செய்திகள்

இலஞ்சம் பெறுவதற்கு எதிராக   மரத்தில் ஏறி போராட்டம் நடத்திய முதியவர் கைது

IMG_4173

பொலீஸார் இலஞ்சம் பெறுகின்றனர் எனத் தெரிவித்து மரத்தில் ஏறி போராட்டம் நடத்திய முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் புதிய நீதி மன்றக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று  03-09-2018  காலை ஒன்பது முப்பது மணிக்கு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற வேளை . மேடைக்கு நேர் எதிராக ஏ9 பிராதான வீதியின் ஓரமாக காணப்பட்ட பூவரசு மரத்தில் இருந்து முதியவர் கையில் ஒரு பதாகையை வைத்துக்கொண்டு உரத்த குரலில் சத்திமிட்டுக்கொண்டிந்தார் இதனை கையில் வைத்திருந்த முதியவர் பொலீஸார் இலஞ்சம் ...

Read More »

மகிந்தவின் ஆட்சியில் மைதிரியே சிங்கள குடியேற்றங்களை செய்தார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஆட்சியில் சிங்களக் குடியேற்றங்கள் நடக்கவில்லை என்பது தமிழ் மக்கள் பெருமைப்படக்கூடிய விடயமல்ல எனத் தெரிவித்த வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், அத்தனை சிங்கள குடியேற்றங்களையும் செய்தவர் மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் இப்போதைய ஜனாதிபதியாக இருக்கும் மைத்திரிபால சிறிசேனவே ஆவார் என்றும் சுட்டிக்காட்டினார். நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் எவையும் இடம்பெறவில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்த கருத்து தொடர்பாக  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை குறிப்பிட்ட அவர், ...

Read More »

சட்டம், ஒழுங்கு இல்லாத நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்பட மாட்டாது

download

சட்டவாட்சியை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸ் சேவையை முன்னெடுப்பது அரசாங்கத்தின் இலக்காகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பம்பலப்பிட்டி பொலிஸ்துறை படையணி மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை பொலிஸின் 152 ஆவது நிறைவாண்டு நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சட்டம், ஒழுங்கு இல்லாத நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்பட மாட்டாது. கடந்த காலத்தில் பொலிஸார் பல்வேறு வெற்றிகளை அடைந்ததோடு பல பின்னடைவுகளையும் எதிர்நோக்கினார்கள். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அமைதியான முறையில் நடந்த முடிந்தமை மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் பிரதமர் கூறினார். திகனயில் இடம்பெற்ற ...

Read More »

பெண்கள் சிறுவர்கள் விடயத்தில் சீனா முழு ஆதரவு

YkP01ZMu

பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் சகல திட்டங்களுக்கும் முழுமையான ஆதரவினை வழங்கத் தயாராக உள்ளதாக சீனாவின் ஷங்ஹய் மாநகர சபையின் மக்கள் காங்கிரஸ் தலைவர் யின் யிகுய் தெரிவித்தார். கொழும்பு மாநகரசபை மேயர் ரோஸி சேனாநாயக்கவை இன்று கொழும்பு மாநகர சபையில் சந்தித்து கலந்துரையாடும போதே அவர் இதனை தெரிவித்தார். இச் சந்திப்பின் போது ஷங்ஹய் மாநகர பயனாளர்களின் உதவியினைப் பெற்றுக்கொணடு கொழும்பு நகரில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. அத்தோடு உலகின் பல்வேறு நாடுகளிலும் பாரிய ...

Read More »

மஹிந்த தலைமையில் ஜந்தாம் திகதிக்கான வியூகம்

mahinda_rajapaksa4-Copy-Copy

அரசாங்கத்திற்கு எதிராக நாளை மறுதினம் கொழும்பில் நடத்தவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணி குறித்த தீர்க்கமான முடிவுகள் நாளை மாலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறும் கலந்துரையாடலின் போது அறிவிக்கப்படவுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். இக் கலந்துரையாடலைத் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்குள் அத்தீர்மானங்கள் கிராமிய மட்டத்திலுள்ள பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்தும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவுள்ளது.

