செய்திகள்

வடக்கின் அபிருத்திக்கு நிதியுதவி வழங்க அவுஸ்திரேலியா தீர்மானம்

DSC_0054-720x450

வட மாகாணத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதியுதவியினை இலங்கை அரசுக்கு வழங்குவதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக அவுஸ்திரேலிய நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ப்ரைஸ் ஹட்ச்சனை  தெரிவித்துள்ளார். வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயை, சுண்டுக்குளி பகுதியில் அமைந்துள்ள ஆளுநரின் செயலகத்தில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் சந்தித்து கலந்துரையாடியே போதே இதனை தெரிவித்த அவர், இலங்கையில் யுத்தத்தின் பின்னர் வட மாகாண மக்களின் தேவைகள் தொடர்பாகவும் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் சம்பந்தமாகவும் ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார். அத்துடன் வடமாகாணத்தில் மீன்பிடி மற்றும் ...

Read More »

கிளிநொச்சியின் குழாய் வழி குடிநீர் தரமற்றது – பொது மக்கள் குற்றச்சாட்டு

water

கிளிநொச்சியின் குழாய் வழி குடிநீர் தரமற்றது – பொது மக்கள் குற்றச்சாட்டு கிளிநொச்சி நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்ற குடிநீர்  குடிப்பதற்கு உகந்த சுத்தமான நீர் அல்ல எனவும்,  ஒரு வித நிறத்துடன் காணப்படுகிறது என்றும் பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். குழாய் வழி ஊடாக தங்களுது வீடுகளுக்கு விநியோகிக்கப்புடுகின்ற நீரை போத்தல்களில் பெற்று அதனை கிணற்றில் இருந்து   பெறப்படுகின்ற நீருடன் ஓப்பிடும போது வேறுபாடு அப்பட்டமாக தெரிகிறது. இது குடிப்பதற்கு  உகந்த நீர் அல்ல எனவும்  பொது மக்கள் ...

Read More »

சிறைச்சாலை கூரை மீது ஏறி கைதி ஒருவர் போராட்டம்

Prisioner-Protest-batticalao

மட்டக்களப்பு சிறைச்சாலை கூரை மீது ஏறி கைதி ஒருவர் தன்னை விடுதலை செய்யக்கோரி இன்று  மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார் திருகோணலையைச் சேர்ந்த 21 வயதுடைய  யோகராசா லக்ஷான் என்ற கைதி வாகரை பிரதேசத்தில் 15 வயது சிறுமியை பலாத்தகாரம் செய்தமை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு அவருக்கு 6 மாதகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார் இந்த நிலையில் குறித்த கைதி தன்னை பிணையில் விடுவிக்கவேண்டும் என கோரி இன்று மாலை 4 மணியளவில்  சிறைச்சாலை கூரை மீது ...

Read More »

புதிய இராஜதந்திரிகள் நால்வர் தமது நற்சான்று பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளிப்பு

sri

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகள் நால்வர் இன்று முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவிடம் தமது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர் சுவிட்சர்லாந்து, கௌதமாலா ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்களும், மலேசியா, சாம்பியா நாடுகளின் உயர்ஸ்தானிகர்களுமே இவ்வாறு புதிதாக நியமனம் பெற்று வருகை தந்துள்ளனர். அவர்களின் பெயர்கள் விபரங்கள் பின்வருமாறு, 01. ஹேன்ஸ்பீட்டர் மோக் – சுவிட்சர்லாந்தின் தூதவர். 02. கியோவானி ரெனெ கஸ்டில்லோ – குவாதமாலா தூதர். 03. டான் யங் தாய் – மலேசிய உயர்ஸ்தானிகர். 04 ...

Read More »

ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு உறுதியாக உள்ளது- அமைச்சர் ஜெயக்குமார்

jayakumar__12379

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு தமிழர்களையும் விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு உறுதியாகவுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இந்திய உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு குறித்து  செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே  ஜெயக்குமார் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு உறுதியாகவுள்ளது  உச்சநீதிமன்றின் தீர்ப்பின் விபரம் கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். இதேவேளை உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை திமுக தலைவர் முக ஸ்டாலின் வரவேற்றுள்ளார். ஏழு ...

