செய்திகள்

கிளிநொச்சியில் புதிய நீதி மன்றக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

court 03

கிளிநொச்சி மாவட்டத்தில் புதிய நீதி மன்றக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று 03-09-2018  காலை ஒன்பது முப்பது மணிக்கு இடம்பெற்றுள்ளது. பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் மற்றும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசிரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரல பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், மற்றும் நீதிபதிகள்  சட்டத்தரணிகள் ஆகியோர் கலந்துகொண்டு  அடிக்கல்லினை நாட்டி வைத்தனர் நீதி அமைச்சின் 4500 இலட்சம் ரூபா செலவில் மூன்று மாடிகளை கொண்ட புதிய நீதி மன்றக் கட்டடத்  தொகுதிக்கே அடிக்கல் நாட்டப்பட்டது.  நீதவான் நீதின்றம், , ...

Read More »

ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது -லதா அத்துகொரல

imageproxy

அனைத்து பிரஜைகளுக்கும் சுதந்திரமாக உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகொரல தெரிவித்துள்ளார். அண்மையில் சிறைச்சாலையில் கைதிகள் சிலர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது இவ்வாறான சுதந்திரம் இருக்கவில்லை எனவும் ஆர்ப்பாட்டங்களின் போது கைதிகள் கொலை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 5 ஆம் திகதி கொழும்பில் ஏற்பாடு செய்துள்ள அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணிக்கு எவ்வித எதிர்ப்பையும் காட்டுதில்லை எனவும் அதற்காக பூரண சுதந்திரம் ...

Read More »

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து எங்களை விரட்டி விட்டார்கள்

mahindablamarjunafamily

மக்கள் சக்தி ஆர்ப்பாட்ட பேரணி தற்போதைய அரசாங்கத்தை விரட்டுவதற்கான முதல் கட்ட நடவடிக்கை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (02) நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 67 ஆவது ஆண்டு நிறைவு இன்றாகும் எனவும் தான் கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வலுவானது எமது ஆட்சிக்காலத்திலேயே எனவும் அவ்வாறு வலுவான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையே தற்போதைய நிர்வாகிகளிடம் ஒப்படைத்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தங்களை ஸ்ரீலங்கா ...

Read More »

பொருளாதார அபிவிருத்தியை கோரியவர்களை துரோகி என்றவர்கள் அவர்களுடன் கூட்டு வைத்துள்ளனர் – சிவி

imageproxy

பொருளாதார அபிவிருத்தியை கோரிய சில தமிழ்க் கட்சித் தலைவர்களை துரோகி என்று அடையாளப்படுத்தியவர்கள்  உள்ளுராட்சி மன்றங்கள்பலவற்றில் அவர்களுடன் கூட்டுவைத்துள்ளனர்.பொருளாதார விருத்தியே எமக்குத் தற்போது வேண்டும் என்ற கருத்திருந்திருந்தால் நாங்கள் மற்றவர்கள் அரசாங்கத்தின் ஊடாகப் பொருளாதார விருத்தியைப் பெறுவதை தடை செய்திருக்கக்கூடாது. துரோகிகள் என்று அவர்களை அடையாளப்படுத்தியிருக்கக்கூடாது. என வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளர்  அவரின் வாராந்த கேள்விகளுக்கான பதிலில் இதனை குறிப்பிட்டுள்ளார் இவ்வார கேள்விகளும் பதில்களும் 1. கேள்வி – நீங்கள் கௌரவ சம்பந்தன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் கோரப்பட்டதற்கு மாறாக ...

Read More »

பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – திகாம்பரம்

Thigamparam

எதிர்வரும் 23 ஆம் திகதி பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை தொழிலாளர் தேசிய சங்கம் முன்னெடுக்க போவதாக சங்கத்தின் தவைரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். அட்டன் டி.கே.டபிள்யூ. கலாசார  மண்டபத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்ட தலைவர் மற்றும் தலைவிகளுக்கு கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் விளக்கமளிக்கும் நிகழ்வில் இன்று கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அமைச்சர் அங்கு மேலும் உரையாற்றிய அவர், தொழிலாளர்களின் உழைப்பினால் தோட்ட நிர்வாகிகள் மாதாந்தம் ...