Read More »

இலங்கை ஜநாவிற்கு பதிலளிக்க தவறியுள்ளது

srilanka1

இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழுவினால் தகவல் கோரும் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. சித்திரவதைக்கு உட்படுத்தல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான நீதிப்பொறிமுறையின் விரிவாக்கம் மற்றும் முன்னாள் குற்றவியல் விசாரணைப் பிரிவு தொடர்பான தகவல்கள் என்பன குறித்து தகவல் கோரியிருந்த ஐ.நா.வின் அறிக்கைக்கு பதிலளிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தவறியமையாலேயே மேற்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குழுமத்தின் அவதானிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒருவருடம் கடந்துள்ள நிலையிலும் தகவல்கள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

பேரணியை நடத்தி அரசாங்கத்தை கவிழத்தே தீர்வோம் – நாமல்

625.500.560.350.160.300.053.800.900.160.90

எதிர்வரும் 05 ஆம் திகதி திட்டமிட்டதுபோல் மக்கள் எழுச்சிப் பேரணியை நடத்தி அரசாங்கத்தை கவிழத்தே தீர்வோம் என கூட்டு எதிர்க் கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனைக் கூறிய அவர், அரசாங்கம் அச்சப்பட்டு பேரணியைத் தடுப்பதற்கான சதி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது எவ்வாறெனினும் பேரணில் மக்கள் கலந்து கொள்வதை தவிர்க்க முடியாது. மேலும் கிராமிய மட்டத்தில்  பேரணியில் கலந்துகொள்ளவுள்ள மக்கள் பிரதிநிதிகளை அச்சப்படுத்தும் ...

Read More »

மன்னார் மனித புதைகுழியில் ஆடைகளின்றியே எச்சங்கள் மீட்கப்படுகின்றன

5b84fe82e156e-Article

மன்னார் சதோச வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகளின் போதும் தொடர்ச்சியாக புதிய மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறாக புதிய மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றமையினால் அகழ்வு பணிகள் முடிவின்றி தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இன்று 62 ஆவது தடவையாக குறித்த வளாகத்தில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றன. விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல்துறை போராசிரியர் தலைமையில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் இதுவரை குறித்த வளாகத்தில் 111 ...

Read More »

போலி ரூபா 5,000 தாள்களுடன் இறக்காமத்தைச் சேர்ந்தவர் கைது

download

போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நபர் ஒருவர், கொழும்பு புறக்கோட்டையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (03) காலை, புறக்கோட்டை, செபஸ்தியன் வீதியில் வைத்து பஸ் நடத்துனர் ஒருவரிடம் ரூபா 5,000 நாணயத்தாள் ஒன்றை வழங்கிய குறித்த சந்தேகநபர், அதனை மாற்றித் தருமாறு கோரியுள்ளார். இதனையடுத்து, குறித்த நாணயத்தாள் தொடர்பில் சந்தேகமுற்ற நடத்துனர், அது தொடர்பில் புறக்கோட்டை பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார். அதனையடுத்து, குறித்த சந்தேகநபரை கைது செய்த பொலிசார் அவரை பரிசோதனை செய்த போது, அவரிடமிருந்து ரூபா 5,000 நாணயத்தாள்கள் 13 இனை கைப்பற்றியுள்ளனர். ...

Read More »

குண்டு வெடித்ததில் கண்ணிவெடி அகற்றும் பணியாளார் பலி

40883777_2174085179540476_3298639319752769536_n

மாங்குளம் பகுதியில் மிதி வெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டுக்கொண்டிந்த போது குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் 28 வயதுடையவர் ஆவார். அத்துடன் காயமடைந்த 25 வயதுடைய நபர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தனியார் நிறுவனம் ஒன்றின் கீழ் முன்னெடுக்கப்படும் மிதி வெடிகள் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிந்தே போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More »