Read More »

மயிலிட்டி மகா வித்தியாலயம் விடுவிக்கப்பட்டுள்ளது

1536222728-jaf-school-3

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய உத்தரவாதத்திற்கு அமைவாக 30 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இராணுவ ஆழுகைக்குள் இருந்த மயிலிட்டி மகா வித்தியாலயம் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் மயிலிட்ட துறைமுகம் புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்காக யாழ். வந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் அகப்பட்டிருக்கும் மயிலிட்டி மகா வித்தியலயத்தை உடனடியாக விடுவிக்குமாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதிலளித்த ஜனாதிபதி இராணுவ தளபதிகளுடன் உரையாடி மயிலிட்டி மகா வித்தியாலயத்தை 2 வாரங்களுக்குள் விடுவிப்பேன் எனவும், ...

Read More »

அனைத்து பிரச்சினைகளையும் எதிர்கொண்டு நாடு முன்னோக்கி பயணிக்கின்றது

ranil-1

இன்று தாமரை மொட்டுவின் மக்கள் சக்தியோ ஊடகங்கள் உருவாக்கிய போலி சக்தியோ தற்போது எஞ்சியில்லை என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் 72ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டமே தற்போது எஞ்சியுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று காலை நடைபெற்ற அந்தக் கட்சியின் 72ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்ட வைபவத்தில் பிரதமர் உரையாற்றினார். இதன்போதே அவர் இதனைக் கூறினார். நாம் 2015ஆம் ஆண்டில் அதிகாரத்தை கைப்பற்றினோம். தேசிய அரசாங்கம் என்ற ரீதயில் மக்களின் அங்கீகாரத்துடன் நாம் தெரிவானோம். தற்பொழுது ...

Read More »

ஆட்சிக் கவிழ்ப்பு போராட்டத்தின் அடுத்தக்கட்டம் கண்டியில்

namal-rajapaksa-1101

ஆட்சிக் கவிழ்ப்பு போராட்டத்தின் இரண்டாவது கட்டம் கண்டியில் நடைபெற உள்ளதாகவும், இந்த போராட்டம் தொடர்பான தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற போராட்டம் வெற்றிப்பெற்றுள்ளதாக அறிவித்துள்ள ஒன்றிணைந்த எதிரணியினர், அமைதியாக நேற்று தாம் மேற்கொண்டிருந்த போராட்டத்தில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் கலந்துக்கொண்டிருந்தாகவும், இலங்கையின் போராட்ட வரலாற்றில் 12 மணித்தியாலங்கள் நடைபெற்ற முதலாவது மாபெரும் போராாட்டம் இது எனவும் தெரிவித்துள்ளது. பத்தரமுல்லை – நெளும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

Read More »

இலங்கைக்கு உதவி வழங்கும் சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் – ஜனாதிபதி சந்திப்பு

feec6f659523f58334c4f28766b433fb_XL

அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க நோக்கங்களை வெற்றிகொள்வதற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக இலங்கைக்கு அபிவிருத்தி உதவிகளை வழங்கிவரும் சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதிக்கும் மேற்படி நிறுவன பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று (05) இரவு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றபோதே அவர்கள் இதனை தெரிவித்தனர்.   ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஜருளுயுஐனுஸ, சர்வதேச நாணய நிதியம், சர்வதேச அபிவிருதிக்கான ஐக்கிய அமெரிக்க உதவி நிறுவனம், கொரிய ...

Read More »

படுகாயமடைந்தவரும் உயிரிழப்பு, இறந்த இருவரின் மனைவிமாரும் கர்ப்பிணிகள்

31050cb467fed79bbb9f0da905573c38

மாங்குளம் பகுதியில் மிதி வெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டுக்கொண்டிந்த போது குண்டு வெடித்ததில் படுகாயமடைந்தவரும் இன்று(05) பிற்பகல் உயிரிழந்துள்ளார். கடந்த மூன்றாம் திகதி  மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணியின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த வவுனியா ஓமந்தையைச் சேர்ந்த இராஜேந்திரன் நிதர்சன் (28) என்வரும் உயிரிழந்துள்ளார். வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அதிதீவிர சிகிசைப் பிரிவில் சிகிசைப்பெற்று வந்த நிலையில் இன்று(05) மாலை நான்கு மணியளவில் சிகிசை பலனின்றி  உயிரிழந்துள்ளார். இதேவேளை நேற்றையதினம்(04)  இவரின் கர்ப்பிணியான மனைவி நஞ்சருந்தி  தற்கொலைக்கு முயன்ற போது உறவினர்களால் காப்பாற்றப்பட்டு ...

Read More »