செய்திகள்

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகா விடின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு வெற்றிக்கிடைக்காது: சந்திம வீரகொடி

625.320.560.350.160.300.053.800.868.160.90

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகா விடின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு வெற்றிக்கிடைக்காது என  தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி , நல்லாட்சியின் சில தீர்மானங்கள்  மிகவும் கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டார். அரசாங்கத்திலிருந்து விலகிய உறுப்பினர்கள் நால்வரை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கியுள்ளமை குறித்து வினவுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெளிவுபடுத்துகையில், தொகுதி அமைப்பாளர் பதவிலிருந்து நீக்கியது தொடர்பில் எமக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. எனினும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து சுதந்திர கட்சியால் முன்னெடுக்கப்படும் சில தீர்மானங்கள் கவலையளிக்கக் ...

Read More »

பெண் விரிவுரையாளர் கொலையில் சந்தேகநபர் ஒருவர் கைது

arrest

பெண் விரிவுரையாளரை கொலை செய்த சந்தேகநபர் ஒருவர் திருகோணமலை சங்கமித்த கடலோரப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் பெண்கள் பயன்படுத்தும் கைப்பை ஒன்றை எடுத்துச் சென்று கொண்டிருந்த போது பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டதையடுத்து அதில் இருந்து ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரிடம் மேலதிக விசாரணை செய்த போது பெண் விரிவுரையாளரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகம் ஏற்பட்டு கைது செய்யப்பட்டுள்ளாார். கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் நேற்று திருகோணமலை நகர கடலில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார். வவுனியா, ...

Read More »

அரசாங்கத்தின் இயலாமை ரூபாவின்வீழ்சியின் வெளிப்பாடு – மஹிந்த

28-1435483405-rajapaksa9-600

அரசாங்கத்தின் இயலாமையால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி வெளிப்பட்டுள்ளதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுதொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில், நாடு தற்போது அதலபாதாளத்திற்குள் சென்றுகொண்டிருக்கிறது. அனைத்துதுறைகளுமே மிகவும் மோசமான வீழ்ச்சிகளையும் நிர்வாக சீர்கேடுகளையும் சந்தித்துள்ளன. இவ்வாறானதொரு நிலையில் நாட்டைக் கட்டியெழுப்புவதென்பது,தற்போதைய அரசாங்கத்தினால் முடியாத காரணமாகும். எனவே, தேர்தல் ஒன்றின் ஊடாக தீர்வுகாண முடியும்.

Read More »

தமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு

625.0.560.320.160.600.053.800.700.160.90

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் தமிழ் பெண் விரிவுரையாளர் ஒருவர் திருகோணமலை நகர கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தனது கடமைகளை முடித்து விட்டு  பல்கலைக்கழகத்தில் இருந்து வீடு சென்ற வேளையில் காணாமல் போயுள்ளார். இந்நிலையில் நேற்றுக் காலை அவரது பாதணிகள் திருகோணமலை கடற்கரையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட நிலையில், நேற்று  பகல் அவரது சடலம் கடற்கரையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா, ஆசிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய கர்ப்பிணி பெண்ணான விரிவுரையாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் விரிவுரையாளரின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், உயிரிழப்புக்கான காரணம் ...

Read More »

மாகாண சபை எல்லை மீளாய்வு அறிக்கை காலதாமதமாகும் என அறிவிப்பு

Karu-Jayasuriya-98

மாகாண சபைத் தேர்தல் எல்லை நிர்ணய அறிக்கையை சமர்ப்பிக்க மேலும் இரண்டு மாத கால அவகாசம் தேவை என மாகாணசபை எல்லை நிர்ணய அறிக்கை மீளாய்விற்காக நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழு, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் தெரிவித்துள்ளது. மாகாண சபைத் தேர்தல் எல்லை நிர்ணயம் தொடர்பில் மேலும் விரிவாக ஆராய்ந்து இணக்கப்பாட்டுக்கு வரவேண்டிய தேவைப்பாடு உள்ளமையினாலேயே இந்தக் கால அவகாசம் தேவை என்றும் அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது. இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போதே எல்லை நிர்ணயம் தொடர்பான குழு விடயத்தை தெரிவித்துள்ளது.எவ்வாறிருப்பினும், ...