Read More »

வாழைச்சேனை கடதாசி ஆலையை மீள ஆரம்பியுங்கள்

va1

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையை உடனடியாக மீள ஆரம்பித்து தொழில் வாய்ப்பிளை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான செயலணியில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்த அவர், வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தோணிதாட்டமடு பகுதியில் மக்களின் 14 வீடுகளை இராணுவம் ஆக்கிரமித்து இராணுவ முகாம் அமைத்துள்ளது. எனவே இராணுவத்தை அகற்றி உரிய ...

Read More »

எமக்கு உயிர் வாழ தண்ணீர் இல்லை உமக்கு வியாபாரத்திற்கு வேண்டுமா!

D8C15580-3E54-484B-9D40-FEDDA68CE472

மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேசத்துக்குட்பட்ட பெரியபுல்லுமலையில் மக்களின் எதிர்ப்பினையும் மீறி அமைக்கப்படுகின்ற போத்தலில் அடைக்கப்படும் குடிநீர்த் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதனை தடுக்கக் கோரியும் செப்டம்பர் 7ம் திகதி கடை அடைப்பிற்கு தயார் ஆகவேண்டும், என “முற்போக்கு தமிழர் அமைப்பு” வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்  இது ஒரு குறித்த சமூகத்திற்கான போராட்டம் இல்லை இது ஒட்டுமொத்த சமூகத்திற்கான போராட்டம் சகல பேதங்களுக்காப்பால் ஒன்று சேர்வோம். எனவும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்  சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் கூறியிருக்கிறார். போத்தலில் அடைக்கப்படும் குடிநீர் தொழிற்சாலை ஆரம்பிக்கும் நடவடிக்கைகளை ...

Read More »

நாளை யாழில் வரவு செலவு திட்டத்திற்கான பொது மக்களின் கருத்துக்கள் பெறப்படுகிறது

8d8035a28add9b3698c56f11089158e3_XL

அரச நிதி தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழு 2019 வரவுசெலவுத் திட்டத்திற்கான பொதுமக்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்பொழுது ஆரம்பமாகியுள்ளன. பாராளுமன்ற அமர்வைப்போன்று இது இடம்பெறுகிறது என்று தெரிவுக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதற்கமைய கண்டி மாவட்ட செயலகத்தில் இன்று மக்களின் கருத்துக்களைப் பெறும் பணிகள் ஆரம்பமாகின. இதில் தெரிவுக் குழுவின் தலைவர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அரச நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் 18 உறுப்பினர்களின் பங்களிப்புடன்; கருத்துக்களும் ஆலோசனைகளும் பெறப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக நாளை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ...

Read More »

அரசியல் கட்சி தலைவர்களை நாளை மறுதினம் சந்திக்கிறார் பிரதமர்

ranil

எல்லை நிர்ணய மீளாய்வு குழுவின் தீர்மானங்களை கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்தரையாடி மாகாண சபை தேர்தல் குறித்து தீர்மானம் எடுக்கப்பட உள்ளது. இதற்கு அமைவாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க செவ்வாய்கிழமை கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளார். இதன்போது எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பாக நியமிக்கப்பட்ட மீளாய்வு குழுவின் தீர்மானங்களை கட்சி தலைவர்களுக்கு விளக்கமளித்து ஆதரவினை பெற்றுக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read More »

ஐ.நா. சிறப்பு நிபுணர் நாளை வரு­கின்றார்

90un

ஐக்­கிய நாடுகள் சபையின் வெளி­நாட்டுக் கடன் மற்றும் மனித உரி­மைகள் தொடர்­பான சிறப்பு நிபுணர் ஜூவான் பப்லோ பொகோஸ்­லாவ்ஸ்கி நாளை திங்­கட்­கி­ழமை இலங்கை வரு­கின்றார். எதிர்­வரும்11 ஆம் திகதி செவ்­வாய்­க்கி­ழமை வரை நாட்டில் தங்­கி­யி­ருக்கும் அவர் ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் உள்­ளிட்ட அர­சாங்­கத்தின் பிர­தி­நி­திகள் சிவில் சமூ­கத்­தினர் என பல தரப்­பி­ன­ரையும் சந்­தித்து கலந்­து­ரை­யாட உள்ளார். மனித உரி­மைகள் நிலைப்­பாட்­டி­லி­ருந்து இலங்­கையின் பொரு­ளா­தாரம் மற்றும் நாட்டின் கடன் உள்­ளிட்ட விட­யங்­களை முழு­மை­யாக ஆராய்ந்து அதன் அறிக்­கை­யினை எதிர்­வரும் மார்ச் மாதத்தில் ஐக்­கிய நாடுகள் மனித ...

Read More »