிராம அதிகாரி பிரிவில் செங்கலடி பிரதேச சபையின் சித்தாண்டி வட்டார உறுப்பினர் எஸ்.முரளிதரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாக ஞா.ஸ்ரீநேசன், சீனித்தம்பி யோகேஸ்வரன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் உட்பட கட்சியின் பிரநிதிகளும் கலந்து கொண்டனர். அத்துடன் ஈரளக்குளம், இலுக்கு, கூழாவடி ஆகிய கிராமங்களின் நடாத்தப்பட்ட மக்கள் சந்திப்பிலும் கலந்து கொண்டு மக்கள் ...

Read More »

சுமந்திரன் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு துரோகம் செய்துவிட்டார் – சர்வேஸ்வரன்

120

புதிய அரசமைப்பில் சமஷ்டி தேவையில்லை, மாகாண சபை முறைமையில் சிறு மாற்றம் செய்தாலே போதுமானதென நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியிருக்கும் கருத்தானது தமிழ் மக்களது 70 ஆண்டு காலப் போராட்டத்துக்குச் செய்த துரோகம் எனவும் அப்போராட்டத்தையே காட்டிக் கொடுத்த செயற்பாடு எனவும் வட மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். வட மாகாண கல்வியமைச்சில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு செய்தியாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே மேற்படி கருத்தை அவர் தெரிவித்தார். மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “காலியில் ...

Read More »

பாணின் விலை அதிகரிக்கின்றது

baked_bread_l

ஒரு இறாத்தல் பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கவுள்ளது இதன்படி 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலையை ஐந்து ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் அறிவித்துள்ளது. கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதனால் பேக்கரி உரிமையாளர்களின் நலன் கருதியே மேற்கண்ட நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாகவும் அச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Read More »

கிளிநொச்சியில் பிரதம நீதியரசர், நீதி அமைச்சர் முன்னிலையில் முதியவர் இலஞ்சத்திற்கு எதிராக மரத்தில் ஏறி போராட்டம் 

IMG_3857

கிளிநொச்சியில்  இன்று முதியவர் ஒருவர் பொலீஸார் இலஞ்சம பெறுவதற்கு எதிப்புத் தெரிவித்து பிரதம நீதியரசர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோர் முன்னிலையில் மரத்தில் ஏறி போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் புதிய நீதி மன்றக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று 03-09-2018  காலை ஒன்பது முப்பது மணிக்கு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இதன் பின்னர் மேடை நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் அவர்கள் உரையாற்றிக்கொண்டிருந்தார். இதன் போது மேடையில் நீதி மற்றும் ...

Read More »

கிளிநொச்சியில் புதிய நீதி மன்றக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

court 03

கிளிநொச்சி மாவட்டத்தில் புதிய நீதி மன்றக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று 03-09-2018  காலை ஒன்பது முப்பது மணிக்கு இடம்பெற்றுள்ளது. பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் மற்றும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசிரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரல பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், மற்றும் நீதிபதிகள்  சட்டத்தரணிகள் ஆகியோர் கலந்துகொண்டு  அடிக்கல்லினை நாட்டி வைத்தனர் நீதி அமைச்சின் 4500 இலட்சம் ரூபா செலவில் மூன்று மாடிகளை கொண்ட புதிய நீதி மன்றக் கட்டடத்  தொகுதிக்கே அடிக்கல் நாட்டப்பட்டது.  நீதவான் நீதின்றம், , ...

Read More »

ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது -லதா அத்துகொரல

imageproxy

அனைத்து பிரஜைகளுக்கும் சுதந்திரமாக உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகொரல தெரிவித்துள்ளார். அண்மையில் சிறைச்சாலையில் கைதிகள் சிலர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது இவ்வாறான சுதந்திரம் இருக்கவில்லை எனவும் ஆர்ப்பாட்டங்களின் போது கைதிகள் கொலை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 5 ஆம் திகதி கொழும்பில் ஏற்பாடு செய்துள்ள அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணிக்கு எவ்வித எதிர்ப்பையும் காட்டுதில்லை எனவும் அதற்காக பூரண சுதந்திரம் ...

Read More »

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து எங்களை விரட்டி விட்டார்கள்

mahindablamarjunafamily

மக்கள் சக்தி ஆர்ப்பாட்ட பேரணி தற்போதைய அரசாங்கத்தை விரட்டுவதற்கான முதல் கட்ட நடவடிக்கை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (02) நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 67 ஆவது ஆண்டு நிறைவு இன்றாகும் எனவும் தான் கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வலுவானது எமது ஆட்சிக்காலத்திலேயே எனவும் அவ்வாறு வலுவான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையே தற்போதைய நிர்வாகிகளிடம் ஒப்படைத்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தங்களை ஸ்ரீலங்கா ...

Read More »

பொருளாதார அபிவிருத்தியை கோரியவர்களை துரோகி என்றவர்கள் அவர்களுடன் கூட்டு வைத்துள்ளனர் – சிவி

imageproxy

பொருளாதார அபிவிருத்தியை கோரிய சில தமிழ்க் கட்சித் தலைவர்களை துரோகி என்று அடையாளப்படுத்தியவர்கள்  உள்ளுராட்சி மன்றங்கள்பலவற்றில் அவர்களுடன் கூட்டுவைத்துள்ளனர்.பொருளாதார விருத்தியே எமக்குத் தற்போது வேண்டும் என்ற கருத்திருந்திருந்தால் நாங்கள் மற்றவர்கள் அரசாங்கத்தின் ஊடாகப் பொருளாதார விருத்தியைப் பெறுவதை தடை செய்திருக்கக்கூடாது. துரோகிகள் என்று அவர்களை அடையாளப்படுத்தியிருக்கக்கூடாது. என வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளர்  அவரின் வாராந்த கேள்விகளுக்கான பதிலில் இதனை குறிப்பிட்டுள்ளார் இவ்வார கேள்விகளும் பதில்களும் 1. கேள்வி – நீங்கள் கௌரவ சம்பந்தன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் கோரப்பட்டதற்கு மாறாக ...

Read More »

பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – திகாம்பரம்

Thigamparam

எதிர்வரும் 23 ஆம் திகதி பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை தொழிலாளர் தேசிய சங்கம் முன்னெடுக்க போவதாக சங்கத்தின் தவைரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். அட்டன் டி.கே.டபிள்யூ. கலாசார  மண்டபத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்ட தலைவர் மற்றும் தலைவிகளுக்கு கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் விளக்கமளிக்கும் நிகழ்வில் இன்று கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அமைச்சர் அங்கு மேலும் உரையாற்றிய அவர், தொழிலாளர்களின் உழைப்பினால் தோட்ட நிர்வாகிகள் மாதாந்தம் ...

Read More »

வாழைச்சேனை கடதாசி ஆலையை மீள ஆரம்பியுங்கள்

va1

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையை உடனடியாக மீள ஆரம்பித்து தொழில் வாய்ப்பிளை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான செயலணியில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்த அவர், வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தோணிதாட்டமடு பகுதியில் மக்களின் 14 வீடுகளை இராணுவம் ஆக்கிரமித்து இராணுவ முகாம் அமைத்துள்ளது. எனவே இராணுவத்தை அகற்றி உரிய ...

Read More »