Read More »

பாராளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவங்ச ,பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க தற்காலிக தடை

30580f45ba4f3807bfc493840187ced9_XL

பாராளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவங்ச இபிரசன்ன ரணவீர ஆகியோருக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற ஒழுக்க விதிகளை மீறியமை தொடர்பில் குறித்த இரண்டு பேருக்கும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பிரேரணையை சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்தப் பிரேரணை பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் வைத்து வெளியிட்ட கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜுலை மாதம் நாடாளுமன்றில் குழப்பம் ...

Read More »

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விலயுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

1537515720-jaffna-2

தமது விடுதலையை விலயுறுத்தி இன்று எட்டாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் இன்று (21) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஏற்பாடு செய்த இந்த கவனயீர்ப்பு போராட்டம் யாழ். மத்திய பேருந்து நிலைய்திற்கு முன்பாக காலை 10 மணிமுதல்11 மணி வரை இடம்பெற்றது. தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசும் தமிழ் தரப்பு பிரதிநிதிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இங்கு வலியுறுத்தப்பட்டது. அத்துடன் குறித்த கைதிகளுக்கு பொது ...

Read More »

சந்திரிகா பண்டாரநாயக்கவுக்கு பிரான்ஸின் அதி உயர்ந்த தேசிய விருது

1537517264-chandrika-2

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு பிரான்ஸின் அதி உயர்ந்த தேசிய விருது Commandeur de la Legion D’Honneur வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதை வென்ற முதலாவது இலங்கையர் என்ற பெருமையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பெற்றுள்ளார். இலங்கையில் உள்ள பிரான்ஸ் தூதுவரின் இல்லத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வில் பிரான்ஸின் ஜனாதிபதி எம்மானுவெல் மெக்ரோனின் சார்பில் இலங்கைக்கும் மாலைதீவுக்குமான பிரான்ஸ் தூதுவர் ஜீன் மரின் சூ இந்த விருதை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் கையளித்தார். முன்னாள் ஜனாதிபதி குமாரதுங்க இலங்கையின் ...

Read More »

சரணடைந்தவர்களை புலிகளே கொன்றனர் – எஸ்.பி.திஸாநாயக்க

sb-disanayake

இறுதி யுத்தத்தின்போது சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதி ரமேஷ், இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டாரெனத் தான் கூறியதாக, ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிட்டுள்ளனவெனத் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, சரணடைந்த ரமேஷையும் பொதுமக்களையும், விடுதலைப் புலிகளே சுட்டுக் கொன்றனரெனவும் தெரிவித்தார். அத்தோடு, முன்னர் தான் கருத்துத் தெரிவித்த போது, இதுபோன்ற சம்பவங்கள், இராணுவத் தரப்பிலும் நடந்திருக்கலாம் என்றே, தான் கூறியதாகவும் தெரிவித்தார். புஞ்சி பொரளையில் உள்ள, சுதந்திர ஊடக கேந்திர நிலையத்தில், நேற்று(20) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, ...

Read More »

பௌத்த தொல்பொருள் சின்னங்களை அழித்து இன முரண்பாடுகளை தோற்றுவிக்கிறது வடமாகாண சபை – தினேஷ் குணவர்தன

dinesh-gunawardena-860-05-720x450

பௌத்த தொல்பொருள் சின்னங்களையும் புராதான பிரதேசங்களையும் அழிக்கும் வகையிலும் வடமாகாணசபை செயற்பட்டு வருகின்றது எனவும் சிங்கள பௌத்த தொல்பொருள் சின்னங்களை அழித்து இன முரண்பாடுகளை ஏற்படுத்தும் திட்டமிட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றது என பொது எதிரணி உறுப்பினர் தினேஷ் குணவர்தன குற்றம் சுமத்தினார். எனினும் வடக்கில் பௌத்த தொல்பொருள் சின்னங்களை அழிக்கும் எந்த நடவடிக்கைளும் இடம்பெறவில்லை எனவும் சிங்கள பகுதியிலேயே அதிகளவான பௌத்த தொல்பொருள் சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிறேரோ சபையில் அறிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை  27/2  இல் ...

Read More »